ஆங்கிலப் புத்தாண்டு : முடிவிலியில் ஆரம்பிக்கும் அழகிய கனவு

.
                                                                                                    (01.01.2011) : நயனி
சற்றுப்பின்னர்…

கண்டங்கள் கடந்து,

ஆறுகள், மலைகள், பனிப்படலங்கள்,

இரத்தமும் சதையும்,

பிணங்களும், கொல்லப்படுவோரும்,

அனைத்தும் அணிவகுக்க,


கிறீஸ்துவின் பின்னிருந்து

2010 வருடங்களை இருளுக்குள்

தொலைத்துவிட்டோம்…

சாமூவேல் ஹன்டிங்டனைக் கேட்டுப்பார்

நாகரீகமே அங்கிருந்து

ஆரம்ப்பிக்கிறது என்று

அறைந்து சொல்கிறார்.

ஈராக்கிலிருந்து.. எனது

கொல்லைப்புறத்து ஈழம் வரைக்கும்

கிறீஸ்துவின் பின்னர்

கிறுக்கிவைத்திருக்கும்

குருதிக் கறைகளின் மேல்

சாபமிட்டு சொல்கிறேன்

எனக்கு எல்லாமே

அழிவிற்கு முன்னும்

அழிவிற்குபி பின்னும்தான்..

கிறிஸ்துவிற்குப் பின்பு என

நீங்கள் செதுக்கிவைத்த வைத்த

நாட்களிலிருந்து அழிவுமட்டுமே

மனித வாழ்க்கை…..

சுழல் முடிவிலியாய்…..

எனது புத்தாண்டு …

ஆம் எனது புத்தாண்டு

முடிவிலியில் ஆரம்பிக்கும்

அழகிய கனவு…No comments: