தியாகச் சுடர் திலீபனுக்கு சிட்னி தமிழ் மக்கள் 25 ஞாயிறு மாலை அஞ்சலி.
அவுஸ்திரேலியாவில், சிட்னி ஹோம்புஸ் ஆண்கள் பாடசாலையில் அகவணக்கத்துடன் நிகழ்ச்சிகள் ஆரம்பமாகி தேசிய கீதம் இசைக்கப்பட்டு அவுஸ்திரேலியா நாட்டுக் கொடியினை திரு செல்லையா சிறிகரன் அவர்களும் தமிழீழத் தேசியக் கொடியை ஜனகன் சிவராமலிங்கம் அவர்களும் ஏற்றிவைத்தனர். பொதுச்சுடரை மாணிக்க விநாயகம் மனோகரன் அவர்கள் ஏற்றி வைத்தார்.


இதனைத் தொடர்ந்து ஹோம்புஸ் ஆண்கள் பாடசாலையில் தீயாகச் சுடர் லெப்டிணன் கேணல் திலீபனுக்கும், கேணல் சங்கருக்கும், தமிழ் நாட்டிலே சமீபத்தில் தீயில் தியாகமாகிய பெண்னரசி தோழர் செங்கொடிக்கும் தமிழ் மக்கள் மலர் தூவி அஞ்சலி செலுத்தும் நிகழ்வு மிகவும் உணர்வு புர்வமாக நடைபெற்றது.

எமது விடுதலைப் போராட்டத்திலே தமது இன்னுயிரை நீத்த மாவீரரையும் படுகொலை செய்யப்பட்ட அப்பாவிப் பொதுமக்களையும் நினைவு கூர்ந்து மாவீரன் டயஸ் கந்தாசாமியின் சகோதரர் மயில்வாகனம் தனபாலசிங்கம் அவர்கள் ஈகைச்சுடர் ஏற்றினர். அதனை தொடர்ந்து மக்கள் அகவணக்கம் செலுத்தினர்.

இதனைத் தொடர்ந்து “மலர்தூவ வாருங்கள் என்ற பாடல் ஒலிக்க திரு வாகீசன் ஐயா அவர்களின் தலைமையில் மக்கள் வரிசையாக நின்று தியாகதீபம் லெப் கேணல் திலீபனுக்கும் கேணல் சங்கருக்கும் செங்கொடியின் திருவுருவப் படங்களுக்கும் மலர் தூவி அஞ்சலி செலுத்தினார்கள்.

இதனைத் தொடர்ந்து அவுஸ்திரேலியா தமிழ்ச் சங்கத்தின் தலைவரும், தொப்புள்கொடி உறவினருமான திரு திருவெங்கடம் அவர்கள் தலைமையுரையை நிகழ்த்தினார். இதனைத் தொடர்ந்து திரு மனோகரன் அவர்கள் தியாகச் சுடர் திலீபன் பற்றிய உணர்வுபூர்வமான ஆக்கத்தை பகிர்ந்து கொண்டார.

தொடர்ந்து செல்வி ஆருதி குமணன்; இளையோர் சார்பில் ஆங்கிலத்திலே தியாகி திலீபன் பற்றி உரையாற்றினார். அடுத்ததாக பிரதம பேச்சாளர் மாயில்வாகனம் தனபாலசிங்கம் அவர்கள் “தமிழ்த் தேசியம்” என்னும் பொருளில் கருத்து மிக்க ஒரு செறிவான உரையை நிகழ்த்தினார்.

நிறைவாக எழுத்தாளர் மாத்தளை சோமு அவர்கள் நடுவராக பணியாற்ற சுவையான ஒரு பட்டிமன்றத்துடனும் கொடியிறக்கலுடனும் தியாகி திலீபனின் நினைவுகள் நெஞ்சில் நிலைக்க நிகழ்வு நிறைவு பெற்றது.No comments: