அவுஸ்திரேலிய பகிரங்க டென்னிஸ் போட்டிகள்

.
அவுஸ்திரேலிய பகிரங்க டென்னிஸ் போட்டியின் மகளிர் ஒற்றையர் பிரிவில் இறுதிப் போட்டியில் வெற்றிபெற்ற கிம் கிளிஸ்டர்ஸ் சம்பியன் பட்டத்தை தனதாக்கிக் கொண்டார்.

கிராண்ட்ஸ் லாம் பட்டங்களில் ஒன்றான அவுஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடர் மெல் போர்னில் நடைபெற்றது.

இதில் மகளிர் ஒற்றையர் பிரிவில் இறுதிப்போட்டிக்கு தன் முதலில் நுழைந்த சீன வீராங்கனை லீ நாவை எதிர் கொண்ட பெல்ஜியத்தின் கிம் 36,63, 63 என்ற செட்கணக்கில் லீ நாவை வீழ்த்தி கிண்ணத்தை தனதாக்கிக் கொண்டார். காயம் காரணமாக ஓய்விலிருந்து மீண்டு வந்த இவர் 2 ஆவது முறையாக கைப்ற்றும் கிராண்ட்ஸ்லாம் பட்டம் இதுவாகும்.





இதேவேளை ஆடவர் இரட்டையர் பிரிவு இறுதிச்சுற்றில் இந்தியாவின் லியா ண்டர் பயஸ்மகேஷ் பூபதி ஜோடியை வீழ்த்தி அமெரி க்காவின் பாப் பிரையன் மைக் பிரையன் சகோதரர்கள் சம்பியன் பட்டத்தை தமதாக்கிக் கொண்டதோடு ஹெட்க் வெற்றியையும் படைத்தனர்.

அவுஸ்திரேலியன் ஓபன் டென்னிஸ் தொடரின் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் செர்பியாவின் நோவக் டோகோவிச் சம்பியன் பட்டத்தை சுவீகரித்துக்கொண்டார்.

இந்த ஆண்டின் முதல் கிராண்ஸ்லாம் தொடரர்களில் ஒன்றான அவுஸ்திரேலியன் ஓபன் டென்னிஸ் தொடர் அவுஸ்திரேலியாவின் மெல்போர்ன் நகரில் நடைபெற்றது. இதில் ஆண்கள் ஒற்றையர் இறுதிப்போட்டியில் உலக டென்னிஸ் தரவசையில் 3 ஆவது இடத்திலுள்ள செர்பியாவின் டோ கோவிச், 5 ஆவது இடத்தில் இருக்கும் இங்கிலாந்தின் அன்டி ர்ரேவை எதிர்கொண்டார்.

அரையிறுதியில் முன்னணி வீரர் ரொஜர் பெடரரை வீழ்த்திய உற்சாகத்தில் களமிறங்கிய டோகோவிச் ஆரம்பத்திலிருந்தே அசத்தலான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். முதல் செட்டை 6   4 என்று கைப்பற்றிய டோகோவிச் இரண்டாவது செட்டிலும் முழுமையாக ஆதிக்கம் செலுத்தினார்.

இதில் 6     2 என்று எளிதாக வென்றார். இதனையடுத்து மூன்றாவது செட்டையும் 6    3 என கைப்பற்றிய டோகோவிச் 6   4, 6   2, 6   3 என்ற நேர் செட் கணக்கில் வெற்றி பெற்று கிண்ணத்தை கைப்பற்றினார்.

அவுஸ்திரேலியன் ஓபன் டென்னிஸ் தொடரின் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் செர்பியாவின் நோவக் டோகோவிச் சம்பியன் பட்டத்தை சுவீகரித்துக்கொண்டார்.

No comments: