புலம் பெயர்ந்து வந்த தமிழர்களுக்காக STARRTS என்ற அமைப்பு

.
      புது நாட்டில் வாழ்வை நிலைப் படுத்துதல்

புலம் பெயர்ந்து வந்த தமிழர்களுக்காக STARRTS என்ற அமைப்பு தமிழ் பண்பாட்டைக் காப்பதுடன் அவுஸ்திரேலியாவில் கிடைக்கின்ற வாழ்க்கை வளங்களை அறிவதற்கும் அநுபவிப்பதற்கும் ஏற்ற வகையில் நிகழ்ச்சித் திட்டம் ஒன்றை ஏற்பாடு செய்துள்ளது.அது வாரம் ஒரு நாள் 3 மணி நேரம் 9 வாரங்கள் தமிழில் நடைபெறும்.

இத் தொடரில் புதிய நாடொன்றில் குடியேறும் போது நாம் எதிர் கொள்ளும் குடியேற்றப் பிரச்சினைகள், போரின் தாக்கங்களில் இருந்து மீழுதல்,வேலைவாய்ப்புச் சிக்கல்கள், கல்வி வீட்டு வசதி, குழந்தை வளர்ப்பு, குடும்ப ஒற்றுமை, இணக்கப் பாடான வாழ்க்கை ஒன்றை கட்டி எழுப்புதல்,இங்கு கிடைக்கும் சேவைகள்,அவற்றைப் பெறும் வழி வகைகள்,வருவாய்க்குத் தக்க மகிழ்ச்சிக்கான சுற்றுலா வாய்ப்புகள் போன்ற தகவல்கள் உள்ளடங்குகின்றன.

மூன்றாவது முறையாக வெற்றிகரமாக நடைபெறும் 15 பேர்கள் கொண்ட இம் அமர்வு முற்றிலும் இலவசமானதாகும்.குழந்தைப் பராமரிப்பும், இடை நேரச் சிற்றுண்டியும் வழங்கப் படும்.

இந் நிகழ்ச்சியில் பங்கு பெற விரும்பினாலோ அல்லது மேலதிக தகவல்களைப் பெற விரும்பினாலோ பின் வரும் தொடர்புகளை நாடுங்கள்.

ஜீவா.பார்த்திபன்;0415960391
jivajiva@yahoo.com
யசோதா.பத்மநாதன்;0403051657
yasonathan@yahoo.com.au

”தகவல்களை அறிவதன் மூலம் சேவைகளைப் பெற்றுயர்வோம்”

No comments: