அறிவிப்பில்லா விடைபெறல் - ஆறுமுகம் முருகேசன்..


.

ஒரு இருள்சூழ்ந்த இரவில்
எஞ்சிப்போன
ஒரு கெட்ட சொப்பனம்தான்
இந்த துர்செய்தி.

அகாலத்தின் படிக்கட்டுகளிலிருந்து
மெல்ல ஊர்ந்து கொண்டிருக்கும்
அதன் சிவந்த கண்களில்
விடியலற்ற ஒரு பகல்

நகக்கண் அழுக்கைப்போல
துல்லியமாகத்
தன் இருப்பைத் தெரியப்படுத்துகிறது.

ஒரு மரணச்சம்பவத்தின்
அசை
இதனைக் குரூரமானதென்பதை
அவன்
இதற்குமுன் அறிந்திருக்கவில்லை.

ஒரு விடியலற்ற பகலுக்காகவே
விழித்திருக்கிறான்
அவன்.

nantri:athirvu

No comments: