அவுஸ்ரேலிய செய்திகள்

.
புலேந்திரனுக்கு ஐந்தரை வருடச் சிறைத்தண்டனை

சட்டவிரோதமாக படகு மூலம் ஆட்களை கடத்தியமை தொடர்பான குற்றச்சாட்டில் ஒரு தமிழருக்கு நீதிமன்றம் ஐந்தரை வருடகால சிறைத்தண்டனை விதித்துள்ளது. 36 வயதான பத்மேந்திரா புலேந்திரன் என்பவருக்கே இத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. இவர் சிட்னி நகரில் கடையொன்றுக்கு உரிமையாளராக உள்ளார்.



2009ம் ஆண்டு 194 இலங்கையர்களை அவுஸ்திரேலிய கடற்பரப்புக்குள் கொண்டு வந்தமை தொடர்பாகவே இவருக்கு நீதிமன்றம் இத்தண்டனையை அளித்துள்ளது. அகதிகளில் 20 பேருக்கான அவுஸ்திரேலியா முகவராக செயற்பட்டதன் மூலம் இவருக்கு 42655 டொலர் லாபம் கிடைத்திருக்கும் எனவும் பின்னர் இப்படகில் அளவுக்கதியமான நபர்கள் இருந்தமையால் அவர்களின் பாதுகாப்பு குறித்து கவலை கொண்டு பொலிஸாருக்கு இப்படகு பற்றி அறிவித்ததாக நீதிபதி கூறியுள்ளார்.

புலேந்திரன் 2007ம் ஆண்டு மார்ச் மாதம் 15 ஆயிரம் அமெரிக் டொலர் செலவிட்டு படகு மூலம் அவுஸ்திரேலியாவுக்கு வந்ததாகவும் சுத்திகரிப்பாளராக வேலை செய்த பின்னர் கடையொன்றை அவர் வாங்கியதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஐந்தரை வருட சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ள அவர் 3 வருடங்கள் வரை வெளியில் வர முடியாது. 2012ம் ஆண்டு நவம்பர் மாதம் அவர் விடுதலை செய்யப்படுவதற்கான தகுதியைப் பெறுவார் என் எதிர்பார்க்கப்படுகிறது.

No comments: