வழிகாட்டும் முன்… மஷூக் ரஹ்மான்


.
சென்ற கட்டுரையில் ஆசிரியர் மாணவர் உறவில் இருக்க வேண்டியச் சமநிலை பற்றி பார்த்தோம்… இந்த வாரமும் அதே மையக் கரு தான்இ ஆனால் வேறு கோணத்தில் பார்க்கப் போகிறோம்.


மாணவர்களை கையாளும் முறை… சில நாட்களுக்கு முன்பு நடந்த ஒன்று! ஒரு முன்னணி தொலைக்காட்சிக்காக பேட்டி காணப்பட்டபோது என்னை கேட்கப் பட்ட கேள்வி அது! நீங்கள் இன்றைய மாணவர்களிடம் என்ன மாற்றத்தைப் பார்க்கின்றீர்கள் என்பதே அந்தக் கேள்வி! வெகுவான மாற்றங்கள் உள்ளன…குறிப்பாக நல்ல மற்றும் கெட்ட மாற்றங்கள் எல்லா காலத்திலும் இருந்ததைவிட அதிகமாகி இருப்பதைக் குறித்துப் பேசிவிட்டு சரியான counselling மூலம் தவறான மாணவர்களை நல்வழிப்படுத்த இயலும் என்று சொன்னேன்


அடுத்த கேள்வி: புதிய நல்ல கருத்துக்களைச் சொல்கையில் மாணவர்கள் அதை எப்படி எடுத்துக் கொள்கிறார்கள் என்பதாக இருந்தது.

என் அணுகுமுறையைப் பற்றி சொல்ல நேர்ந்தது… சில வரிகளில் அதை இங்கே குறிப்பிட்டு நிறைவு செய்கிறேன்

அதாவது… ஆசிரியர்கள் மாணவர்களுக்கு வழிகாட்டும் முன் தங்கள் கொள்கைகளை தம் வாழ்வில் பிரதிபலிக்கச் செய்ய வேண்டும். தங்களின் நிறை குறைகளையே மாணவர்களுக்கு உதாரணமாகச் சொல்கையில் அனுபவ ரீதியில் நாம் பேசுகிறோம் என்பதைத் தெளிவு படுத்துவதுடன் நாம் விதைக்க நினைக்கும் பண்புகள் செயலாகச் சாத்தியமானவையே என்பதையும் புரிய வைக்க முடியும். இதனைச் செய்து ஓரளவிற்கு வெற்றியும் கண்டு இருக்கிறேன்.



ஆசிரியர்கள் தங்கள் இமேஜ் பற்றி கவலைப்படாமல் மாணவர்களிடம் வெளிப்படையாக தங்கள் வெற்றி தோல்விகளை மேற்கோள் காட்டலாம்



அடுத்த வாரம் சந்திப்போம்



No comments: