தமிழ் அகதிகளின் ஆர்ப்பாட்டம் முடிவுக்கு வந்துள்ளது

.

விலாவூட் தடுப்பு நிலையத்தின் கூரை மீதேறி
தமிழர்களான 9 புகலிடக்கோரிக்கையாளர்கள் நடத்திய ஆர்ப்பாட்டம் 29 மணித்தியாலங்களின் பின்னர் முடிவுக்கு வந்துள்ளது.

குடிவரவுத் திணைக்களம் தமது விண்ணபப்டிவங்களை மீள்பரிசீலனை செய்யாவிட்டால், கூரையிலிருந்து பாயப்ப போவதாகவும் ஆர்ப்பாட்டக்காரர்கள் அச்சுறுத்தியுள்ளனர்.



ஐ.நாவின் அகதிகளுக்கான உயர்ஸ்தாகிகராலய அதிகாரிகளடனான பேச்சுவார்த்தையை அடுத்து, ஆர்ப்பாட்டக்காரர்கள் கீழே இறங்கினர்.

36 வயது நிறைந்த பிஜி நாட்டைச் சேர்ந்த ஜொசெபா ரங்செனி திங்கட்கிழமை தற்கொலை செய்து கொண்டார். இவர் மீண்டும் பிஜிக்கு திருப்பியனுப்பி வைக்கப்படவிருந்து நிலையில் தற்கொலை செய்து கொண்டதாக அகதிகளுக்கான சட்டத்தரணிகள் தெரிவித்தனர். கடந்த ஒகஸ்ட் மாதம் 17ம் திகதியிலிருந்து ஜொசெபா ரங்செனி தடுத்து வைக்கப்பட்டிருந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.


No comments: