எகிப்திய ஜனாதிபதியின் மூன்று தசாப்த ஆட்சிக்கு ஏற்பட்டுள்ள சோதனை!

.
 எகிப்தில் கடந்த சுமார் 3 தசாப்த காலமாக ஆட்சி அதிகாரத்தை தன்னகத்தே வைத்துள்ள ஜனாதிபதி ஹொஸ்னி பாரக்கிற்கு எதிராக வரலாறு காணாத ஆர்ப்பாட்டம் தலைநகர் கெய்ரோவிலுள்ள தாஹ்ர் சதுக்கத்திலும் அலெக்சாண்டியா நகரிலும்  தினம் நடைபெற்றது. கடந்த ஒரு வார காலத்திற்கும் மேலாக ஆங்காங்கே நடைபெற்ற மக்கள் எழுச்சியின் ஒட்டுமொத்த வெளிப்பாடாக இருந்த இந்த ஆர்ப்பாட்டத்தில் இலட்சக்கணக்கான மக்கள் ஒன்று கூடி பாரக்கை பதவி விலகுமாறு கோசமெழுப்பினர்.இந்த ஆர்ப்பாட்டத்தை அடுத்து ஜனாதிபதி ஹொஸ்னி பாரக்கின் பதவி ஆட்டம் கண்டுள்ளதுடன் இதுவரை காலம் அவருக்கு ஆதரவளித்து வந்த இராணுவம் அமெரிக்காவும் அவரை கைவிட்டு விட்டது என்ற உண்மையும் பகிரங்கமாகி உள்ளது.

ஜனாதிபதி பாரக்கிற்கு எதிராக கோசமெழுப்பும் ஆர்ப்பாட்டக்காரர்களை எகிப்திய இராணுவம் தனது பலத்தைப் பிரயோகித்து கொடுங்கரங்களால் அடக்கும் என்றே எதிர்ப்பாõர்க்கப்பட்டது.

ஆனால் நிலைமை தலைகீழாக மாறியுள்ளதையே காணமுடிகின்றது. இது தொடர்பில் இராணுவம் விடுத்த அறிவிப்பில், எகிப்தின் பெருமைவாய்ந்த மக்களின் சட்டபூர்வமான உமைகளை இராணுவம் அங்கீகக்கின்றது. இப்போது மட்டுமன்றி எப்போதும் இராணுவம் மக்களுக்கு எதிராக தனது பலத்தைப் பிரயோகிக்கப் போவ தில்லை. நியாயமான கோரிக்கைகளுக்காக போராடும் மக்கள் இயக்கத்தின் மீது அடக்குமுறையை ஏவிவிட நாங்கள் தயாரில்லை என்று பகிரங்கமாக கூறிவிட்டது. இதேவேளை எகிப்தில் அரசியல் சாசன தியான சீர்திருத்தத்தை உடனடியாக மேற்கொள்ள வேண்டும். வரும் செப்டம்பல் நடக்கவுள்ள ஜனாதிபதி தேர்தலை ஜனநாயகரிதியில் நடத்த வேண்டும் என அமெரிக்கா மறு புறம் தனது நிலைப்பாட்டை கூறியுள்ளது.

இதனைத் தொடர்ந்து அரச தொலைக்காட்சியில் தோன்றி உரையாற்றிய ஜனாதிபதி பாரக், அரசியல் சீர்த்திருத்தத்தை மேற்கொள்ள தாம் தயாராகவுள்ளதாகவும் அதேவேளை தற்போதைய தனது பதவிக்காலம் முடியும்வரை தொடர்ந்தும் பதவியிலிருக்கப் போவதாக வும் தெரிவித்துள்ளார். அத்துடன் ““இது எனது நாடு. இந்த நாட்டைவிட்டு நான் ஒரு போதும் வெளியேறப்போவதில்லை. இந்த நாட்டின் இறைமைக்காகவும் நலன்கருதியும் பல்வேறு வெற்றி தோல்விகளைச் சந்தித் துள்ளேன். நான் இந்த மண்ணிலேயே உயிர் துறப்பேன்'' என்றும் கூறியுள்ளார். எனினும் ஆர்ப்பாட்டக்காரர்கள் அவர் உடனடியாகப் பதவியிலிருந்து விலக வேண்டுமென்ற தமது நிலைப்பாட்டில் உறுதியாகவே உள்ளனர்.

இதேவேளை, பாரக்கின் இந்த கூற்றானது ஒரு தந்திரமாகும். அவர் பதவி நிலைத்து நிற்கவே இவ்வாறு கூறுகிறார் என எதிர்க்கட்சித் தலைவர் கமட் எல் பராடி தெரிவித்திருக்கிறார். இதனிடையே திங்கள் இரவு பாரக்கிற்கு ஆதரவானவர்களுக்கும் எதிரானவர்களுக்கும் இடையே மோதல்கள் இடம்பெற்றதாகவும் இராணுவத்தினர் அதனைக் கட்டுப்படுத்த வானத்தை நோக்கி துப்பாக்கிப் பிரயோகம் செய்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது.

எகிப்தில் பாரக்கிற்கு எதிரான போராட்டத்திற்கான அடிப்படைக் காரணம் உணவுப் பொருட்களின் கட்டுக்கடங்காத விலையேற்றம், ஊழல், வேலை இல்லாப் பிரச்சினை, ஆட்சியாளர்களின் எதேச்சதிகாரப் போக்குகளே ஆகும். இந்த நிலையிலேயே மக்கள் போராட்டம் வெடித்துள்ளது. முதலில் ஜனாதிபதி பாரக்கிற்கு எதிரான போராட்டம் முப்பது வயதிற்குக் குறைந்த இளைஞர் குழுவினராலேயே ஆரம்பிக்கப் பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

“ஏப்ரல் 6 இளைஞர் இயக்கம்' என்ற இந்த இயக்கம் 2008 இல் எகிப்தில் தொழிலாளர்க ளுக்கு ஆதரவளிக்கும் வகையில் ஆரம் பிக்கப்பட்டு பின்னர் மெதுவாக அரசிற்கு எதிராக உருவெடுத்தது என்று கூறப்படுகி றது. இவர்கள் இணையத்தளம் மற்றும் “பேஸ் புக்' ஊடாகவே இதனை மக்கள் மயப்படுத்தியதாகவும் இவர்கள் எந்தக்கட்சியையும் சார்ந்தவர்கள் அல்ல என்றும் தெவிக்கப்படுகிறது. இந்த அமைப்பே பாரக்கிற்கு எதி ரான இந்தப் பாய போராட்டத்தை ன்னிலைப்படுத்தியுள்ளது.

இதனிடையே 1977 இல் மக்கள் போராட்டமொன்று எகிப்தை ஸ்தம்பிக்க வைத்தது. அதற்கு “ரொட்டிக் கலவரம்' என்று பெயர் சூட்டப்பட்டது. உணவுப் பஞ்சமே அந்தக் கலவரத்திற்கு வித்திட் டதுடன் அன்றைய ஜனாதிபதியாக இருந்த அன்வர் சதாத்தின் ஆட் சியைப் பலவீனப்படுத்தியது. பின்னர் ஆட்சி மாற்றத்திற்கும் அது வழி கோலியது. அவ்வாறே இந்தப் புரட்சியும் அமையலாம் என்பது அரசியல் ஆய்வாளர்களின் கருத்தாகும். 79 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் தொகையுடைய நாடாக எகிப்து விளங்குகின்றது.

இங்கு ஏற்பட்டுள்ள மக்கள் எழுச்சி அரபுலக ஆட்சியாளர்களை வெகுவாக சிந்திக்கவைக்கும் என்பதில் சந்தேகமில்லை.

இதேவேளை அண்மையில் 23 வருட காலமாக டியூனீஸியாவில் எதேச்சதிகார ஆட்சியை நடத்தி வந்தவரான பென் அலி, மக்கள் கிளர்ச்சி காரணமாக நாட்டிலிருந்தும் விரட்டியடிக்கப்பட்டார். இந்தப் பின்னணியில், மக்கள் ஆர்ப்பாட்டம் காரணமாக அரபுலகில் பதவி கவிழ்க்கப்பட்ட முதலாவது முஸ்லிம் நாடு டியூனிஸியா என்பதும் குறிப்பிடத்தக்கது.

அண்மைக் காலமாக அரபுலக நாடுகளில் தோன்றியுள்ள ஊழல், அதிகார துஷ்பிரயோகம், வேலையில்லாத் திண்டாட்டம், கருத்துச் சுதந்திரமின்மை என்பவற்றுக்கு எதிராக மக்கள் கிளர்ச்சி னைப்ப டைந்து வருவதையே காணடிகின்றது. அந்தவகையில் அரசியல் தியான மாற்றங்களைக் கோ டியூனீஸியா, எகிப்தைத் தொடர்ந்து யேமன், அல்ஜீயா, ஜோர்தான் உட்பட பல நாடுகளில் மக்கள் போராட்டங்கள் தீவிரமடைந்து வருகின்றன.  

அரபுலகில் மிகப்பெய மாற்றங்கள் ஏற்பட இருப்பதை இந்தக் கிளர்ச்சிகள் எடுத்துக்காட்டுவதாக அரசியல் ஆய்வாளர்கள் சுட்டிக் காட்டுகின்றனர். இந்நிலையில் எகிப்தில் தோன்றியுள்ள மக்கள் போராட்டம் சர்வதேசத்தின் கவனத்தை வெகுவாக ஈர்த்துள்ளது.

கடந்த ன்று தசாப்த காலமாக ஆட்சி அதிகாரத்தை தன் வசம் வைத்திருக்கும் 82 வயதான ஜனாதிபதி பாரக் அடுத்த கட்டமாக எவ்வித அறிவிப்பை அந்நாட்டு மக்களுக்கு விடுப்பார் என்பதே இன்று சர்வதேசத்தின் எதிர்பார்ப்பாகவுள்ளது. எவ்வாறு இருந்த போதிலும், அவர் பதவியில் நீடிக்கும் சாதகமான சூழ்நிலையை மேற்குலகில் இருந்தோ அன்றேல் எகிப்திய இராணுவத்தி டமிருந்தோ எதிர்பார்க்க டியாது என்பது மட்டும் தெளி வாகியுள்ளது.

நன்றி வீரகேசரி

No comments: