பத்தாம் உலகக் கிண்ண கிரிக்கட் போட்டித் தொடரின் காலிறுதிச் சுற்று

1ம் காலிறுதிப் போட்டி பாகிஸ்தான் - மேற்கிந்திய தீவுகள்

2ம் காலிறுதிப் போட்டி இந்தியா – அவுஷ்திரேலியா


3ம் காலிறுதிப் போட்டி நியூசிலாந்து – தென் ஆபிரிக்க

4ம் காலிறுதிப் போட்டி இலங்கை – இங்கிலாந்து





1ம் காலிறுதிப் போட்டி பாகிஸ்தான் - மேற்கிந்திய தீவுகள்
அரையிறுதிக்கு பாகிஸ்தான் தகுதி

உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரின் அரையிறுதிப் போட்டிக்கு பாகிஸ்தான் அணி தகுதி பெற்றுள்ளது.

இன்று நடைபெற்ற காலிறுதிப் போட்டியில் மேற்கிந்தியத் தீவுகள் அணியை 10 விக்கெட்டுகளால் பாகிஸ்தான் அணி தோற்கடித்தது.

பங்களாதேஷின் மீர்பூர் நகரில் நடைபெற்ற காலிறுதிப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய மேற்கிந்திய அணி 43.3 ஓவர்களில் 112 ஓட்டங்களுடன் சகல விக்கெட்டுகளையும் இழந்தமை குறிப்பிடத்தக்கது. சிவ்நாரின் சந்தர்போல் ஆட்டமிழக்காமல் 44 ஓட்டங்களைப் பெற்றார்.

பாகிஸ்தான் அணித்தலைவர் சஹீட் அவ்ரிடி 30 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

பதிலுக்குத் துடுப்பெடுத்தாடிய பாகிஸ்தான் அணி 20.5 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி வெற்றி இலக்கை அடைந்தது. கம்ரன் அக்மல் ஆட்டமிழக்காமல் 47 ஓட்டங்களையும் மொஹமட் ஹாபிஸ் ஆட்டமிழக்காமல் 61 ஓட்டங்களையும் பெற்றனர்.

மொஹமட் ஹாபிஸ் இப்போட்டியின் சிறப்பாட்டக்காரராகத் தெரிவானார்.


2ம் காலிறுதிப் போட்டி இந்தியா – அவுஷ்திரேலியா
இந்தியா அரையிறுதிக்கு தகுதி


உலககோப்பை கிரிக்கெட் கால் இறுதி  ஆமதாபாத்தில் நடைற்றது, 2-வது ஆட்டத்தில் இந்தியா-ஆஸ்திரேலியா அணிகள் மோதின.

இந்த போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி முதலில் பேட்டிங் செய்ய தீர்மானித்தது. அதன் படி தொடக்க வீரர்களாக வாட்சன், ஹாடின் களம் இறங்கினர்.

இருவரும் முதலிலே அதிரடியாக விளையாடி வந்தனர். அஸ்வின் வீசிய 10-வது ஓவரில் வாட்சன் 25 ரன் அடித்திருந்தபோது போல்டு ஆனார். அப்போது ஸ்கோர் 40 ரன்னாக இருந்தது. அதன் பின் வந்த கேப்டன் பாண்டிங் பொறுப்புடன் விளையாடி வந்தார் 18 ஓவர்கள் முடிந்த நிலையில் ஆஸ்திரேலியா 1 விக்கெட்டை இழந்து 86 ரன் எடுத்திருந்தது மறுமுனையில் அதிரடியாக விளையாடி வந்த ஹாடின் 50 ரன்னை தொட்டார்.

23-வது ஓவரை யுவராஜ் சிங் வீசினார் அந்த ஓவரில் கடைசி பந்தில் ஹாடின் ரெய்னாவிடம் கேட்ச் கொடுத்து ஆட்டம் இழந்தார். அடுத்து வந்த கிளார்க், கேப்டன் பாண்டிங்குடன் ஜோடி சேர்ந்து விளையாடி வந்தார். இந்த ஜோடி ஒரளவுக்கு நிலைத்து நின்று விளையாடியது. 31-வது ஓவரில் கிளார்க் 8 ரன் அடித்திருந்த போது கேட்ச் ஆனார்.

அதன் பின் வந்த ஹஸ்சி 3 ரன்னில் ஆட்டம் இழந்தார். எதிர்முனையில் பொறுப்புடன் விளையாடி பாண்டிங் அரை சதம் அடித்தார். ஹஸ்சி அவுட்டை தொடர்ந்து ஒயிட்டும் 12 ரன் எடுத்து பெவுலியன் திரும்பினார்.

அப்போது ஸ்கோர் 5 விக்கெட்டுக்கு 190 ரன்னாக இருந்தது. பின்னர் வந்த டேவிட் ஹஸ்சி அடித்து விளையாடி வந்தார். மறுபுறம் பாண்டிங் பொறுப்புடன் விளையாடி சதம் அடித்தார். சதம் அடித்த சிறிது நேரத்தில் 104 ரன்கள் அடித்திருந்தபோது கேட்ச் கொடுத்து அவுட் ஆனார். இதில் 7 பவுண்டரியும் 1 சிக்சரும் அடங்கும். இறுதியாக ஆஸ்திரேலிய அணி 50 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டை இழந்து 260 ரன்கள் எடுத்தது.

பின்னர் களமிறங்கிய இந்திய அணி 47.4 ஓவரில் 5 விக்கெட் இழப்பிற்கு 261 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது. அதிகபட்சமாக யுவராஜ் சிங் 57 ரன்களும் டெண்டுல்கர் 53 ரன்களும் எடுத்திருந்தனர். இதையடுத்து அரையிறுதிக்கு தகுதி பெற்ற இந்திய அணி பாகிஸ்தான் அணியுடன் மோத உள்ளது

3ம்  காலிறுதிப் போட்டி நியூசிலாந்து – தென் ஆபிரிக்கா
நியூஸிலாந்து அரையிறுதிக்குத் தகுதி

உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரின் அரையிறுதிப் போட்டிக்கு நியூஸிலாந்து அணி தெரிவாகியுள்ளது. காலிறுதிப் போட்டியில் தென்னாபிரிக்க அணியை 49 ஓட்டங்களால் தோற்கடித்ததன் மூலம் நியூஸிலாந்து அரையிறுதிக்கு தெரிவாகியது.

பங்களாதேஷின் மீர்பூர் நகரில் நடைபெற்ற காலிறுதிப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய நியூஸிலாந்து அணி 50 ஓவர்களில் 8 விக்கெட் இழப்பிற்கு 221 ஓட்டங்களைப் பெற்றது.

பதிலுக்குத் துடுப்பெடுத்தாடிய தென்னாபிரிக்க அணி 43.2 ஓவர்களில் 172 ஓட்டங்களுடன் சகல விக்கெட்டுகளையும் இழந்தது.

ஜெஸி ரைடர் 83 ஓட்டங்களைப் பெற்றார். தென்னாபிரிக்க பந்துவீச்சாளர்களில் மோர்ன் மோர்கெல் 46 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

பதிலுக்குத் துடுப்பெடுத்தாடிய தென்னாபிரிக்க அணி 43.2 ஓவர்களில் 172 ஓட்டங்களுடன் சகல விக்கெட்டுகளையும் இழந்தது.

அவ்வணியின் சார்பில் ஆகக் கூடுதலாக ஜக் கலிஸ் 47 ஓட்டங்களைப் பெற்றார். அவ்வணியின் நான்கு வீரர்கள் மாத்திரமே 10 இற்கு மேற்பட்ட ஓட்டங்களைப் பெற்றனர்.

நியூஸிலாந்து பந்துவீச்சாளர்களில் ஜேக்கப் ஒராம் 39 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார். நேதன் மெக்கலம் 24 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.
இலங்கை  அணியுடன் நியூஸிலாந்து அணி அரையிறுதியில் மோதவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

4ம்  காலிறுதிப் போட்டி இலங்கை – இங்கிலாந்து
இலங்கை அரையிறுதிக்கு தகுதி

உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரின் காலிறுதிப் போட்டியில் இங்கிலாந்து அணியை 10 விக்கெட்டுகளால் தோற்கடித்த இலங்கை அணி அரையிறுதிப் போட்டிக்கு தெரிவாகியுள்ளது.

இலங்கை - இங்கிலாந்து அணிகளுக்கிடையிலான காலிறுதிப் போட்டி கொழும்பு ஆர்.பிரேமதாஸ அரங்கில்  நடைபெற்றது.

இப்போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடத் தீர்மானித்த இங்கிலாந்து அணி 50 ஓவர்களில் 6 விக்கெட் இழப்பிற்கு 229 ஓட்டங்களைப் பெற்றது.

ஜொனதன் ட்ரொட் 86 ஓட்டங்களையும் மோர்கன் 50 ஓட்டங்களையும் பெற்றனர்.

இலங்கை பந்துவீச்சாளர்களில் முத்தையா முரளிதரன் 54 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

பதிலுக்குத் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணியின் ஆரம்பத் துடுப்பாட்ட வீரர்களான உபுல் தரங்க, திலகரட்ன தில்ஷான் இருவரும் மிகச் சிறப்பாக துடுப்பெடுத்தாடினர்.

திலகரட்ன தில்ஷான் 108 ஓட்டங்களைப் ஆட்டமிழக்காமல் பெற்றார். இது ஒருநாள் சர்வதேசப் போட்டிகளில் அவர் பெற்ற 10 ஆவது சதமாகும். இந்த உலகக்கிண்ணத் தொடரில் அவர் பெற்ற இரண்டாவது சதம் இதுவாகும்.

உபுல் தரங்க 102 ஓட்டங்களைப் ஆட்டமிழக்காமல் பெற்றார். இது ஒருநாள் சர்வதேச போட்டிகளில் அவர் பெற்ற 11 ஆவது சதமாகும்.

எதிர்வரும் 29 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை கொழும்பில் நடைபெறவுள்ள முதலாவது அரையிறுதிப் போட்டியில் நியூஸிலாந்து அணியுடன் இலங்கை அணி மோதவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

ஆட்டநாயகனாக டில்சான் தெரிவு செய்யப்பட்டார்.





No comments: