*இந்தியாவில் பொதுநலவாய விளையாட்டுக் கிராமம் திறந்து வைக்கப்பட்டுள்ளது *இந்தியாவில் நேரு விளையாட்டரங்கின் நடைப்பாலம் உடைந்ததில் 23 பேர் காயம் | |||
சென்ற செவ்வாய்க்கிழமை நடைப்பாலத்தை சீரமைக்கும் பணி நடைபெற்ற வேளையே இந்த அனர்த்தம் ஏற்பட்டுள்ளது.
இதில் காயமடைந்த 23 பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் 5 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
10.5 கோடி செலவில் சண்டீகரைச் சேர்ந்த பிஎன்ஆர் இன்பிரா நிறுவனம் அரங்கின் புனரமைப்புப் பணியை மேற்கொண்டு வருகிறது. வந்தது.
எவ்வாறெனினும், அக்டோபர் 3ஆம் திகதிக்குள் பாலம் மீண்டும் கட்டப்பட்டுவிடும் என்று மேற்படி நிறுவனம் தெரிவித்துள்ளது.
இந்த விளையாட்டரங்கில் போட்டியின் ஆரம்ப மற்றும் நிறைவு விழா நிகழ்ச்சிகள் நடைபெறவுள்ளன.
xxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxx
இந்தியாவில் பொதுநலவாய விளையாட்டுக் கிராமம் திறந்து வைக்கப்பட்டுள்ளது
இந்தியாவில் ஆரம்பமாகவுள்ள பொதுநலவாய விளையாட்டுப் போட்டிகளுக்காக அமைக்கப்பட்ட கிராமம் புதுடில்லியில் திறந்து வைக்கப்படவுள்ளதாக இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன.
பொதுநலவாய விளையாட்டுப் போட்டிகள் திட்டமிட்டப்படி நடைபெறும் என மத்திய அரசு அறிவித்துள்ளது. போட்டி ஏற்பாடுகளில் தற்போது உள்ள குறைபாடுகள் அனைத்தும் விரைந்து சீர்செய்யப்படும் என்றும் மத்திய அரசு தெரிவித்துள்ளது.
டில்லியில் எதிர்வரும் அக்டோபர் 3ஆம் திகதி முதல் 14ஆம் திகதி வரை பொதுநலவாய விளையாட்டுப் போட்டிகள் நடைபெற உள்ளன. பொதுநலவாய போட்டிகள் ஆரம்பமாக, இன்னும் சில நாட்களே உள்ள நிலையில், விளையாட்டு அரங்கம் மற்றும் வெளிநாட்டு வீரர்களுக்கான தங்குமிடம் போன்றவற்றில் குறைகள் இருப்பதாக தொடர்ந்து செய்திகள் வெளியாகி கொண்டிருப்பது, அனைத்து தரப்பினரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
பல்லாயிரம் கோடி ஊழல்
'வெயிட்லிப்டிங்' (பளு தூக்குதல்) அரங்க மேற்கூரையும் இடிந்து விழுந்தது. இதில் எவருக்கும் காயம் ஏற்படவில்லை. இதனையடுத்து மேலும் விளையாட்டுக்குழு அமைப்பினருக்கு பெரும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது.
ஏற்கனவே பல்லாயிரம் கோடி ஊழல் நடந்திருக்கிறது என்ற குற்றச்சாட்டை மெய்யாக்கும் வகையில் இப்படி நாள்தோறும் ஏதாவதொரு சம்பவம் நடந்து வருகிறது. பாதுகாப்பு பிரச்சினை போன்ற காரணங்களுக்காக இங்கிலாந்து வீரர்கள் உலக 'ட்ரிபிள் ஜம்ப்' வீரர் பிலிப்ஸ் இடோவ், கிறிஸ்டைன் ஓகுருகு, லிசா டாபிரிஸ்கி போன்ற தடகள வீரர்களும் பொதுநலவாய போட்டியிலிருந்து விலகியுள்ளனர்.
பொதுநலவாய விளையாட்டுக் கிராமத்தை ஆய்வு செய்ய வந்த நியூசிலாந்து பிரதிநிதிகள், அக்கிராமம் சுத்தமாக இல்லை என்றும் வீரர்கள் தங்குவதற்கு தகுதியற்றதெனவும் புகார் கூறினார்.
இந்நிலையில் பொதுநலவாய போட்டிகள் திட்டமிட்டப்படி நடைபெறும் என்றும், ஏற்பாடுகளில் உள்ள குறைகள் அனைத்தும் விரைவில் சீர்செய்யப்படும் எனவும் மத்திய அமைச்சரவை செயலாளர் சந்திரசேகர் கூறியுள்ளார்.
அதேபோல், திட்டமிட்டபடி பொதுநலவாய போட்டிகள் நடைபெறும் என டில்லி மாநில முதல்வர் ஷீலா தீட்சித் உறுதியளித்துள்ளார்.
நன்றி வீரகேசரி இணையம்
No comments:
Post a Comment