பணம் எடுத்துச் சென்ற பாதுகாவலர் சுடப்பட்டு மரணம்.ஒரு சப் பாதுகாவலர் வழமைபோல சிட்னி நகரத்தில் அதிகாலை பணம் எடுக்க சென்ற போது திருடன் ஒருவனால் சுடப்பட்டு மரணமடைந்துள்ளார்.

சசெக்ஸ்  வீதியில் அமைந்துள்ள டார்லிங் பாக்கில் உள்ள ஒரு கட்டிடத்தின் உள்வாசலில் அவருடைய நெஞ்சில் ஒரு முறை சுடப்பட்டார். படுகாயத்தோடு அவர் றோயல் பிறின்ஸ் அல்பிறட் மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லப்பட்டார். அங்கு 59 வயது நிறைந்த அந்த பாதுகாவலர் சில மணி நேரத்திற்கு பின்னர் மரணமடைந்தார்.

இந்த சம்பவத்தை அடுத்து சசெக்ஸ்  வீதி மூடப்பட்டதால் போக்குவரத்து  நெரிசல்   அவ்விடத்தில் ஏற்பட்டது.
அங்கு வந்த நான்கு திருடர்கள் ஒரு பணப்பையோடு தப்பிச் சென்றுவிட்டார்கள்.

No comments: