மெல்பேர்னில் ஜூன் மாதம் 20ம் திகதி ஞாயிற்றுக்கிழமை இடம் பெறுகிறது

மெல்பேர்னில் ஜூன் மாதம் 20ம் திகதி ஞாயிற்றுக்கிழமை “சாந்தாஸ் கேக்ஸ்”, சாந்தாஸ் சமையல்” நூல்களின் அறிமுகமும் கூடவே ஒரு கேக் கண்காட்சியும் நடைபெறவுள்ளது.


                           தமிழ் மணக்கும் கேக் கண்காட்சி மற்றும் நூல் அறிமுகம்
தற்சமயம் மென்பேர்னை வசிப்பிடமாக கொண்டுள்ள திருமதி சாந்தா ஜெயராஜ் கேக் செய்முறை, அலங்காரம், சமையல்கலை, மலர் அலங்காரம், மணப்பெண் அலங்காரம் போன்ற நுண்கலைகளில் 35 ஆண்டுகளுக்கும் மேல் அனுபவம் பெற்றவர்.

இவர் எழுதியுள்ள நூல்களான “சாந்தாஸ் கேக்கஸ்”, சாந்தாஸ் சமையல்” இரண்டும் “விகடன்” பிரசுரத்தில் அண்மையில் வெளியாகியுள்ளன. கேக் செய்முறை, சமையல் கலைகளைப் படிபடியாகக் கற்றுத் தருகின்ற முறையில் மிக எளிமையாகவும், நன்கு புரியும்படியும் பல விளக்கப் படங்களுடன் இரு நூல்களும் அமைக்கப்பட்டுள்ளன.

சாந்தா ஜெயராஜ் “பல்கலைக் களஞ்சியம்” எனும் நுண்கலைக் கல்லூரியினைக் கடந்த 15 ஆண்டுகளாக மேற்கு அவுஸ்திரேலியாவில் நடாத்தி “கலைச்சரம்” எனும் பெயரில் இசை, நாட்டியம், நாடகம், நாட்டிய நாடகம் போன்ற பல்சுவை நிகழ்ச்சிகளையும் நடத்தி வந்துள்ளார்.

பிரபல தமிழ்ப் பத்திரிகைகளில் சிறுகதைகள், திரை விமர்சனங்கள், கட்டுரைகள் எழுதியிருக்கும் இவர், தமிழகத் தொலைக்காட்சிகளில் சமையல்கலை, கேக் செய்முறை நிகழ்ச்சிகளையும் நடத்திப் புகழ் பெற்றவர்.
பல்கலைக் களஞ்சியத்தின் சார்பில் சிங்கப்பூர், கனடா, தமிழ்நாடு, ஜெர்மனி, லண்டன் ஆகிய நாடுகளில் கேக் கண்காட்சிகள் மற்றும் வகுப்புகள் நடத்தியிருக்கிறார்.

கேக் செய்முறையில் ஒரு புதிய பரிமாணமாக தமிழ் பண்பாட்டுடன் தொடர்புடைய பல கேக்குகள் காட்சிக்கு வைக்கப்படவிருக்கின்றன. குத்துவிளக்கு, பூரண குடும்பம், விநாயகர், கால் சலங்கை, மகாகவி பாரதி போன்ற இன்னும் பல கேக்குகள் இடம்பெறவுள்ளன.

இவர் எழுதியுள்ள “சாந்தாஸ் கேக்ஸ்”, சாந்தாஸ் சமையல்” ஆகிய நூல்கள் அண்மையில் பேர்த் மற்றும் சிட்னி மாநகரங்களில் திருமதி மனோரமா அவர்களினால் வெளியிட்டு வைக்கப்பட்டிருந்தது. இந்நிகழ்வு மெல்பேர்னில் ஜூன் மாதம் 20ம் திகதி ஞாயிற்றுக்கிழமை “சாந்தாஸ் கேக்ஸ்”, சாந்தாஸ் சமையல்” நூல்களின் அறிமுகமும் கூடவே ஒரு கேக் கண்காட்சியும் நடைபெறவுள்ளது.

5 comments:

Anonymous said...

The books are very expensive. I saw it in the spice shops in Sydney and they cost $24 each. Most of the people are just looking at it and walking away without buying. It will be good if the books are sold for lessor price. In that case most of the people will buy. If you mark it for $24 only few people will buy it. But whereas if you mark it for say $10, 100's of people will buy your book and by this you will also make money and the people will also gain by using your recipes. This is most of our opinion. Thanks Sandiya.

Anonymous said...

I have read the books.They are really worth the money.The cook book not only gives recipes but also educates us about fruits, veges,spices and herbs and also about vitamins.Same with the cake book.It starts from the scratch.It explains about all the ingredients,gives a clear picture about the equipments and how to use them.The decoration of the cakes are explained with step by step illustrations and photographs.I would like to congratulate Mrs.Shantha Jeyaraj and Vikatan pirasuram for giving two wonderful and useful books.Thank you.Kalyani Sydney.

Anonymous said...

Both Shantha's Cakes and Shantha's samayal are fantastic books.very colorful,lot of good recipes,lots of important information and very different from other Tamil cookery books.We wish her success with the Cake Exhibition and the Book launch in Melbourne.Kavya and Vathana Sydney.

Anonymous said...

Congratulations and good luck with your Cake show and Book Introduction.We are looking forward to it.Mrs.Pathmanathan,Melbourne.

Anonymous said...

Madam,Good luck with your Cake show and the book release.Regards,Jeyaram.