விஸ்வ்வசேது இலக்க்கியப்ப்பாலம்

 விஸ்வ்வசேது இலக்க்கியப்ப்பாலம்
(நினைவு நல்ல்லது வேண்டும்)

அன்புடன் எழுத்தாளர்கள், இலக்கிய ஆர்வலர்களுக்கு,
மிக விரைவில் விஸ்வசேது இலக்கிய பாலம் தனது கணனிப் பக்கத்தை வெளியிட உள்ளது என்பதனை
மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கின்றேன்.
இது 3 பிரதான பக்கங்களை கொண்டிருக்கும். இணையத்தளங்களில ; உலா வந்து கொண்டு இருக்கும்
வௌ;வேறு தளங்களை ஒருங்கிணைத்த வடிவமாக இருக்கும்.
பக்கம் 1 : பதிப்பகம்-வெளியீடுகள்-ஒன்லைனில் நூல்களை; வேண்டுதல் பற்றிய தகவல்கள் இடங்கும்.
பக்கம் 2 : இதில் இலக்கிய உலகம் பற்றிய செய்திகள்-தகவல்கள் மற்றும் எழுத்தாளர்களின் இலக்கிய
படைப்புகள் (கதை-கவிதை-கட்டுரை), எழுத்தாளர்களின் டிடழபகள் இடம் பெறும்.
பக்கம் 3 : இது இளைய தலைமுறையினர்களின் ஆக்கங்கள் அவர்களின் கிறவிக்ஸ் திறமையுடன்
வெளியிடும் பக்கமாக அமையும். இது அவர்களுக்கான பக்கமாக அமையுமிடத்து அவர்களை
அவர்களாகவே வளர்த்துக் கொள்ள தளம் அமைக்கும். இவ்வாறு டென்மார்க்கில் இயங்கும்
இளையோரின் இணையத்தளத்தில் வந்த கவிதைகளின் தொகுப்புத்தான் ”மெல்லத் தமிழ் இனித்
துளிர்க்கும”; என்ற கவிதை தொகுதியாக 2008ல் வெளியாகியது. தற்பொழுது அதே பணி இந்த
இணையத்தளத்தின் மூலம் உலகளாவிய வகையில் விரிவுபடுத்தப்படுகிறது.
.

சிறுகதை தொகுப்பு;பு :
இதில் மிகச் சிரமமான பணியாதெனில் இதில் எந்தக் கதைகளை தேர்ந்தெடுப்பது என்பதை விட எந்தக்
கதைகளை நீக்குவது என்பது தான். இது ஒரு போட்டி நிகழ்ச்சி என்றால் மிகச் சுலபமாக முதல் மூன்றைத்
தெரிவு செய்யலாம். இது அப்படியில்லை. அனைவருமே உலகம் முழுக்க உள்ள மற்றைய
எழுத்தாளர்களுக்கும் வாசகர்களுக்கும் அனுப்பி வைத்த கதைகள். அல்லது அவர்களது அன்பளிப்புகள்.
அதனுள் தெரிவு செய்வது என்பது மிகக் கடினமான பணி. தற்பொழுது அதை செய்து கொண்டு இருக்கின்றேன்.
முடிவினை நேரடியாக எழுத்தாளர்களுக்கு தெரிவிக்க இருக்கின்றேன்.
லவுட் ஸ்ப்பீகீக் கேர்ஸ்ஸ:;:;:
இதை ஒலிபெருக்கிகள் என்றே எழுதியிருக்கலாம். ஆனால் லவுட் ஸ்பீக்கேர்ஸ் என்று எழுதும் பொழுதுதான்
அந்த சொல்லுக்குரிய எபெக்ட் கிடைக்குது. என் காதே அதிருது - ஆகவே எழுத்துச்சீர்திருத்தம் செய்வோர்கள்..
.மொழிசீர்திருத்தம் செய்வோhகள் எல்லோரும் என்னை மன்னிக்க.
நான் மூன்றாம் ஆண்டு படித்துக் கொண்டு இருந்த பொழுது எங்கள ; ஊரில் ஒரு மைல் சுற்றளவுக்குள்
சின்னதும் பெரியதுமான 3 கோயில்கள் மட்டுமே இருந்தன. பின் சாதிக்கலவரமும் சவுதிக்கு ஆட்களும் போய்
வரத் தொடங்க சின்ன சின்ன ஆலமரத்தடி வைரகோயில்கள் எலல் hம் பெரிய கோயிலாக நான் அட்வான்ஸ்
லெவலுக்கு வந்த போது வருடத்தில் திருவிழா நடக்கும் வரிசையில் 9 கோயில்கள் வந்து விட்டன. ஒவ்வொரு
கோயிலிலும் குறைந்தது ஆண்டுக்கு 10 நாட்கள் திருவிழா என்ற கணக்கில் பார்த்தாலும் 90 நாட்கள்
திருவிழாக்கள். தவிரவும் சரஸ்வதி பூஜை, திருவெம்பாவை அது இது என்று சுமார் 20 திருவிழா நாட்கள்... 110
நாட்கள ஆயிற்றா? . . .
அப்புறம் கலியாணவீடு தொடங்கி 4ம் சடங்கு வரை நாலு நாட்கள். . . சாமத்திய வீடுகள் 2 நாட்கள். . .
பணச்சடங்குகள் 2 நாட்கள். . .கலைவிழாக்கள். . பாடசாலைகளின் விளையாட்டுப் போட்டிகள். . .என
வருடத்தில் குறைந்தது 60-70 நாட்கள். ஆக மொத்தம் 180 நாட்கள். அதாவது ½ வருடம்.
இந்த ½ வருடமும் ”முதல் வணக்கம் எங்கள் முருகனுக்கே. . ” அல்லது. . . ”விநாயகனே வினை தீர்பவனே”
என்று காலை தொடங்கினால் பின்பு. . . காதல் பாடல்கள். ..தத்துவப் பாடல்கள். . .மாலையில் திரைப்பட
கதை வசனங்கள்.. .என்று போய் பின்னேரத்தில் பழைய பாடல்கள ; என அன்றைய நாள் பூர்த்தி ஆகும்.
தவிரவும் ”திருமண விழாக்களா. ..பூப்புனித நீராட்டு விழாக்களா. .. ” என்று தொடங்கி லவுட் ஸ்பீக்கர்
வைத்திருப்பவர்களின் விளம்பரங்கள் காதைப் பிளக்கும் - அதுவும் ’எக்கோ’ வடிவில்.
புலவர் சவுண்ட். . .புலவர் சவுண்ட். . . புலவர் சவுண்ட். . . புலவர் சவுண்ட். . .என உச்சஸ்தாதியில்
ஆரம்பித்து கீழ்ஸ்தாதியில் வந்து முடியும்.
இதனிடையே தான் எங்கள் படிப்புகள். .ரியூசன் வகுப்புகள். . .தரப்படுத்தல்கள். . .போராட்டங்கள் அனைத்தும்.
வீட்டு மாமரத்தின் கீழ் கதிரையை போட்டுக் கொண்டு படித்தாலும் தருமியிடமும் பாண்டிய மன்னனிடமும்
இரவல் கொடுத்த காதுகளினால் இன்றும் என்னால் திருவிளையாடல் வசனங்களை அட்சரப் பிழையின்றி
ஒப்படைக்க முடியும். . . அவ்வாறே வீரபாண்டிய கட்டப் பொம்மன். . . சரஸ்வதி சபதம் எக்ஸ்செற்றா.
..எக்ஸ்செற்றா. . .
அவ்வாறே கோயில்களில் பிரசங்கங்கள். . .பாட்டுக் கச்சேரிகள். . . நாடகங்கள். . . மேலாக
லவுட்ஸ்பீக்கர்களைக் கழற்ற முதல் அந்த நிகழ்ச்சிகளை ஒருங்கு செய்தவர்களே தங்கள் குரலின்
இனிமைகளால் எம் கிராமத்தையே அவஸ்த்தைப்படுத்துவது என அனைத்தும் காதுவழியே வந்து மூளைக்குச்
செல்லும் பாதைகளை அடைத்துக் கொண்டு இருந்ததால் கண்வழியே வந்து மூளைக்குச் செல்லும் கல்வியின்
பாதைகள் கரடு முரடுப் பாதையில் அமைந்த மாட்டு வண்டிப் பயணம் போல் ஆனது. மேலாக தரப்படுத்தல்
வேறு.
பனை உச்சியில் நாலா புறமும் பார்க்க கட்டப்பட்ட அந்த லவுட்ஸ்பீக்கரைப் பற்றிய
எண்ணம் இப்போ சில நாட்களாக என்னுள் வந்து போய் கொண்டு இருக்கின்றது. அதற்கு
காரணம் தமிழ் தேசியம் பற்றி, குறிப்பாக இலங்கைத் தமிழ் மக்களின் தமிழ் தேசியம்
பற்றி இந்தியாவிலும் புலம் பெயர்நாடுகளிலும் இருந்து ஓங்கி ஒலிக்கும் லவுட்ஸ்பீக்கர்கள்
தான்.
இவற்றில் எது சரி எது பிழை என்ற வாதத்தைத் தாண்டி. . . இலங்கை மக்களுக்காக
எமது குரல் என்ற வெளியிலிருந்து கொடுக்கப்படும் இந்தக் குரல்களை சாதாரண ஒரு இலங்கை குடிமகன்
ஆமோதிக்கின்றானா?. . .இதை அவன் விரும்புகின்றானா?. . .என்ற கேள்விக் குறிகள்
தொக்கி நிற்கின்றன. கடந்த காலங்களில் குறிப்பாக தென் இந்தியாவிலும் புலம் பெயர்
நாடுகளிலும் நடந்த ஊர்வலங்கள், பகிஸ்கரிப்புகள், உணர்ச்சி வசப்பட்ட பேச்சுகள். . .
இவற்றில் ஏதோ ஒன்றுமுள்ளியவளையில் ஒரு குடிமகனையாவது காப்பாற்றியதா?
அல்லது எங்கள் இருப்புகளை நாங்கள் உறுதிசெய்து கொள்கின்றோமா?
செவிப்பறையே செப்புத் தகட்டால் ஆன ஜனநாயக பூமிகளில் எங்கள் குரல்கள் எதையுமே செய்துவிடப்
போவதில்லை. மீண்டும் உலகத்தின் கதவுகளை அமைதியாக முறையில் தட்ட வேண்டுமே தவிர எங்கள்
இருப்புகளை காட்ட நாங்கள் கட்டும் லவுஸ்பீக்கர்கள் எங்கள ; கிராமத்தின் அமைதியைத் தான் குழப்பும்.
சிங்கப்பூரில் இருந்து எனக்கு ஒரு சிறுகதை வந்திருந்தது. சிஙக் ப்பூரில் ஒரு ஊழியரை விசர்நாய் கடித்து
விட்டது. அச்சமயம் இலங்கையில் நாய்கள் பற்றிய நினைவுகள் திரும்புகின்றது. அதில் ஆசிரியர் ஒரு இடத்தில்
சொல்லுகின்றார், ”இலங்கையில் எந்த நாய்களும் இனிமேல் குரைக்கவும் முடியாது – கடிக்கவும் முடியாது”.
இது வேதனையின் வெளிப்பாடு – தாங்கொணா வலி – மேலாக இன்றைய நிதர்சனம்.
இலங்கை சென்று விட்டு திரும்பிய ஒரு நண்பர் சொன்னார், ”இலங்கையில் தமிழர்களை 3 விதமாக
பிரிக்கலாம். விடுதலைப்புலிகளை வைத்து வாக்கு வங்கிகளை நிரப்பும் கட்சி, ராஜபக்சே அரசாங்கத்தில்
இணைந்த கட்சிகள், ராஜபக்சே எப்பொழுது தம்மை தன்னுடன் இணைத்துக் கொள்வார் என டார்வினின்
”தப்பித்தல்-பிழைத்தல”; என்ற கோட்பாட்டுக்கு தலைவணங்கி அவரின் அழைப்பிற்காக எதிர்பார்த்துக்
கொண்டிருக்கும் கட்சிகள்.
இதற்கிடையே தொடர்ந்தும் நாம் இந்த லவுஸ்பீக்கர்களினால ; சண்டையிட்டுக் கொண்டு இருப்போமானால்
இலங்கையில் எழுத்தாளர்கள் ஒற்றுமையாக இருந்தாலும் அல்லது ஒற்றுமை போல் காட்டிக் கொண்டு
இருந்தாலும். . . . புலம் பெயர் மண்ணில் எழுத்தாளர்கள் பிரிநது; போவது நிஜம்.

பிரித்தானியாவின் பிரித்தாளும் சூழ்ச்சிக்கு ஒருக்கால் பலியாகி விட்டோமே என கவலைப்பட்டுக் கொண்டு
தொடர்ந்தும் பிரிவுகளுக்கு துணை போவோமானால் இது இலங்கை அரசாங்கத்திற்கு கிடைத்த இன்னோர்
வெற்றியாகும்.
இதற்காக இலங்கையில் அனைத்துலக எழுத்தாளர் விழா இலங்கையில் நடப்பதை நியாயப்படுத்தவில்லை.
எழுத்தாளர்கள் - அவர்கள் - இவர்கள் எல்லோரும் சொல்வதில் உள்ள வாதங்களையும், விதண்டா
வாதங்களைத் தவிர்த்து அதற்கும் அப்பால் உள்ள நியாயங்களை நிச்சயமாக மதிக்கின்றேன். ஆனால்
ஓராண்டுக்கு முன்பே இது நடக்க இருப்பதை நன்கு அறிந்தும் அமைதி காத்து விட்டு தற்பொழுது குரல்
கொடுப்பது அல்லது அதை நிறுத்த முயல்வது இலங்கையில் உள்ள எழுத்தாளருக்கு கட்டாயம் சில
நெருக்கடிகளை கொண்டு வரும். நான் அவர்களை மட்டும் தான் இந்த சந்தர்ப்பத்தில் யோசிக்கின்றேன்.
காரணம் இடிபாடுகளுக்கு இடையில் இலக்கியப்பணி செய்தவர்கள். . .செய்து கொண்டு இருப்பவர்கள்.
அவர்களுக்கு ஏன் ஒரு நெருக்கடி வரவேண்டும் என மனம் கவலை கொள்கிறது. முள்ளிவாய்க்கால்
பிரச்சனைக்கு பின் இந்த ஏற்பாட்டிற்கு மங்கள விளக்கேற்றிய திரு. சிவத்தம்பி அவர்களே இப்பொழுது
விளக்கை அணைப்பது போல அறிக்கை விடும் பொழுது, பிறரின் அறிக்கைகள் ஒரு பொருட்டல்ல.
இந்தியாவில் இருந்து பேராசிரியர் செயப்பிரகாசம் என்பவா ; தனது அறிக்கையில், ”விடுதலைப் புலிகளுக்கு
எதிராக புலம் பெயர்ந்த நாடுகளில் உள்ள எழுத்தாளர்கள் நடாத்தும் விழா” என அறிக்கை விட்டு இருந்தார்.
எப்படி ஒரு பேராசிரியர் இப்படி ஒரு ஒட்டு மொத்தமாக அனைத்து புலம் பெயர்ந்த எழுத்தாளர்களை பற்றி
அறிக்கையை விட முடியும்? திரு. செயப்பிரகாசம் அவர்களே! நீங்கள் மிகச் சிறந்த மேடைப்பேச்சாளர் என்பதை
நான் அறிவேன். மூத்த எழுத்தாளரும், தற்பொழுது சென்னையிலும் அவுஸ்திரேலியாவிலும் இருந்து இலக்கிய
ஊழியம் செய்பவர் என அறியப்படும் திரு. எஸ். பொன்னுத்துரையின் ”மகாவம்ச-எஸ்.பொ. தமிழில”; என்று நூல்
வெளியீட்டு விழாவில் அனைவரும் கவருமாறு மிகச் சிறப்பாக பேசினீர்கள். அச்சமயம் நானும் அங்கிருந்தேன்.
அது வேறு விடயம். இப்பொழுது புலம் பெயர்ந்த அனைத்து இலங்கை எழுத்தாளர்களைப் பொதுமைப்படுத்தி
அவர்கள் பற்றி அறிக்கை விட யார் உங்களுக்கு இந்த அதிகாரத்தை தந்தது? ”புலி ஆதரவு” அல்லது
”எதிர்ப்பு” என்பது வேறு. ”இலங்கை அரசாங்கத்திற்கு ஆதரவு” என்பது வேறு. தயவு செய்து இந்த மூன்று
உழnஉநிவகளையும் யாரும் எதிர்வரும் காலங்களில் குழப்பிக் கொள்ளாமல் இருப்பது நன்று.
அனைத்துலக தமிழர் மகாநாட்டைப் பொறுத்தவரை
நடந்த தவறு யாதெனில் அனைத்துலக தமிழ்
எழுத்தாளர் மகாநாட்டை இலங்கையில் நடாத்துவோம்
என முடிவு செய்த பொழுது அனைத்துலகத்தையும்
பிரதிபலிக்கும் வண்ணம் நாட்டுக்கு ஓரிரு
எழுத்தாளர்கள் ஆவது அங்கு பிரசன்னமாகி
இருக்கவில்லை. நாம் தொடங்குவோம…; பின்பு
குடும்பத்தில் உள்ள மற்றவர்களையும் அழைப்போம்
என நினைத்தது இங்கு பிழைத்து விட்டது.
ஆனால் இந்த தவறு, எதிர்காலத்தில் வருடா
வருடம் ஏதோ ஒரு நாட்டில் அனைத்துலக
எழுத்தாளர் மகாநாடு நடாத்த வழி அமைக்கும்
ஆயின் அது தற்போதைய அமைப்பாளர்களுக்கு
கிடைத்த கௌரவமாகவே கொள்ள வேண்டும்.
ஆரம்ப்பம் என்ப்பது எங்N;கோ இருந்N;தே ஆக வேண்டு;டும்.;.
அது இங்கு;கு பல கசப்ப்பான அனுபங்க்களுடன் நிகழ்க்கிறது. அவ்வ்வளவு தான்.;.

அனைத்துலக மகாநாடு பற்றி திரு. எஸ். பொன்னுத்துரை அவர்கள் தனது சந்தேகங்களையும் ஆதங்களையும்
தெரிவித்ததுடன் 12 அம்சதிட்டத்தை சாடியும் மறுதலித்தும் தரீ hநதியில் எழுதியிருந்ததை வாசித்தேன். அது
அவரின் கருத்து. அதற்குரிய பதிலை எழுத்தாளர் மகாநாட்டுக்குழவினரும் நேரடியாக சாடப்பட்ட திரு.
டொமினிக் ஜீவாவும், திரு. அன்ரனி ஜீவாவும், பேராசிரியர் திரு. சிவத்தம்பியும் அளிக்க வேண்டும் அல்லது
புறக்கணிக்க வேண்டும் என்பதாலும் மேலாக அவர் குறிப்பிடும் 50வருடத்துக்கு முன்னால் ஆன பெருங்காய
டப்பாச் சண்டைகள் பற்றி எனக்கு எதுவும் தெரியாததாலும் அகக் ட்டுரை பற்றி இதில அதிகம் எதுவும் நான்
பதிவு செய்ய விரும்பவில்லை.
மாறாக மொழிபெயர்ப்பு பற்றி வரும் பொழுது இந்திய எழுத்தாளர்களும், இந்திய சாகித்திய அக்கடமி,
ரொறன்ரோ பல்கலைக்கழகம் போன்றவையும் மொழிபெயர்ப்பு பணிகளில் ஈடுபட்டுக் கொண்டு இருக்கிறார்கள்
என்று குறிப்பிட்டதோடு, ”என் ஆக்கப்பணி நேரங்களை மறுதலித்து தடம் பதித்த ஆபிரிகக் படைப்புகளை
தமிழ் வாசிப்புக்கு கொண்டு வரும் பணியில் ஈடுபட்டுள்ளேன். அமைப்பாளர்கள் யாராவது இத்தகைய பணியில்
ஈடுபட்டுள்ளீர்களா? உபதேசிக்க வேண்டாம். முதலில் செய்துகாட்டுங்கள்” என அவருக்கேயுரிய ஒரு சவாலின்
தொனியுடன் சொல்லியிருந்தார். அது அமைப்பாளர்களை நோக்கி விடப்பட்ட அம்பு ஆயினும், இந்த ஆங்கிலதமிழ்
மொழிபெயப்புகளையும் தாண்டி மிக குறுகிய காலத்தில் ஆங்கிலம் அல்லாத பிற மொழிகளை கற்று
அதில் படைப்புகளும், மொழிபெயர்ப்புகளும் அந்தந்த புலம் பெயர் நாடுகளில் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது
என்பதையும், அவர் குறிப்பிடும் சாகித்திய அக்கடமி, ரொறன்ரோ பல்கலைக்கழகம் போன்ற அமைப்புகளுக்கு
அப்பாலும் தமிழுக்கு தம்மால் ஆனதை செய்ய ஆங்காங்கே சில பேனா முனைகள் அமைதியாக முனைந்து
கொண்டுதான் இருக்கிறன என்பதனை கட்டாயம் இதில் சுட்டிக்காட்ட விரும்புகின்றேன்.
உதாரணமாக டென்மார்கிற்கு புலம் பெயர்ந்த திரு. தர்மலிங்கம் அவர்கள்
ர்.ஊ.யுனெநசளநnஇன் கதைகளை டெனிசில் இருந்து தமிழுக்கு மொழிபெயர்த்துள்ளார்.
அதேபோல
சாகித்திய மண்டலப் பரிசு பெற்ற எழுத்தாளரான திரு. ’நிலக்கிளி’ பாலமனோகரன்
டெனிஷ்-தமிழ்-ஆங்கிலம் என பல முயற்சிகளை மேற்கொண்டுள்ளார்.
திருமதி. கலாநிதி அவர்கள் நேரடியாக டெனிசில் கவிதை வடிவில் எழுதிய
”முæசடபை hடைளநn.. .ஆழச” என்ற 200 பக்க நாவல் தற்பொழுது என்னால்
”இப்படிக்கு அன்புள்ள அம்மா” என தமிழிலும், ஐரிஸ் நாட்டை சேர்ந்த ஒரு ஆசிரியர்
”றுiவா சநபயசனள. . .லழரச அரஅ” என ஆங்கிலத்திலும் மொழிபெயர்க்கப்பட்டு இவ்வருட
இறுதிக்குள் வெளிவர இருக்கின்றது என்ற நல்ல செய்தியை இதில் குறிப்பிடுகின்றேன்.
இவ்வாறே மற்ற மற்றைய புலம் பெயர்நாடுகளிலும் மொழி பெயாபு; பணிகள் நடைபெறுகின்றன. இவை மிகவும்
ஆரோக்கியமான பணிகளாகும். இவை பற்றிய மேலதிக தகவல்களை நூல் தேட்ட ஆசிரியர் திரு. என்.
செல்வராஜாவிடம் பெறலாம் என கருதுகின்றேன். இங்கிலாந்தில ; வாழும் திரு. முல்லை அமுதனிடமும்
கணிசமான புலம் பெயர்ந்தோர் படைப்புகள் உண்டு. இவரிடமும் இவை பற்றிய தகவல்களைப் பெறலாம்.
இறுதியாக ஒரு வேண்டு;டுகோள்:;:;
இணையத் தளங்களிலும் பத்திரிகைகளிலும் சஞ்சிகைகளிலும் அறிக்கை விட்டுக் கொண்டு இருக்கும்
அறிவுசால் பெரியோர்கள் அனைவருக்கும் இறுதியாக ஒரு வேண்டுகோள். நீங்கள் இப்பொழுது எங்கள்
மத்தியில் நாட்டுப்பற்றாளர்களாக - மொழிப்பற்றாளர்களாக பிரபலமாகி இருக்கின்றீர்கள். இலங்கை வாழ் தமிழ்
மக்களுக்கு நீங்கள் செய்ய வேண்டிய பாரிய பணிகள் உண்டு. இதற்கு உங்கள் சட்டைப் பையில் தொங்கிக்
கொண்டிருக்கும் பேனா மட்டும் போதாது. உங்கள் பேனாவுக்குக்கும் உங்களுக்கும் உள்ள அதே ஓர்மம்
உங்கள் சட்டைப் பையில் உள்ள பச்சை டொலர்களுக்கும் சிவத்தப் பவுன்ஸ்களுக்கும் வேண்டும்.
அழிந்து;து போன கிராமங்க்களை அடிமட்ட்டத்த்தில் இருந்து;து கட்டி;டி எழுப்ப்ப வேண்டி;டிய தார்ம்மீகீகீக கடப்ப்பாடு
அனைவருக்கு;கும் உண்டு;டு. தயவு செய்து;து இதே மூச்சு;சுடனும் வீரீரியத்து;துடனும் அதில் ஈடுபட
வேண்டு;டும் என பணிவுடன் கேட்டு;டுக் கொள்க்கின்N;றேன்.;.
இனிவரும் காலங்களில இந்த அலைகள் ஓயும் வரை இலங்கையில் இலங்கை எழுத்தாளர் மகாநாடும்,
உலகத்தின் எங்கோ ஒரு நாட்டில் தமிழர்கள் முழச்சுதந்திரதது; டன் வாழுகிறார்கள் என்று ஐயம் திரிபுற
உணர்ந்தால், அந்த நாட்டில் காகிதச் சண்டையும் கணனிச் சண்டையும் பிடிக்காமல் அனைத்துலக தமிழ்
எழுத்தாளர் மகாநாடும் நடாத்துதல் சாலச்சிறந்தது என எனது பணிவான கருத்தை இதில் பதிவு செய்து
கொள்கின்றேன்.



No comments: