வேலை வாய்ப்புகள் அதிகரித்துள்ளது

வேலை வாய்ப்புகள் பொருளியலாளர்களின் எதிர் பாப்;பினை விட இரண்டு மடங்கால் மே மாத்தில் அதிகரித்துள்ளது எனப் புள்ளி விபரங்கள் காட்டுகின்றன. வேலையற்றோர் தொகை இம் மாத்தில் 0.24 விளுக்காடுகளால் வீழ்ச்சியடைந்துள்ளது. தற்போது வேலையற்றோர் தொகை 5.2 விளுக்காடாக உள்ளது எனப் புள்ளிவிபரத் திணைக்களம் தெரிவித்துள்ளது. 2010 ம் ஆண்டின் முதல் 5 மாதக் காலப் பகுதயில் ஒரு லட்சத்து 38 ஆயிரத்து தொளாயிரத்தால் அதிரித்துள்ளது எனவும் இது ஒரு வலுவான வளர்ச்சி எனவும் கருத்துத் தெரிவிக்கப்பட்டுள்ளது.


பெண்களுக்கு ஆண்களுக்கு வழங்கப்படும் சம சம்பளம் வழங்கப்படல் வேண்டும் என்ற கோரிக்கையை முன் வைத்து ஆயிரக்கணக்கானோர் சிட்னியில் பேரணி நடாத்தியுள்ளனர். பெண்கள் அதிகமாக வேலை செய்யும் துறைகளைப் பிரதிநிதிதுவப் படுத்தும் Australian Services Union  தொழில்ச் சங்கத்தினால் இப் பேரணி ஒழுங்கு செய்யப்பட்டிருந்தது. அவுஸ்திரேலியப் புள்ளி விபரத் திணைக்களத் தகவல்களின் படி ஆண்களை விட பெண்கள் 18 விளுக்காடுகள் குறைவான சம்பளம் பெறுகின்றனர் எனவும் இது ஒரு பெண்ணின் வாழ் நாளில் 1 மில்லியன் டொலர்கள் குறைவாக உழைப்பதற்குச் சமனானது என்று சொல்லப்படுகின்றது.

0000000000000000000

நியூ சவுத் வேல்ஸ் எதிர் கட்சித் தலைவர் தனது கட்சி பதவிக்கு வந்தால் நியூ சவுத் வேல்ஸ்சின் உள்கட்டுமாணப் பணிகளில் செலவிட 5 பில்லியன் டொலர்கள் பெறுமதியான நிதி உருவாக்கப்படும் எனத் தெரிவித்துள்ளார். இந் நிதி பாரிய போக்கு வரத்துத் திட்டங்களை மேற்கொள்ளப் பயன் படுத்தப்படும் எனத் தெரிவித்தார். கடல் நீரை நன் நீராக்கும் ஆலையைக் குத்தகைக்கு வழங்குவதன் மூலமும் அரச கடன்கள் மூலமும் இந் நிதி திரட்டப்படும் என அவர் தெரிவித்தார். மேலும் தன்து கட்சி முதியவர்களுக்கு வழங்கப்பட்டுள்ள முத்திரை வரிச் சலுகையைக் தொடரும் எனவும் தெரிவித்தார்.

No comments: