தமிழ் சினிமா

.
*ராணாவில் ரஜினியின் வாள் சண்டை!


*சிங்கம் புலி

சென்னை, மார்ச் 7 (டிஎன்எஸ்) படத்தின் முக்கியமான அம்சம் ஜீவா முதன் முறையாக இரட்டை வேடத்தில் நடித்திருப்பது. அதைவிட முக்கியமான (மோசமான) அம்சம் படத்தில் இடம்பெறும் இரட்டை அர்த்த வசனங்களும், காட்சிகளும். விரும்பும் பெண்களையெல்லாம் தன் மன்மத விளையாட்டுக்கு ஈர்த்துகொள்ளும் அடப்பாவி! ஜீவாவும், எங்கு தப்பு நடந்தாலும் அதை தட்டி கேட்கும் ஆக்ரோஷ ஜீவாவும் அண்ணன்-தம்பி. வீட்டில் கெட்டபெயர் எடுத்தாலும் வெளியே நல்ல பெயர் வாங்குகிறார் அண்ணன் ஜீவா.



வீட்டில் நல்லபெயரை எடுத்து விட்டு வெளியே பெண்களிடம் தன் மன்மத லீலையை வெளிப்படுத்திக் கொண்டிருக்கும் தம்பி ஜீவாவினால் ஏமாற்றம் அடைந்து உயிரை விடுகிறார் செளந்தர்யா. இந்த கொலைக்கு காரணமான தம்பி ஜீவாவை, அண்ணன் ஜீவா நீதிமன்ற கூண்டில் ஏற்ற, அதில் இருந்து தப்பிக்கும் தம்பி ஜீவா, அண்ணனிடம் நல்லவன்போல் நடித்து அவரையே கொலை செய்ய சதித்திட்டம் தீட்டுகிறார்.

இந்த திட்டத்தில் உயிரை விட்டது அண்ணனா? அல்லது தம்பியா? என்பதுதான் சிங்கம் புலியின் முடிவு. கசங்கி போன சட்டையை போட்டுக்கொண்டிருந்தால் அது அண்ணன். ஸ்டைலாக இருந்தால் அது தம்பி என்ற சாதாரண வேற்றுமைதான் இரண்டு ஜீவாக்களுக்குமிடையே. (அதற்காக முகத்தில் இருக்கும் சிறு தழும்பு கூட ஒன்றாகவா இருக்கும்.) எங்கு தப்பு நடந்தாலும் கோபப்பட்டு கொதித்தெழும் அண்ணன் ஜீவா, தன் அப்பாவிடம் அடிக்கடி அளவுக்கு மீறிய கோவத்தை ஏன்தான் காட்டுகிறாரோ. அண்ணன் இப்படி என்றால், தம்பியோ, காய்வாங்க வரும் ஆன்ட்டியில் இருந்து ரோந்துக்கு வரும் போலீஸ்வரை என பார்க்கும் பெண்களையெல்லாம் தன்பக்கம் ஈர்த்து மன்மத விளையாட்டை விளையாடுகிறார்.

மேல்மாடியில் அம்மாவுக்கும், கீழ் மாடியில் பெண்ணுக்கும் டாடா காட்ட, அதே நேரத்தில் கன்றுடன் செல்லும் ஒரு பசுவை ஒருவர் ஓட்டிச்செல்வதுபோன்ற காட்சியை காண்பித்து தன்னையும் ஒரு இயக்குநராக நிரூபித்துகொண்டிருக்கிறார் சாய்ரமணி. (இததான் இயக்குநர் டச் என்று சொல்வார்களோ! ரொம்ப கேவளமா இருகே) தமிழ் சினிமாவில் வெள்ளிவிழா கண்ட படங்களின் பழைய ஹீரோக்களின் கெட்டப்புகளை போட்டு நம்மை சிரிக்க வைக்கிறார் சந்தானம். அறிமுக நாயகி செளந்தர்யா அழகோ அழகு அப்படியொரு அழகு. நடிப்புக்கு கொஞ்சம் முக்கியத்துவம் கொடுத்தால் 2010ஆம் ஆண்டில் தமிழ் சினிமா ரசிகர்களின் கனவு கண்ணி லிஸ்டில் இடம்பிடிக்கலாம். மற்றொரு நாயகியான திவ்யா ஸ்பந்தனால், சாப்ட்வேர் கம்பெனியில் வேலை பார்த்தாலும், மீன் வெட்டும் அண்ணன் ஜீவாவை லவ்வுகிறார். அதற்கு ஒரு முக்கியமான காரணமும் உண்டு. அண்ணன் ஜீவாவை கொலைசெய்ய துரத்தும் கூட்டம், உருவ ஒற்றுமையால் யார் அண்ணன், யார் தம்பி என்று தெரியாமல் திணறுவது படத்திற்கு சிறிது சுவாரஸ்யத்தை சேர்த்திருக்கிறது. மற்றபடி தமிழ் சினிமாவில் வெளியான டபுள் ஆக்ஷன் படங்களின் பாணியே படம் முழுவதையும் ஆக்ரமித்துள்ளது. ஜெ.சுகுமார்
நன்றி தினக்குரல்



ராணாவில் ரஜினியின் வாள் சண்டை!



'ராணா'வில் ஏற்று நடிக்கப் போகும் 3 வேடங்களுக்காக தன்னைத் தயார்ப்படுத்தி வருகிறார் ரஜினிகாந்த். வரலாற்றுப் படம் என்பதால் ஒரு வேடத்தில் வாள்சண்டைக் காட்சியும் உண்டு. இக்காட்சி தத்ரூபமாக வரவேண்டும் என்பதற்காக வாள்சண்டைப் பயிற்சி எடுக்கிறாராம் ரஜினி. கடைசியாக 'அலாவுதீனும் அற்புத விளக்கும்' படத்தில் கமல்ஹாசனுடனும் 'அடுத்த வாரிசு' படத்தில் சி.எல்.ஆனந்தனுடனும் வாள்சண்டை செய்திருந்தார் ரஜினி.

'ராணா'வின் முதற்கட்டப் படப்பிடிப்பு ஏப்ரல் மாதம் லண்டனில் தொடங்குகிறது. தீபிகா படுகோன் மற்றும் ரேகா ஆகியோர் கதாநாயகிகளாக நடிக்கின்றனர்.
நன்றி வீரகேசரி

No comments: