தமிழ் ஊக்குவிப்புப் போட்டிகள்  2010‏


2010ம் ஆண்டுக்கான தமிழ் ஊக்குவிப்புப் போட்டிகள் ஆகஸ்ட் மாதம் 14, 15, 21, 22ம்
திகதிகளில் நடைபெறவுள்ளன.
இப்போட்டிகளுக்கான விபரக் கொத்து  மின்னஞ்சல் மூலம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.
இவ்வாண்டு சில முக்கிய மாற்றங்கள் செய் யப்பட்டுள்ளன.
1) போட்டியாளர்கள் தமது வயதுப் பிரிவிற்கான  எந்தப் போட்டிகளிலும்  பங்குபற்றலாம்.
2)  மேற்பிரிவு 10-11 வயது, அதிமேற்பிரிவு: 12-14 வயது, இளைஞர் பிரிவு: 15-17 வயது
3) ஒவ்வொரு போட்டி க்கும் $5.00 அறவிடப்படும். ஒவ்வொரு போட்டியாளரும் போட்டிக்கான நிர்வாக  கட்டணமாக $5.00 அறவிடப்படும்.
விபரக் கொத்தையோ மேலதிக  விபரங்களையோ பெறவிரும்பின் எமது இணையத்தளத்தில் (www.kalappai.org) பெற்றுக் கொள்ளலாம். போட்டி பற்றிய விபரங்களைப்  பெற எம்முடன் பின்வரும்தொலைபேசியில் தொடர்பு  கொள்ளலாம் .
சிட்னி : (02) 8824 3051 / 0419 255 625
மெல்பேன்: 03-9449 7887
விண்ணப்ப முடிவு திகதி: 12/07/2010
விண்ணப்பங்களை தபால் மூலமாகவோ அல்லது உங்்கள் தமிழ்ப் பாடசாலையூடாவோ அல்லது மின்னஞ்சல் மூலமாகவோ அனுப்பி வைக்கலாம்.
உங்களுக்கு எமது வாழ்த்துக்கள்.

Admin, TC 2010
Australian Society of Graduate Tamils (ASoGT)
PO Box 4040 Homebush, NSW 2140
Tel :612 8824 3051 or 0419 255 625
`16 YEARS IN SERVICE OF TAMIL'

2 comments:

Anonymous said...

தமிழ் ஊக்குவிப்பு போட்டிகள் 2010 சபை உறுப்பினர்களின் கவனத்திற்கு.

கடந்த சனிக்கிழமை ஒரு தமிழ் பாடசாலையின் முன்பாக ஒரு தாயார் உங்கள் போட்டிக்குரிய விண்ணப்பப்படிவம் பெறும் பொழுது நானும் அருகில் நின்றேன். அந்தத் தாய் தனது 7 வயது மகளுக்கு ஒரு முழுப்பக்கத்தில் இருந்த பேச்சு போட்டியைக் கண்டு திகைத்து விட்டார்.
தமிழை இரண்டாம் மொழியாக கற்கும் தனது 7 வயது மகளுக்கு இது மிகவும் அதிகம் என்றார் தாயார். இதற்க்கு படிவம் வழங்கிய சபை உறுப்பினர் பதில் ஈழத்தில் தமிழை இழந்தோம் இனி இங்குள்ள நாம் தான் எம் மொழி அழியாமல் பாது காக்க வேண்டும் என்றார்.
அந்தத் தாயார் அங்கிருந்து செல்கையில் sorry எனது மகள் இதில் பங்குபற்ற மாட்டார் என்று கூறிவிட்டு சென்றார்.

இதை பார்த்துக் கொண்டு நின்ற எனக்கு தமிழை நாம் வளர்கின்றோமா, அழிக்கின்றோமா என்ற குழப்பம் தான் மிஞ்சியது. ஆம்... இன்று தமிழ் பேசும் பெற்றோர்கள் தமிழை குழந்தைகளுக்கு கட்டாயப் படுத்தும் அல்லது ஊக்குவிக்கும் பெற்றோர்கள் குறைந்து தான் போகின்றார்கள். Homebush போன்ற suburb கலில் இருக்கும் பெற்றோர்கள் இன்னமும் தமிழ் பற்றுடனும் தமிழ் வளர்பதிலும் ஆர்வமாகவே இருகின்றனர். இந்த போட்டிகள் இல்லாமலேயே அவர்கள் தமிழை வளர்ப்பார்கள்.

ஆனால் தமிழ் வளர வேண்டிய இடம் Homebush தவிர்ந்த ஏனைய suburb ஹாலில் வாழும் தமிழ் அன்பர்களிடம் தான். இதற்கு பக்கம் பக்கமாக பேச்சுப் போட்டிகளை வைத்து செய்ய முடியுமா? ஏன் இவற்றைக் குறைத்து Homebush தவிர்ந்த பிரதேசங்களில் வாழும் தமிழை மறக்கும் தமிழ் மக்களையும் இவற்றில் பங்கு பற்றச் செய்யலாமே என்ற ஆதங்கத்தில் இதை எழுதுகிறேன். சம்பந்தப்பட்டவர்கள் இதை கருத்தில் கொண்டால் தமிழ் இன்னும் செழிப்படையும் / வளரும் என்பது அடியேனின் தாழ்மையான கருத்து. இதை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கருத்தில் கொள்வார்களா?

தாழ்மையுடன்
தமிழ் அன்பன்

Anonymous said...

நிச்சயமாக கருத்தில் கொள்ள மாட்டார்கள். அவர்கள் வளர்ப்பது தமிழை அல்ல , தங்களை, தங்கள் பெயரை.
நானும் ஒரு தாய் .இதே காரணத்திட்காகவே என் பிள்ளையும் பங்கு பெறுவதில்லை.
நிச்சயமாக அவர்கள் மாறப் போவதில்லை. நாம் வீட்டில் தமிழை பேசி தமிழை வளர்ப்போம .