என் பார்வையில் -மஷூக் ரஹ்மான்


.
நான் ஒரு ஆசிரியன். ஆசிரியர்களைச் சந்திப்பது மாணவப் பருவத்திலிருந்தே எல்லோர்க்கும் ஏற்படும் அனுபவம்தான். என் பார்வையில் ஆசிரியர்கள்இ அன்றைய மற்றும் இன்றைய ஆசிரியர் – மாணவர் உறவு பற்றி இக்கட்டுரையில் காண்போம்.
பள்ளியில் படித்த காலத்தில் ஆசிரியர் என்றாலே எனக்கும் எல்லோரும் போல பயம் அதிகம்.
இப்போது இந்த பயத்தின் காரணத்தை ஆய்ந்தால் ஒரு விஷயம் புரிகிறது. அதாவது ஆசிரியர்கள் அந்நியர்களாக பாவிக்கப்பட்டது . நான் கண்ட ஆசிரியர்கள் பெரும்பாலும் தங்களை முழுமையாக வெளிப்படுத்திக் கொண்டதில்லை. பலர் வகுப்பறையில் நுழைந்ததுமே மிரட்டுவதும் திட்டுவதும் அடிப்பதுமாக தங்களின் முரட்டுத்தனத்தால் தங்களை அடையாளப் படுத்திக் கொள்வதோடு அல்லாமல் தங்களின் எந்த செயலையும் நியாயப் படுத்துபவர்களாக இருந்தனர்.
இளம் பிராயம் என்பது கேள்விகள்இ ஐயங்கள் நிறைந்த பருவம்தானே! குழந்தைகளின் கேள்விக்கு எப்படி பதில் அளிப்பது என்ற சிந்தனையே இல்லாமல்இ கேள்வி கேட்கும் திறனை முளையிலேயே கிள்ளி விடும் பாதகச் செயலில் ஈடுபடுவர். இது போன்றோர் இன்றும் இருக்கின்றனர் என்பதும் மறுப்பதற்கில்லை.
அடுத்தபடியாகஇ கனிவான உள்ளம் கொண்ட ஆசிரியர்களும் உண்டு. அப்படிப் பட்ட இருவரால்தான் இன்று நானும் ஒரு ஆசிரியனாக உருவாகியுள்ளேன். கனிவான ஆசிரியர்கள் என்று சொன்னால்… கண்டிப்பு இல்லாதவர்கள் என்ற பொருளில்லை. அவர்களும் திட்டுவார்கள்இ அடிப்பார்கள். ஆனால் நம் வயதிற்கும் அறிவிற்கும் பொருந்தும் வகையில் அதற்கான விளக்கமும் அளிப்பார்கள். அந்த விளக்கங்களினால் பிறக்கும் தெளிவே உண்மையான ஒழுக்கத்திற்கு வழி வகுக்கும்.
இன்றைய ஆசிரியர் – மாணவர் உறவு பற்றி இப்போது பார்ப்போம்.
மனம் போன போக்கில் மாணவர்களுடன் பழகுவது…குறிப்பாக பள்ளி இறுதியில் இருக்கும் மாணவர்களுடன் இளம் வயது ஆசிரியர்கள் (இருபாலரும்) பழகும் முறையில் அதீத மாற்றம் அதே போல கல்லூரிகள் பெருகிவிட்டதனால் இளம் வயது பேராசிரியர்களும் பெருகிவிட்டனர். மாணவர்களோடு தங்களை ஐக்கியப் படுத்திக் கொள்ளவும் அடையாளப் படுத்திக் கொள்ளவும் விரும்பும் சிலர் அந்த மாணவர்களுக்கு பண்புகளைச் சொல்லிக் கொடுக்கத் தவறுகின்றனர்.
இளம் வயது ஆசிரியர்கள் ஒருபுறம் ளுழடயைடளைந பண்ணிக் கொள்வதாக நினைத்து தங்கள் தொழில் தர்மத்தை கைவிடுவது போல… மூத்த ஆசிரியர்களும் அடுத்த தலைமுறைக்கான வழிகாட்டிகளாகும் முயற்சியை விடுத்து சோற்று மூட்டைகளாகிக் கொண்டிருக்கின்றனர்.
மறுபுறம் ஆசிரியர்களைப் பற்றிய மாணவர்களின் எண்ணங்கள் வெகுவாகச் சீர்குலைந்து விட்டன. மேற்சொன்ன தவறான ஆசிரியர்களை பரிகசிக்கும மாணவர்கள் நல்ல ஆசிரியர்களை அடையாளம் கண்டு கொள்வதும் அவசியம். இன்னும் ஆசிரியர்களிடம் அதிக நெருக்கம் ஏற்படுத்திக் கொண்டால் நாம் எதுவும் செய்யலாம் என்ற மனோபாவமும் மிகவும் தவறானதே. கற்பதில் எளிமையான வழிகளைத் தேடலாம். கற்பிப்பவர்களை மரியாதை குறைவாக நடத்துவது எந்த விதத்திலும் ஒப்புக் கொள்ள முடியாததாகும்.
இறுதியாக… அவரவர் எல்லையில் நின்று மரியாதையுடன் பழகி வந்தால் ஆசிரிய – மாணவர் உறவு மிகுந்த மதிப்பிற்குரியதாக மீண்டும் மாறும். இந்த மாற்றத்தின் விதையாக இருக்க வேண்டியது ஆசிரியர்களின் கடமையே, மேலும் மன முதிர்ச்சி என்பது ஆசிரியர்களின் அரிய பண்பாகும். அதனை வளர்த்துக் கொள்வதும் இன்றைய சூழலில் மிக மிக மிக முக்கியமாகும்

No comments: