தமிழ் சினிமா

.
ரஜினிக்கு ஜோடியாக துடிக்கும் தீபிகா படுகோன்


 ரஜினியின் அடுத்த படமான ராணாவில் நடிப்பதற்கு கால்ஷீட் தர வசதியாக தான் அடுத்து அக்ஷய் குமாருடன் நடிப்பதாக இருந்த படத்தைக் கூட மறுத்துள்ளார் பொலிவுட் நடிகை தீபிகா படுகோன்.

தென்னக சூப்பர் ஸ்டாராக இருந்து இப்போது இந்திய சூப்பர் ஸ்டாராகவும் உலக அளவில் அறியப்பட்ட இந்திய நாயகனாகவும் மாறியுள்ள ரஜினியுடன் ஒரு படத்திலாவது நடித்துவிட வேண்டும் என்பதே இன்றைய இளம் நடிகைகளின் ஆசையாக உள்ளது.பிரபல பொலிவூட் நாயகி தீபிகா படுகோனும் இதற்கு விலக்கல்ல.கடந்த இரு ஆண்டுகளாகவே அவர் ரஜினி பட வாய்ப்புக்காக காத்திருந்தார்.

இந்த நிலையில் கே.எஸ்.ரவிக்குமார் இயக்கும் ரஜினியின் புதிய படமான ராணாவில் நாயகியாக நடிக்கும் வாய்ப்பு அவரைத் தேடி வந்தது.ஆனால் அந்த நேரம் பார்த்து அவரிடம் கால்ஷீட் இல்லை.ரஜினி படத்தை தவற விடவும் மனமில்லை.கடைசியில் அக்ஷ்ய்குமாருடன் தான் நடிக்கவிருந்த ஒரு படத்தை வேண்டாம் என்று கூறிவிட்டு ரஜினி படத்துக்கு கால்ஷீட் தரத் தயாராக இருப்பதாக அறிவித்துள்ளார் தீபிகா!இப்படத்தில் ரஜினியின் இன்னொரு நாயகியாக அனுஷ்கா நடிப்பார் என்று கூறப்படுகிறது.


 பாடகர் பாலசுப்பிரமணியத்துக்கு பத்மபூஷன் நடிகர் ஜெயராமுக்கு பத்மஸ்ரீ விருது அறிவிப்பு


முன்னாள் சட்டமா அதிபர் கே.பராசரன், விப்ரோ தலைவர் ஆசிம் பிரேம்ஜி உள்ளிட்ட 13 பேருக்கு பத்ம விபூஷன் விருதும் பிரபல பின்னணிப் பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் உள்ளிட்ட 31 பேருக்கு பத்ம பூஷன் விருதும், அவ்வை நடராஜன், நடிகர் ஜெயராம் உள்ளிட்ட 84 பேருக்கு பத்மஸ்ரீ விருதுகளும் அறிவிக்கப்பட்டுள்ளன.

தமிழகத்தைச் சேர்ந்த 12 பேருக்கு பத்ம விருதுகள் கிடைத்துள்ளன. இதில் 3 பேருக்கு பத்ம விபூஷனமும் 9 பேருக்கு பத்மஸ்ரீ விருதும் கிடைத்துள்ளன. யாருக்கும் பத்ம விபூஷன் விருது கிடைக்கவில்லை. பராசரன் சென்னையைச் சேர்ந்தவராக இருந்தாலும் அவர் டில்லியைச் சேர்ந்தவராக அறிவிக்கப்பட்டு விருது கொடுக்கப்பட்டுள்ளது.

அதேபோல நடிகர் ஜெயராம் கேரளாவைச் சேர்ந்தவராக இருந்தாலும் தமிழ்நாட்டிலிருந்து விருது தருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்திலிருந்து விருது பெற்றவர்கள்
பத்ம பூஷன்எஸ்.பி.பாலசுப்பிரமணியம், சி.வி.சந்திரசேகர், டாக்டர் சூரியநாராயணன் ராமச்சந்திரன்,

பத்மஸ்ரீஅவ்வை நடராஜன், ஜெயராம், எம்.கே.சரோஜா, எஸ்.ஆர்.ஜானகி ராமன், கோவை நாராயண ராவ் ராகவேந்திரன், ரபீக் அகமது மெக்கா, கைலாசம் ராகவேந்திர ராவ், மாதனூர் அகமது அலி, டாக்டர் சிவபாதம் விட்டல்.

மற்ற பிரபலங்கள்
விப்ரோ தலைவர் ஆசிம் பிரேம்ஜிக்கு பத்ம விபூஷன் விருது கிடைத்துள்ளது. அதேபோல பிரபல தெலுங்கு நடிகர் நாகேஸ்வர ராவ், விஜய் கெல்கர், எம்.எஸ்.அலுவாலியா, பிரஜேஷ் மிஸ்ரா ஆகியோருக்கும் பத்ம விபூஷன் விருது கிடைத்துள்ளது.

நடிகர் சசிகபூர், நடிகை வஹீதா ரஹ்மான், ஐ.சி.ஐ.சி.ஐ. வங்கி தலைவர் சந்தாகோச்சார் ஆகியோருக்கு பத்ம பூஷன் விருது கிடைத்துள்ளது.

நடிகைகள் தபு, கஜோல், பாடகி உஷா உதுப் உள்ளிட்ட 84 பேருக்கு பத்மஸ்ரீ விருது கிடைத்துள்ளது.

தட்ஸ் தமிழ்

நன்றி தினக்குரல்No comments: