அவுஸ்திரேலிய அணி ஒருநாள் தொடரின் 5 ஆவது 6 ஆவது போட்டிகள்

 5 ஆவது போட்டிஅவுஸ்திரேலிய அணியின் பந்து வீச்சாளர்கள் கைகொடுக்க தொடரின் 5 ஆவது போட்டியை 51 ஓட்டங்களால் வெற்றி பெற்றது அவுஸ்திரேலிய அணி. அதேவேளை இங்கிலாந்தின் வோக்ஸ் அபாரமாக பந்து வீசி 6 விக்கெட்டுக்களை பறித்தமை பயனற்றுப் போனது.


அவுஸ்திரேலிய இங்கிலாந்து அணிகளுக்கிடையிலான 7 போட்டிகளைக் கொண்ட ஒருநாள் தொடரின் 5 ஆவது போட்டி  பிறிஸ்பேனில் 30 - 01 - 2011 ம் திகதி  நடைபெற்றது. இதில் நாணயச்சுழற்சியில் வெற்றி பெற்ற அவுஸ்திரேலிய அணி முதலில் துடுப்பெடுத்தாட களமிறங்கியது. அணியின் ஆரம்ப வீரர்களாக வொட்சன், ஹெடின் ஆகியோர் களமிறங்கினர். இவர்கள் சிறப்பான ஆரம்பத்தினை வழங்கிய போது வொட்சன் 16 ஓட்டங்களைப் பெற்ற நிலையில் வோக்ஸின் பந்தில் கொலிங்வூட்டிடம் பிடி கொடுத்து அரங்கு திரும்பினார்.

இதனையடுத்து மஸ் 16 ஓட்டங்களுடன் ஆட்டமிழக்க அடுத்து களமிறங்கி நம் பிக்கையளித்தார் அணித்தலைவர் கிளார்க்.

5 பௌண்டரிகள் உட்பட அரைச்சதத்தினை (54) கடந்து ஆடிக்கொண்டிருக்கையில் வோக்ஸின் பந்தில் ஸ்ரொஸிடம் பிடிகொடுத்து ஆட்டமிழந்தார். இந்நிலையில் ஏனைய விக்கெட்டுக்கள் அனைத்தும் அரைச்சதத்தினைப் பெறாத நிலையில் 49.3 ஓவர்களில் பறிகொடுத்த அவுஸ்திரேலிய அணி 249 ஓட்டங்களைப் பெற்றுக் கொண் டது.

பந்து வீச்சில் இங்கிலாந்து அணி சார்பாக அபாரமாக பந்து வீசிய வோக்ஸ் 6 விக்கெட்டுக்களைப் பதம்பார்க்க அண்டர்சன், சஹா சட், கொலிங்வூட் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டினைக் கைப்பற்றினர்.

இந்நிலையில் 250 ஓட்டஇலக்கைநோக்கி பதிலுக்குத் துடுப்பெடுத்தாடிய இங்கிலாந்து அணி அவுஸ்திரேலிய அணியின் பந்து வீச்சுக்கு பணிந்து 198 ஓட்டங்ளைப் பெற்று வெற்றியைப் பறிகொடுத்தது.

இதில் இங்கிலாந்து அணியின் ஆரம்ப வீரராக களமிறங்கிய அணித்தலைவர் ஸ்ரொஸ் 3 ஓட்டங்களைப் பெற்று ஆட்டமிழந்து அதிர்ச்சியளிக்க 2 ஆவது விக்கெட்டுக்காக ப்ரொருடன் இணைந்து ட்ரொட் பிரெட் லீ யின் பந்தில் ஓட்டமெதனையும் பெறாமால் ஆட்மிழந்து அரங்கு திரும்பினார்.

இதனையடுத்து அணிக்கு நம்பிக்கை தரும்வகையில் பீற்றர்சன் நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தி 40 ஓட்டங்களைப் பெற்று ஆட்டமிழக்க பெல் 36 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தார். அதைனைத்தொடர்ந்து ஏனைய விக்கெட்டுக்கள் அனைத்தும் அடுத்தடுத்து பறிகொடுத்த இங்கிலாந்து அணி 45.3 ஓவர்களில் 198 ஓட்டங்களைப்பெற்று 51 ஓட்டங்களால் தோல்வியைத் தழுவிக்கொண்டது பந்து வீச்சில் அவுஸ்திரேலிய அணி சார்பாக வொட்சன் 3 விக்கெட்டுக்களையும், பிரெட் லீ, பொலிஞ்சர், ஹஸ்ங் ஆகியோர் தலா 2 விக் கெட்டுக்களையும், சிமித் ஒரு விக்கெட்டினையும் கைப்பற்றினர்.

இந்நிலையில் 7 போட்டிகளைக் கொண்ட இத் தொடரில் அவுஸ்திரேலிய அணி 4   -  1 என்ற நிலையில் முன்னிலை வகிக்கின்றது.

6 ஆவது போட்டி


இங்கிலாந்து அணிக்கு தொடர் அதிர்ச்சியைக்கொடுத்து தொடரை வென்ற அவுஸ்திரேலியா 6 ஆவது போட்டியையும் 2 விக்கெட்டுக்களால் வென்று தனது பலத்தை மீண்டும் நிரூபித்துள்ளது.


இங்கிலாந்து அவுஸ்திரேலிய அணிக ளுக்கிடையிலான 6 ஆவது ஒருநாள் போட்டி நேற்று சிட்னியில் ஆரம்பமானது. இதில் நாணயச்சுழற்சியில் வெற்றி பெற்ற இங்கிலாந்து அணி முதலில் துடுப்பெடுத்தாடக்களமிறங்கியது.

அணித்தலைவர் ஸ்ரொட்ஸ், ப்ரொர் ஆகியோர் ஆரம்பவீரர்களாக களமிறங்கி சிறந்த இணைப்பாட்டத்தினை வழங்கிக்கொண்டிருக்ø யில் ஜோன்சன், ப்ரொன் விக்கெட்டி னைப்பறித்து 18 ஓட்டங்களுடன் அரங்கிற்கு அனுப்பினார். பின்னர் ட்ரொட் களமிறங்கி நிதானமான ஆட்டத்தினை வெளிப்படுத்தினார்.

இந்நிலையில் ஆரம்ப வீரராக களமிறங்கி அரைச்சதத்தினைக்கடந்து ஆடிக்கொண்டிருந்த   ஸ்ரொட்ஸ் 63 ஓட்டங்களைப்பெற்ற நிலையில் ஆட்டமிழந்து சென்றார். இதனையடுத்து மேலும் 4 விக்கெட்டுக்களை 50 ஓவர்கள் நிறைவில் பறிகொடுத்த இங்கிலாந்து அணி 6 விக்கெட்டுக்களை இழந்து 333 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.

ட்ரொட் சிறப்பான ஆட்டத்தினை வெளிப் படுத்தி சதத்தினை (137) பெற்றுக்கொண் டார்.   இதனையடுத்து பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய ஆஸி. அணி கிளார்க்கின் (82) அதிரடியில் 49.2 ஓவர்களில் 8 விக்கெட்டுக்களை இழந்து 334 ஓட்டங்களைப்பெற்று 2 விக்கெட்டுக்களால் வெற்றி பெற்றது.No comments: