.
நாடெங்கிலும் உள்ளூராட்சி மன்ற தேர்தல்கள் சூடு பிடிக்க ஆரம்பிக்கின்றன. தேர்தல்கள் ஆணையா ளர் திணைக்களம் கட்சி வேட்பாளர்களுக்கும், சுயே ச்சை குழுக்களின் வேட்பாளர்களுக்கும் விருப்பு வாக்கு களை பெறுவதற்கான இலக்கங்களை கொடுப்பதில் ஒரு சிறு தாமதம் ஏற்பட்டு இருந்தாலும் தேர்தல் ஏற்பாடுகள் வேகமாக நடைபெறுகின்றன.
வேட்பாளர்கள் பல்வேறு இடங்களில் தங்கள் பிரசார காரியாலயங்களை தேர்தல் சட்டத்தை உதாசீனம் செய்து இப்போது திறந்த வண்ணம் இருக்கிறார்கள்.
தேர்தல் ஆணையாளர் தயா னந்த திஸாநாயக்க பொலிஸாருக்கு விடுத்துள்ள பணிப்புரை யில் ஒவ்வொரு வேட்பாளருக்கும் தனது வீட்டில் மாத்திரமே தேர்தல் பிரசார காரியாலயங்களை திறப்பதற்கு சட்டபூர்வ மான அங்கீகாரம் இருக்கிறது என்றும் வேறு இடங்களில் அவ ர்கள் தேர்தல் பிரசார காரியாலயங்களை திறப்பதற்கு பொலி ஸார் இடமளிக்கலாகாது என்று கேட்டுள்ளார்.
எதிர்வரும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் போட்டியிடவுள்ள அனைத்து கட்சிகளினதும் சுயாதீன குழுக்களினதும் வேட்பா ளர்களின் கவனத்திற்காக சில விடயங்களை இங்கு நாம் முன்வைப்பது பொருத்தமாக இருக்குமென்று நினைக்கிறோம்.
1947ம் ஆண்டு அமைச்சரவையில் அங்கம் வகித்த ஜி. ஜி. பொன் னம்பலம் அவர்கள், காங்கேசன்துறையிலே சீமெந்து தொழிற் சாலையையும் பரந்தனில் இரசாயனத் தொழிற்சாலையையும், கிழக்கு மாகாணத்தின் வாழைச்சேனையில் காகிதத் தொழிற் சாலையையும் அமைத்து வடக்கு கிழக்கு மக்களின் நல்வாழ் வுக்காகவும் பொருளாதார சுபீட்சத்திற்காகவும் நடவடிக்கை எடு த்த ஒரு சாதனையாளராக அன்று திகழ்ந்தார். அத்தோடு வட க்கு கிழக்கின் அபிவிருத்தி செயற்பாடுகள் நின்றுவிட்டன.
நாம் இன்று மாறுபட்ட கருத்துக்களை கொண்டிருந்தாலும் அன்று மகாத்மா காந்தியின் அஹிம்சா தர்மத்தை கடைப்பிடித்த தமிழ்த் தலைவர்கள் வடக்கிலிருந்து வந்தார்கள் என்பதை மறந்துவிடலாகாது. அவர்களில் மிகவும் முக்கியமான ஒருவர் தந்தை எஸ். ஜே. வி. செல்வநாயகம் அவர்களாவர். அன் னாரை நாம் எளிதில் மறந்துவிட முடியாது.
அதே போல் டாக்டர் ஈ. எம். வி. நாகநாதன், எஸ். எம். இராசமாணிக்கம், சொல்லின் செல்வர் இராஜதுரை, அமரர்கள் வன்னியசிங்கம், மு. திருச்செல்வம், இராஜவரோதயம், அமிர்தலிங்கம், தர்ம லிங்கம், சிவசிதம்பரம் போன்ற அரும்பெரும் தலைவர்கள் இருந்தார்கள்.
முன்னாள் எதிர்க்கட்சித் தலைவராக இருந்த அமரர் அமிர்தலிங் கம் இந்நாட்டில் சாத்வீகப் போராட்டங்களின் மூலம் தமிழ் மக்களின் உரிமைகளை பாதுகாப்பதற்காக அல்லும் பகலும் போராடி வந்தார். அன்று அமிர்தலிங்கம் அவர்களை அவ ரது கொழும்பிலுள்ள வாடகை வீட்டில் வைத்து சுட்டுக் கொன்றது யார்? போன்ற வினாக்களுக்கு தமிழ் மக்களுக்கு நிச்சயம் சரியான விடை கிடைத்திருக்கும்.
தந்தை செல்வா அவர்களின் வழியில் வந்த இன்றைய பாராளு மன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா அரசாங்கம் மேற் கொள்கின்ற நல்ல விடயங்களுக்கு நாம் உதவி செய்வோம் என்று சொல்லியிருப்பது உண்மையிலேயே மகிழ்ச்சியூட்டக் கூடியதொரு தகவலாகும்.
அமரர் ஜி. ஜி. பொன்னம்பலம் வடக்கு, கிழக்கு பகுதியின் பொருளாதார முன்னேற்றத்திற்காக மூன்று பாரிய தொழிற்சா லைகளை ஆரம்பித்ததற்கு பின்னர் ஜனாதிபதி மஹிந்த ராஜ பக்ஷ அவர்களின் இன்றைய அரசாங்கமே வடக்கின் வசந் தத்தின் மூலம் மீண்டும் வடபகுதியையும், கிழக்கின் உதயத் தின் மூலம் கிழக்கு மாகாணத்தையும் அபிவிருத்தி செய்து, தமிழ் முஸ்லிம் மக்களின் எதிர்கால நல்வாழ்வுக்காக சிறந்த அடித்தளத்தை அமைத்து வருகிறது.
ஜனாதிபதி அவர்களின் வழிகாட்டலுக்கு அமைய இன்று பொருளாதார அபிவிருத்தி துறை அமைச்சர் பஷில் ராஜபக்ஷவும் அம்பாந்தோட்டை தொகுதியின் இளம் பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவும் வட பகுதியில் மீண்டும் பொருளாதார மறுமலர்ச்சியை ஏற்படுத்துவதற்கான நல்ல பல திட்டங்களை வெற்றிகரமான முறையில் நிறைவேற்றிக் கொண்டிருக்கிறார்கள்.
எதிர்வரும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் வாக்காளப் பெருமக்கள் இன்றைய யதார்த்தத்தை உணர்ந்து சரியான தீர்மானத்தை எடுத்து நாட்டிற்கு சேவை செய்யக்கூடிய நல்லவர்களை தெரிவு செய்வது அவர்களின் தலையாய கடமையாகும் என்பதை இந்த சந்தர்ப்பத்தில் ஞாபகப்படுத்துவது பொருத்தமாகும்.
நன்றி தினகரன்

No comments:
Post a Comment