மாணவர்க்கான சத்தியசாயி நித்திலக் கோவை – பகவான் பாபா

.

21. சனாதன தருமம்

இன்று ‘வெறுப்பு’ என்னும் கடும்புயலும், ‘பொய்மை’யும், தர்மம் (அறம்), நியாயம், சத்தியம்(உண்மை) என்னும் மேகங்களைச் சிதறடித்து வானத்தின் தொலைது}ர மூலை முடுக்குகளில் கொண்டு போய்ச் சேர்த்து விட்டன. சனதான தர்மம் (என்றும் அழியா நிலைத்த அறம்) என்பது மறைந்து போகும் அபாயத்தில் இருப்பதாக மக்கள் உணர்கின்றனர். ஆனால் தலைவராம் இறைவன் நினைத்தால் மட்டுமே அது நடக்கும். எந்தத் தலைவராம் இறiவா இந்த அறத்தினை (தருமத்தை) உலகில் கொண்டுவந்து வைத்தாரோ, அவர் இதனை அழியும்படி விடமாட்டார்! எங்கெல்லாம் சத்தியம், அறம், சாந்தி, பிரேமை (அதாவது வாய்மை, அறம், அமைதி, அன்பு) வலியுறுத்துப் படுகின்றனவோ, அவை எந்த மதத்தில் இருந்தாலும் சரி, அல்லது எந்த மொழியில் இருந்தாலும் சரி, அவை எந்தப் பேராசான் (குரு) மூலமாக வந்தாலும் சரி, அந்தப் பேராசான் எங்கிருந்தாலும் சரியே, அங்கே நாம் சனாதன தருமம் இருப்பதை உணரலாம்!22. மாணவிகள் சகோதரிகள்

உங்கள் பள்ளியில் சில பெண்களும் அதாவது மாணவிகளுங்கூட இருப்பதை நான் கவனித்தேன். அவர்களைப் பெரும் மரியாதையோடு, கண்ணியமாக நீங்கள் நடத்த வேண்டும். அவர்களைப் பற்றி இலேசாகப் பேசவேண்டாம். அவர்கள் உங்களின் சகோதரிகள். உடன்பிறவா உடன் பிறப்புகள். அவர்களைக் கண்ணியமாக நடத்துவதன் மூலம், நீங்கள் உங்களையும் உங்கள் சகோதரிகளையும் கண்ணியமானவாகளாக ஆக்கிக் கொள்கின்றீர்கள். பெண்கள் மரியாதையுடன் நடத்துவது என்பது உண்மையான பண்பாட்டின் ஓர் அடையாளம் ஆகும்!

23. இறைவனின் இருப்பு

நீங்கள் ஆச்சரியப்படலாம்! சந்தேகங்கூடப்படலாம்! தலைவராம் இறைவனுக்கு ஓவ்வொரு உயிரினுள்ளும் இருப்பது என்பது எப்படிச் சாத்தியமாகும்? என ஆனால், நீங்கள், தனி ஒரு மாங்கொட்டையானது (அதாவது மாவிதையானது) ஒரு மரமாக வளர்ந்து ஆயிரக்கணக்கான பழங்களைக் கொடுப்பதனைப் பார்க்கவில்லையா? அப்பழங்கள் ஒவ்வொன்றின் உள்ளும் ஒரு விதை இருப்பதனை நாம் காண்கின்றோம் அல்லவா? அதனுள் ஒரு விதை, முதன்முதலில் நாம் நட்டு வைத்தது போன்ற ஒரு ‘மாவிதை’ இருப்பதைப் பார்க்கவில்லையா? அதே போலத்தான், ஓரே தலைவராம் இறைவன், அவரின் திருநினைவால் படைக்கப்பட்ட ஒவ்வொன்றினுள்ளும் இருப்பதனைக் காணமுடியும்!

24. பக்தி

தலைவராம் இறைவனை நோக்கிச் செல்லும் அன்பே ‘பக்தி’ என அழைக்கப்படுகின்றது. இதுதான் நம் குறிக்கோளை - இலக்கினை – அடைவதற்கான எல்லா வழிகளிலும் மிக எளிய வழி!

25. அன்பே கடவுள்

நம்புங்கள் அன்பே கடவுள். உண்மையே கடவுள். அன்புதான் உண்மை. உண்மைதான் அன்பு. அச்சம் என்பது பொய்மையின் தாய் ஆகும். அச்சமே (பயமோ) உங்களிடம் இல்லை என்கின்ற போது நீங்கள் உண்மையைத் தவறாது பின்பற்றுவீர்கள்!

No comments: