உறவியல் ஈக்வேஷன் :-4


.
அனுபவத்தின் பலன் என்ன? நமது கருத்துப் பரிமாற்றத்திற்கும் பேச்சிற்கும் எவ்வகையில் பலம் சேர்க்கிறது இந்த அனுபவம்?

சிம்பிள் லாஜிக் இதோ!

இடம் பொருள் ஏவல் பார்த்துப் பேசு! என்று தமிழில் ஒரு முதுமொழி உண்டு.

விஷயம் தெரியத் தெரிய நம் பேச்சின் நீளம் தானாகவே குறையும். பேச்சின் கூர்மை அதிகரிப்பதோடுஇ தர்க்க வாதங்களில் ஈடுபடுவது அநாவசியம் என்ற உண்மையும் புரியும். சிறு வயதுமுதல் எத்தனையோ சித்தாந்தங்கள்இ சரித்திரங்கள் மற்றும் அறிவியல் உண்மைகள் என்று நம்புபவைகளைஇ நாம் படித்தும் பார்த்தும் உணர்ந்தும் அல்லது கேட்டு நம்பியும் இருப்போம். இந்த நம்பிக்கை மனிதனுக்கு மனிதன் வேறுபடுவது இயல்பே. ஒருவர் மனதில் ஒரு விஷயம் என்ன சூழலில்இ எவ்வளவு ஆழமாகப் பதிகிறது என்பதைப் பொறுத்தே அவர்களின் நம்பிக்கையும் விவாதங்களும் அமையும் என்கிற உண்மையை உணர்ந்தோமாயின் வீண் பேச்சுக்கள் குறையும்.மனிதர்களில் சிலர்இ கேட்கின்ற விஷயங்களை அப்படியே நம்பிவிடுவார்கள். அவர்கள் அப்படி நம்புவதற்கு ஒரே காரணம்இ விஷயத்தை வெளியிடுபவர் தங்களின் நம்பிக்கைக்குரியவர் என்பது மட்டுமே. சிலர் கொஞ்சம் சிந்தித்துஇ விவாதித்துஇ பின்னர் அவர்கள் மனம் ஏற்றுக் கொள்ளும்படியான ஆதரங்கள் இருப்பின் நம்புவார்கள். இன்னும் சிலர் தாமே அந்த விஷயத்தை அனுபவித்து உணராதவரை நம்பவே மாட்டார்கள். இன்னும் சிலர் தங்களின் உள்ளுணர்வு சொல்வதையே பெரிதும் பின்பற்றுவார்கள்இ இப்படிப்பட்டவர்களை ஐவெரவைiஎந என்று சொல்வார்கள்

பொதுவாக நான்கு பேர் கூடும் இடத்தில் இப்படிப்பட்ட குணமுடையவர்கள் என்ன விகித்தில் வேண்டுமானாலும் இருக்கலாம். அவர்கள் எந்த வகையினர் என்று எப்படி அறிவது? இதற்கு ஏதாவது வழி உண்டா?

ரைட்! நீங்கள் சொல்வது சரிதான். கொஞ்ச நேரம் அவர்களின் பேச்சை கவனித்தாலே அவர்கள் என்ன டைப் என்று தெரிந்துவிடும். பிறகு நாம் அவர்களிடம் பேசலாமா வேண்டாமா என்று முடிவு செய்து கொள்ளலாம். பெரும்பாலும் ஒரு விஷயத்தைப் பற்றிய போதுமான அறிவும் தெளிவும் இருந்தால் மட்டுமே பேசத் துவங்குவது மிகவும் சிறந்த பழக்கமாகும். அப்படித் தெளிவில்லாதபோதுஇ பிறர் சொல்லும் விஷயங்களை கவனித்து நம் அறிவுக் கருவூலத்தில் சேமிக்கலாம். அதில் நமக்கு கருத்து வேறுபாடிருப்பின் முழு பேச்சையும் கேட்டுவிட்டு பிறகு தெரிவிப்பது ஆரோக்கியமான பழக்கமும் நாகரிகமும் ஆகும்.

நம் பேச்சை ஒருவர் கவனித்தால் நமக்கு என்ன சந்தோஷம் கிடைக்குமோஇ அதே சந்தோஷத்தை நாம் மற்றவருக்கு கொடுப்பதன் மூலம்இ நம் கருத்தும் பதிவாகும் நம் மேல் மதிப்பும் உருவாகும்.

இந்தக் கட்டுரையில் நாம் என்ன வகையான உறவியல்பற்றி விவாதித்தோம்?
கண்டுபிடிச்சாச்சா?

ஆம்! சரிதான். நம் மனத்துடன் நாம் கொள்ள வேண்டிய உறவுமுறை பற்றித்தான்


உள்ளதில் நல்லவை சொல் பிறனை
கொல்வதும் கொள்வதும் சொல

3 comments:

kirrukan said...

[quote]விஷயம் தெரியத் தெரிய நம் பேச்சின் நீளம் தானாகவே குறையும். பேச்சின் கூர்மை அதிகரிப்பதோடுஇ தர்க்க வாதங்களில் ஈடுபடுவது அநாவசியம் என்ற உண்மையும் புரியும்.[/quote]


அப்ப உந்த சிட்னி மேடைகளில் மைக்கை பிடிச்சுக்கொண்டு மணித்தியால கணக்காக பேசுகிற ஆட்களில் விசயம் இல்லை என்று சொல்லுறீயள்.

Mashook Rahman said...

My point is length of speech should match its purpose

Ramesh said...

அதை இப்படியும் கூறலாம் நிறைகுடம் தழும்பாது. மிஸ்டர் கிறுக்கன் அதற்காக வெறும்குடமும் தழும்பாது என்று கிறுக்கி விட்டுப் போடதயுங்கோ.

என்ன சோக்கிரட்டீஸ் ஞாபகம் வருகின்றதோ?