மகாஜனக் கல்லு}ரிப் பழைய மாணவர் சங்கத்தின் சிட்னி – கன்பராக் கிளை ஏற்பாடு செய்திருந்த நு}ற்றாண்டு விழா

 .
யாழ்ப்பாணக் குடாநாட்டின் பிரபல பாடசாலைகளுள் ஒன்றான தெல்லிப்பளை மகாஜனக் கல்லு}ரியின் பழைய மாணவர்கள் சிட்னியில் தமது பாடசாலையின் நு}ற்றாண்டு விழாவை சென்ற வாரம் கொண்டாடியிருக்கிறார்கள். மகாஜனக் கல்லு}ரிப் பழைய மாணவர் சங்கத்தின் சிட்னி – கன்பராக் கிளை ஏற்பாடு செய்திருந்த இவ்விழா ஹோம்புஷ் ஆண்கள் உயர்பாடசாலை அரங்கில் ஜனவரி  29 ஆம் திகதி மாலை ஆரம்பித்து 
சிறப்புற நடந்தேறியது.


















































பிரபலமான பல கல்விமான்களையும் சமூக சேவையாளர்களையும் நல்ல குடிமக்களையும் உருவாக்கிய இந்தக் கல்லு}ரியின் சாதனைகளைக் கொண்டாடுவதுடன் தம்மை ஏற்றி விட்ட எல்லோரையும் நினைத்துக் கொள்ளும் நோக்கில் பழைய மாணவர்களும் குடும்பத்தினர்களும் நலன் விரும்பிகளும் திரண்டு வந்திருந்தார்கள்.


கடந்த மூன்று தசாப்தன்காளாக உயிர்நீத்த தமது உறவுகளை நினைந்து செய்யப்பட்ட அகவணக்கத்துடனும் மகாஜனாவின் புகழ் பூத்த பழைய மாணவர்களான திரு G சந்திரன் (IBM) – திருமதி சாந்தனி சந்திரன் அவர்களது மங்கள விளகேற்றலுடனும் நு}ற்றாண்டு விழ ஆரம்பமாகியது.













பேராசிரியர் ஆசி கந்தராஜாவின் வரவேற்புரையுடனும் பழைய மாணவர்களினது கல்லு}ரிக் கீதத்துடனும் தொடர்ந்த இந்த விழாவில் திருமதி கோகிலா மகேந்திரன் அவர்கள் முதன்மை விருந்தினராகக் கலந்து சிறப்பித்தார். மகாஜனாவின் மாணவியாக இருந்த காலத்தில் கல்வி, விளையாட்டு மற்றும் கலாச்சாரம் சார்ந்த துறைகளில் மிளிர்ந்த அவர் மகாஜனாவில் 12 ஆண்டுகள் ஆசிரியையாகவும் இருந்த பின்னணி கொண்டவர். சிக்கல்களே வாழ்க்கையாக இருந்த குடாநாட்டில் பிரதிக் கல்விப் பணிப்பாளராகவும் பணி புரிந்ததுடன், தமது நு}ல்களுக்காக இரண்டு தடவைகள் சாகித்திய விருதும் பெற்ற திருமதி கோகிலா மகேந்திரன் அவர்கள் முதன்மை விருந்தினராகக் கலந்து சிறப்பித்தமை நு}ற்றாண்டு விழாவுக்கு அணி சேர்ப்பதாக அமைந்தது.

மகாஜனாவில் இருபது ஆண்டுகள் கற்பித்த திரு A யோகரத்தினம் அவர்கள் சிறப்பு விருந்தினராக கனடாவிலிருந்து வந்து கலந்து கொண்டிருந்தார். மேலும், மகாஜனாவின் புகழ் மிக்க பழைய மாணவர்களும் கௌரவ விருந்தினர்களாக அழைக்கப்பட்டிருந்தார்கள்.

நிகழ்ச்சியின் பிரதான அம்சமாக சிட்னி கீதசாகரா இசைக் குழுவினரின் மெல்லிசைக் கச்சேரி இடம்பெற்றது. இராஜலிங்கம் இராஜயோகனின் மேற்பார்வையில் மரியநாயகம் பிரின்ஸ் – சோனா பிரின்ஸ் தொகுத்தளித்த இந்த நிகழ்ச்சியில் பழைய – புதிய திரைப்பாடல்களை இசைத்த பாடகர்கள் வந்திருந்தோரைக் கடந்த நாற்பது வருடங்களுக்கூடாக ஒரு நினைவுப் பயணம் செய்ய வைத்தார்கள்.

தொடர்ந்த நு}ற்றாண்டு விழா நிகழ்ச்சிகளில், தலைவர் உரையைக் கலாநிதி P தனபாலசிங்கம் (பாலன் மாஸ்ரர்) நிகழ்த்தினார். தமது கல்லு}ரி நாட்களை நினைவு கூர்ந்த அவர் தமது ஆசிரியர்களை மட்டுமன்றி, தாயகத்தில் இடம் பெற்ற உரிமைப் போராட்டம் கல்லு}ரியைக் கடுமையாகத் தாக்கிக் காயப்படுத்திய வேளையிலும் தளராத உறுதியுடன் கல்லு}ரியைக் கட்டிக் காத்ததுடன் ஊருடன் சேர்ந்து கல்லு}ரி அளவெட்டி, பண்டத்தரிப்பு, மருதனார்மடம் என இடம் பெயர்ந்த போதும் கற்பித்தலைத் தொடர்ந்து நடாத்தச் சித்தம் கொண்டு பணி புரிந்த அதிபர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர்கள் எல்லோருக்கும் தமது நன்றிகளைச் சொன்னார்.

முதன்மை விருந்தினர் திருமதி கோகிலா மகேந்திரன், திரு A யோகரத்தினம், பழைய மாணவர் சங்கத்தின் காப்பாளரான பல் மருத்துவ கலாநிதி A புண்ணியமூர்த்தி ஆகியோரும் சிறப்புரைகளை வழங்கினர். இந்தக் கிராமத்துக் கல்லு}ரி சென்று வந்த சவால் மிகுந்த பாதைகள் திரும்பிப் பார்க்கப்பட்டன. ஒன்பது ஆண்டுகள் தொடர்ந்து யாழ் பாடசாலைகளின் உதைபந்தாட்ட வெற்றி வீரர்களாக வந்தமை, மூன்று தடவைகள் அகில இலங்கை மட்டத்தில் உதைபந்தாட்ட வெற்றி வீரர்களாக வந்தமை, இலங்கையின் பாடசாலைகள் தெரிவு அணிகளுக்கு உதைபந்து – ஹொக்கி – துடுப்பாட்டம் என வீரர்களை அனுப்பியமை, தட – களச் சாதனைகள், உடற்பயிற்சி அணிகளின் சாதனைகள், என ஆண்களும் பெண்களுமாகப் பதித்த தடங்கள் நினைவு கூறப்பட்டன. அகில இலங்கை நாடகப் போட்டிகளில் ஐந்து தடவைகள் தொடர்ந்து முதற் பரிசு பெற்றமை, பேச்சு – விவாதப் போட்டிகளில் பெற்றுக் கொண்ட தங்கப் பதக்கங்கள், இசை – சமயப் போட்டிகளில் நாடளாவிய ரீதியில் பெற்றுக் கொண்ட தனி மற்றும் அணிகளின் வெற்றிகள் விதந்துரைக்கப்பட்டன. பொறியியல், மருத்துவம், விஞ்ஞானம், கலை, வர்த்தகம், சட்டம், முகாமைத்துவம் போன்று எல்லாத் துறைகளுக்கும் மாணவர்களை அனுப்பியதுடன் பல்கலக்கலகத்துக்கு அதி கூடிய மாணவர்களை அனுப்பிய பெருமைகளும் பேசபட்டன. குறைந்த வளங்களுடன் பல துறைகளில் கல்லு}ரி செய்த சாதனைகளுடன், அத்திவாரங்களும் து}ண்களும் அசை போடப்பட்ட போது கண்ணீர்த் துளிகளும் உருண்டன.

மகாஜனக் கல்லு}ரிப் பழைய மாணவர் சங்கத்தின் சிட்னி – கன்பராக் கிளை இந்த நு}ற்றாண்டு விழாவைக் குறிக்கும் முகமாக ஒரு மலரையும் வெளியிட்டது. இம்மலரை சிட்னியின் பிரபல இதய நல நிபுணரான மருத்துவ கலாநிதி V மனோமோகன் பெற்றுக் கொண்டு உரையாற்றினார்.

இந்த மாலைக்கு முத்தாய்ப்பாக இரண்டு நடன நிகழ்ச்சிகளும் இடம் பெற்றன. ஐந்து இளைஞர்கள் அவர்களது வயதுக்கு உகந்த ஒரு கருப் பொருளை வைத்து அமைக்கப்பட்ட பாடலுக்கு ஒரு நவீன நடனத்தை வழங்கினர். தொடர்ந்து, நடன ஆசிரியை டாக்டர் திருமதி யசோதா சிங்கராஜா அவர்களது மாணவிகள் பாரத நாட்டியமும் கிராமிய நடனமுமாக கண்கவரும் வகையில் அபிநயம் பிடித்தனர்.

அறுசுவை உணவுகளுடன் தொடர்ந்த விழாவில், நன்றி உரை வழங்க வந்த கலாநிதி பாலா விக்னேஸ்வரன், "எமது பழைய மாணவர் சங்கங்கம் பொதுவாக இரண்டு பிரதான நோக்கங்களுடன் இயங்குகின்றது. தாயகத்திலிருக்கும் எமது கல்லு}ரியின் வளர்ச்சிக்கு உதவுவது முதல் நோக்கமாக இருப்பினும்இ கல்லு}ரியின் பழைய மாணவர்கள் அவ்வப்போது ஒன்றுகூடிஇ தமக்கிடையிலான பரிச்சயத்தையும் பசுமையாக வைத்துக் கொள்ள உதவுவதையும் நோக்கமாக வைத்திருக்கிறது" என்று தெரிவித்ததுடன் "அவ்வகையில்இ கடந்த பல வருடங்களாக நாம் எடுத்து வரும் எல்லா முயற்சிகளுக்கும் தோள் கொடுத்து அவற்றை எல்லாம் வெற்றி பெற வைத்த மகாஜன சமூகத்துக்கு நாம் என்றும் நன்றியுடையோம்" என்றும் குறிப்பிட்டார்.

ஆயினும், விழா முடிந்த பின்னரும் நெடு நேரம் அமர்ந்திருந்து தமது நண்பர்களுடன் பழைய நினைவுகளை மீட்டுக் கொண்ட மகாஜனன்கள் தமது கல்லு}ரி நாட்களில் அமைத்துக் கொண்ட பரிச்சயங்களுக்கும் ஞாபகங்களுக்கும் தற்போதைய உலகில் பம்பரமாக இயங்கும் வாழ்க்கைக்கும் சான்றுகளாயினர்.

டாக்டர் பாலா விக்னேஸ்வரன்







































11 comments:

Anonymous said...

டாக்டர் பாலா விக்னேஸ்வரன் யோகாசனம் செய்கிறாரா? படம் தலைகீழ் என்பதால் ஒரு சந்தேகம் ;-)

Anonymous said...

Junion College old student is in the front row while Mahajanans are in the back (for College Song - first photo). Shame to NSW-ACT OSA...

Tamilmurasu said...

"டாக்டர் பாலா விக்னேஸ்வரன் யோகாசனம் செய்கிறாரா? படம் தலைகீழ் என்பதால் ஒரு சந்தேகம்"

நன்றி வாசகரே தவறைச் சுட்டிக்காட்டியதற்கு. தற்போது சரிசெய்யப்பட்டுள்ளது.

Anonymous said...

Dr Kantharajah was on the stage as MC {and வரவேற்புரை), more than Dr Bala.

Why no Kantharajah's photo? You don't like him?

Anonymous said...

I know that, Bala Vickneswaran was only 5 min on the stagewhen Kantaharajah was away from stage.

Thamil Murasu may not like some people in Sydney.

It is no good for Tahamil Murasu.

Is this article written and send by Dr Bala Vickneswaran

Mahajana old student.

Anonymous said...

It is O K. Prof Kantharajah will not see this.

I understand that he is not in Australia now.

Anonymous said...

Typical Wickneswaran

Tamilmurasuaustralia said...

வாசகர்களே உங்கள் கருத்துக்கு நன்றி. தமிழ்முரசுக்கு வேண்டியவர் வேண்டப்படாதவர் என்று பாகுபாடு கிடையாது என்பதை தொடர்ந்து முரசை வாசித்து வருபவர்களுக்கு தெரியும். அவுஸ்ரேலியாவில் நடக்கும் எந்த நிகழ்ச்சியைப் பற்றியாவது யாரும் எழுதிஅனுப்பினாலோ புகைப்படங்கள் அனுப்பினாலோ அதை பிரசுரிப்பது வழமை. இந்த நிகழ்ச்சியும் அப்படித்தான். குறை கூறாமல் நீங்கள் செல்லும் நிகழ்ச்சிகளில் நடப்பவற்றை புகைப்படமாகவோ அல்லது கட்டுரையாகவோ அனுப்பி வையுங்கள் பிரசுரிக்கின்றோம். நாங்களே எல்லாவற்றிற்கும் சென்று எடுத்துக்கொண்டிருக்ப்பது இந்த நாட்டின் வாழ்முறையில் கஸ்டம் என்பதை புரிந்து கொண்டு நீங்களும் முயலுங்கள். உங்கள் கையில் உள்ள கமறாவில் சில படங்களை எடுத்து பத்திரிகை முகவரிக்கு அனுப்பி விட்டால் போதும். இதற்கு தமிழ்கூடத் தெரியத் தேவையில்லை. செய்வீர்களா? சொல்லாதே செய்

Anonymous said...

Tamil Murasu should in future ignore adverse comments from persons who don't have the courage to reveal their names. Let the dogs bark!

-Venu G.

Unknown said...

Dear friend (known as 'Anonymous'), why don't you own your views ? What are you afraid of ?
Though you want to remain anonymous, it is not that hard to guess.

You need to be a role model to younger generations. You need to help bridge the disjointed organizations, as one of speakers appealed during the event. There is great potential for the OSAs to contribute to the local community and to the school. Let's focus on the bigger picture and the tasks ahead.

Contributing time to these activities is hard enough. Least we can do is NOT to disrespect the efforts put in by people like Dr Vigneswaran who have work hard.

Let's act responsibly.

Murali C

Sri said...

இந்த மகாஜனாக் கல்லூரி ஆண்டுவிழாக் கட்டுரையும் வாசகர் கருத்துக்களும் வாசித்தேன் .

சில கருத்துக் கந்தசாமிகளின் தொனியே சரியில்லை. குற்றம் காண்பதே இவர்கள் குணம் என்று தெளிவாகத் தெரிந்த போதிலும், இவ்வாறானவர்களைக் கணக்கு எடுக்காது விடுவது தான் சரி என்றாலும் அனாமதேயம் என்று முகமூடி போட்டுக்கொண்டு பெட்டைத் தனம் காட்டுபவர்களை மகாஜனாக் கல்லூரி நிர்வாக சபை தோலுரிக்க வேணும்.

நானும் சில விசாரணைகளை செய்தேன்.

Junion College old student is in the front row while Mahajanans are in the back என்று ஒரு அனாமதேயம் எழுதியிருப்பது கலப்படம் இல்லாத பொய் என்று சொன்னார்கள். இந்த இளைஞன் பிரபல மகாஜனா மாணவியும் ஆசிரியயுமாக இருந்த பிரதம விருந்தினராக வந்திருந்தவரின் மகன் என்றும் அவர் மகாஜனா மாணவர் என்றும் சொன்னார்கள்.

ஒரு செய்தி போல மகாஜனா நிகழ்ச்சி பற்றி தமிழ் முரசில் போட தமிழ் முரசு விரும்பியதாகவும் கையில் கிடைத்த படங்களை அவர்களுக்கு அனுப்பியதாகவும் சொன்னார்கள். நடந்த விசயங்களை நாலு வரியில் எழுதினால் நல்லது என்று தமிழ் முரசு கேட்டதாகவும் அதற்கு மகாஜனாக் கல்லூரி நிர்வாக சபை ஒப்புக் கொண்டதாயும் சொன்னார்கள். அவர்களது கோயில் மேளமான விக்கினேசுவரன் எழுதியதை தமிழ் முரசு அப்பிடியே போட்டதாகவும் சொன்னார்கள். அனுப்பின படங்கள் எல்லாவற்றையும் தமிழ் முரசு போட்டது என்றும் சொன்னார்கள்.

டாக்டர் காந்தராஜா மேடையில் முன்னணி வகிக்க வேணும் என்று நிர்வாக சபை கேட்டதால் ஏதோ ஒரு குடும்ப நிகழ்சியை விட்டு அவரும் வந்ததாகவும் சொன்னார்கள்.
அந்த நிகழ்ச்சிக்கு டிக்கெட் எடுத்து வந்துவிட்டு மகாஜனா பழைய மாணவர்கள் சந்தோஷமாக இந்த ஆண்டு விழாவைக் கொண்டாடியதை காண முடியாமல் ஏதோ ஒரு காய்ச்சலில் புறுபுறுக்கிற அனாமதேயங்களுக்காக அவர்கள் அலட்டிக் கொள்ள மாட்டார்கள் என்று எனக்கு விளங்கி விட்டது.

சொல்லாதே செய் என்கிறது தமிழ் முரசு. நன்றி செய்யப் பிறந்த நீ நன்றி செய்யாவிடினும் தீமையாவது செய்யாதே என்றார் விவேகானதர். வாழ விடுங்கள் அப்போவ்!

சிறி