.
மென்மையானபாடல் என்பது எது என்று கேட்டால் இந்தப் பாடலை எடுத்துக்காட்டாய் சொல்லலாம். கவிதாலயா தயாரிப்பில் கே.பாலச்சந்தர் இயக்கத்தில் நெற்றிக்கண் என்கிற திரைப்படத்தில் ரஜினிகாந்த் .. தோன்ற .. இசைஞானி இளையராஜா அமைத்த இசையில் விளைந்த பாடல்!
என்ன நினைத்து என்னை அழைத்தாயோ..
ஏனிந்தக் கோலத்தைக் கொடுத்தாயோ..
முன்னம் இருந்த நிலை மறந்தாயோ..
முகத்தைக் காட்டிக் கொள்ள துடித்தாயோ..
வாழ்க்கைக் கனவுகளைக் கலைத்தாயோ ஒரு
வாசல் திறந்ததென்று நினைத்தாயோ
மாயப்பறவை ஒன்று வானில் பறந்துவந்து
வாவென்று அழைத்ததைக் கேட்டாயோ..
பறவை பறந்து செல்ல விடுவேனா அந்தப்
பரம்பொருள் கேட்டாலும் தருவேனா
உன்னை அழைத்துச்செல்ல எண்ணும்
தலைவனிடம் என்னையே நான் தர மறுப்பேனோ?
மென்மையானபாடல் என்பது எது என்று கேட்டால் இந்தப் பாடலை எடுத்துக்காட்டாய் சொல்லலாம். கவிதாலயா தயாரிப்பில் கே.பாலச்சந்தர் இயக்கத்தில் நெற்றிக்கண் என்கிற திரைப்படத்தில் ரஜினிகாந்த் .. தோன்ற .. இசைஞானி இளையராஜா அமைத்த இசையில் விளைந்த பாடல்!
ராமனின் மோகனம்.. ஜானகி மந்திரம்
ராமாயணம் பாராயணம் காதல் மங்கலம்
தெய்வீகமே உறவு...
இடமும் வலமும் இரண்டு உடலும் மனமும்
இணைந்தோங்கி நிற்கும்போது இதையன்றி எண்ணமேது
இளவேனிர்காலம் வசந்தம்..
ஒரு கோயில் மணியின் ராகம்
ஒரு வானில் தவழும் மேகம்
பறந்தோடும் நாள் இன்றுதான் கண்டதே..
ராமாயணம் பாராயணம் காதல் மங்கலம்
தெய்வீகமே உறவு...
இடையும் கொடியும் குலுங்கும் நடையும் உடையும்
எடைபோடக் கம்பனில்லை.. எனக்கந்தத் திறனுமில்லை..
இலைமூடும் வாழைப்பருவம்..
மடிமீது கோயில் கொண்டு மழைக்காலம் வெயில் கண்டு
சிலையாக நான் நிற்பதே அற்புதம்
ராமாயணம் பாராயணம் காதல் மங்கலம்
தெய்வீகமே உறவு...
யேசுதாஸ் எஸ்.ஜானகி குரல்களில் இழைந்தோடும் காதல் ராகம்!
இது தேவ கானம்!!
பாட்டொன்று கேட்டேன்..
வந்தநாள் முதல்
இந்த நாள் வரை
வானம் மாறவில்லை...வான்
மதியும் மீனும் கடல்காற்றும்
மலரும் மண்ணும்
கொடியும் சோலையும்
நதியும் மாறவில்லை....
மனிதன் மாறிவிட்டான்..
பறவையைக் கண்டான்..
விமானம் படைத்தான்...
பாயும் மீனகளில்
படகினை கண்டான்...
எதிரொலி கேட்டான்
வானொலி படைத்தான்..
எதனைக் கண்டான்..
பணம்தனைப் படைத்தான்...?
மனித வாழ்வில் அறிவியல் அரும்புவதற்கான, அடிப்படைக் காரணத்தை
கவியரசரின் கைவண்ணம் பாடலாய் வடித்தது பாவமன்னிப்பு படத்திற்காக
என்ன நினைத்து என்னை... நெஞ்சில் ஓர் ஆலயம்
இயக்குனர் ஸ்ரீதரின் இயக்கத்தில் நம் நெஞ்சில் நிற்கும் ஓர் ஆலயம் என்றைக்கும் நெஞ்சில் ஓர் ஆலயம்தான்! முக்கோணக் காதலை முழுமையான காவியமாய் திரையில் வடித்து வெற்றி பெற்றவர் இயக்குனர் ஸ்ரீதர்! இந்தப் பாடல் உருவான கதை இனிமையானது! கதையின்படி இந்தக் காட்சி உணர்ச்சிகரமானது! திரைப்படம் முழுமையாக எடுத்தாகிவிட்டது! படம் முடிவதைக் குறிப்பதற்காக பூசணிக்காய் எல்லாம் சுற்றியாகிவிட்டது! அன்றிரவு இயக்குனர் ஸ்ரீதருக்கு திரைப்படத்தில் ஒரே ஒரு காட்சியில் ஒரு பாடல் முழுமையாக இல்லையென்றாலும் ஒரு நான்கு வரிகளேனும் வைத்தால் நன்றாக இருக்கும் என்று தோன்றிட உடனே, கவிஞருக்கு தொலைபேசி அழைப்புவிடுத்து வேண்டுகோள் வைக்கிறார். கவிஞரோ.. அடுத்த நாள் காலை வெளிநாடு பயணத்தை முன்னிட்டு விமான நிலையம் செல்லவிருப்பதாக சொல்கிறார். அப்போதும் இயக்குனர் ஸ்ரீதர் - கவிஞரை, விமான நிலையம் செல்லும் வழியில் அலுவலகத்திற்கு வந்து நான்கே வரிகள் வழங்கிச் செல்லுமாறு அன்புக் கட்டளையிடுகிறார். கண்ணதாசன் வருகிறார்.. இயக்குனர் காட்சியினை விளக்குகிறார்.. மற்றுமொரு முறை கவிதை கங்கை வழிகிறது.. ஆம்.. நான்கு வரிகளில் நின்றுவிடாமல் முழுப் பாடலும் எழுத்தில் வந்து விழுகிறது..
என்ன நினைத்து என்னை அழைத்தாயோ..
ஏனிந்தக் கோலத்தைக் கொடுத்தாயோ..
முன்னம் இருந்த நிலை மறந்தாயோ..
முகத்தைக் காட்டிக் கொள்ள துடித்தாயோ..
வாழ்க்கைக் கனவுகளைக் கலைத்தாயோ ஒரு
வாசல் திறந்ததென்று நினைத்தாயோ
மாயப்பறவை ஒன்று வானில் பறந்துவந்து
வாவென்று அழைத்ததைக் கேட்டாயோ..
பறவை பறந்து செல்ல விடுவேனா அந்தப்
பரம்பொருள் கேட்டாலும் தருவேனா
உன்னை அழைத்துச்செல்ல எண்ணும்
தலைவனிடம் என்னையே நான் தர மறுப்பேனோ?
நன்றி “கவியரசு மின்னஞ்சல்”
No comments:
Post a Comment