தமிழ் ஊக்குவிப்புப் போட்டி 2010

.
தமிழ் பேணலில் பதினாறு வருடங்கள் ;
தமிழ் ஊக்குவிப்புப் போட்டி 2010
அவுஸ்திரேலியப் பட்டதாரிகள் தமிழர் சங்கம்



அகில அவுஸ்திரேலிய தமிழ் ஊக்குவிப்புப் போட்டிகளும் பரிசளிப்பு விழாவும் 2010

அவுஸ்ரேலியாவின் நியூசவுத்வேல்ஸ் மாநிலத்தில் கடந்த 16 ஆண்டுகளாக நடாத்தப்பட்ட தமிழ் ஊக்குவிப்புப் போட்டிகள் 10வது ஆண்டிலிருந்து அவுஸ்ரேலியா பட்டதாரிகள் தமிழர் சங்கத்தின் தலைமையின் கீழ் நடாத்தப்பட்டு வருகின்றன. இவ்வருடமும் இந்த தமிழ் ஊக்குவிப்புப் போட்டிகள் சிட்னியில் மட்டுமல்லாது மற்றைய அவுஸ்திரேலிய மாநிலங்களிலும் நியூசிலாந்திலும் நாடாத்தப்பட்டுள்ளன என்பதைப் பெருமையுடன் தெரிவித்துக் கொள்கின்றேன். இம்முறை எழுத்தறிவுப் போட்டி, கவிதை மனனப் போட்டி, பேச்சுப் போட்டி என 10 போட்டிகள்  அவுஸ்திரேலிய, நியூசிலாந்து மட்டத்தில் 


நடாத்தப்பட்டு முதற்பரிசுகளாக தங்கப் பதக்கங்கள் பரிசாக வழங்கப்பட இருக்கின்றன.
இதற்கு மாநில மட்டத்திலும், தேசிய மட்டத்திலும் சான்றிதழ்களும் பரிசுகளும்
வழங்கப்படுகின்றன. இவ்வருடப் போட்டிகளுக்கான கருப்பொருள், “புதியதோர் உலகம் செய்வோம்" என்பதாகும். பெற்றோருக்கும், ஆசிரியர்களுக்கும் போட்டியாளர்களுக்கும் எமது போட்டிகள் பற்றிய விளக்கங்களை அளிப்பதற்கென போட்டிகளுக்கான விபரக் கொத்து வெளியிடப்பட்டதுடன், எமது விபரக் கொத்தில் போட்டிகள் ஒவ்வொன்றுக்கும் விளக்கத் தாள்களும் இணைக்கப்பட்டுள்ளன. அதில் போட்டி பற்றி பொது அறிவித்தல்களும், போட்டியில் எதிர்பார்க்கப் படும் விடயங்களுக்கு விளக்கங்களும் அளிக்கப்பட்டுள்ளன. பெற்றோருக்கும் ஆசிரியர்களுக்கும் போட்டி பற்றிய விளக்கத் தாள்கள் மிகவும் உபயோகமாக இருந்ததாக அறிவதில் மிகவும் மகிழ்ச்சி அடைகின்றேன்.
சிட்னியில் இம்முறையும் 300க்கு மேற்பட்ட போட்டியாளர்கள் பங்குகொண்டார்கள்.
இம்முறை எல்லாப் போட்டிகளையும் ஹேர்ம்புஷ் ஆரம்ப பாடசாலை   மண்டபத்தில் ஹேர்ம்புஷ் தமிழ் கல்வி நிலையத்தின் உதவியுடன் இரண்டு வார இறுதி நாட்களில் நடாத்தினோம். 8  வயதிற்கு கீழ்ப்பட்ட போட்டியாளர்கள் எல்லோருமே வெற்றியாளர்கள் என்று பரிசளிக்கப்பட்டு இன்று கௌரவிக்கப்பட இருக்கிறார்கள். இவர்களுக்கு 300 பரிசுகளும்,  30 வெற்றி, நினைவுக் கேடயங்களும்  பரிசாக வழங்கப்படவிருக்கின்றன. தேசிய மட்டத்தில் பங்கு கொண்ட மாணவர்களுக்கு 110 பரிசுகளும், 10 தங்கப் பதக்கங்களும் பரிசாக வழங்குகின்றோம் என்பதை பெரு மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கின்றேன்.

தேசியப் போட்டிகளின் விபரங்கள் பின்வருமாறு:
நேரம்: மு.ப. 10.00 மணியிலிருந்து, சனிக்கிழமை, 02-10-10ம் திகதி
இடம்: Darcy Road Public School, Darcy Road, Wentworthville 2145

பரிசளிப்பு விழா விபரங்கள் பின்வருமாறு:
நேரம்: பி.ப. 4.00 மணி, ஞாயிற்றுக் கிழமை, 03-10-10 ம் திகதி
இடம்: Ryde Civic centre, 1 Devlin Street, Ryde
தமிழ் ஆர்வலர்களையும், பெற்றோர்களையும் அன்புடன் அழைக்கின்றோம்,

அன்புடன்
திரு. க. நரேந்திரநாதன்
தேசிய இணைப்பாளர், தமிழ் ஊக்குவிப்புக் குழு 2010

No comments: