அவுஸ்ரேலிய செய்திகள்

.
1. முதலாவது பெண் பிரதமர் ஜூலியா கில்லார்ட்
2. சிட்னியில் ஒலிம்பிக் நடைபெற்று 10வது வருடம் சென்ற புதன்கிழமை கொண்டாடப்பட்டது

 முதலாவது பெண் பிரதமர் ஜூலியா கில்லார்ட்

தேர்தல் மூலம் தெருவு செயப்பட்ட முதலாவது பெண் பிரதமர்  ஜூலியா கில்லர்ட்  சென்ற புதன் கிழமை பதவிப் பிரமானம் செய்து கொண்டார்.  கூட்டணி கட்சிகளின் ஆதரவுடன் பிரதமராக ஜூலியா எலின் கில்லார்டு  பதவியேற்றார்.

அண்மையில்  நடைபெற்ற பாராளுமன்ற தேர்தலில், எந்த கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை. அதனால் 70 ஆண்டுகளுக்கு பிறகு முதல் முறையாக தொங்கு பாராளுமன்ற நிலை உருவானது.

மொத்தமுள்ள 150 இடங்களில் தொழிலாளர் கட்சியை சேர்ந்த ஜூலியாவின் கூட்டணி கட்சிக்கு இரண்டு எம்பிக்களின் ஆதரவு தேவைப்பட்டது.



இதையடுத்து சுயேட்சையாக வெற்றி பெற்ற 3 எம்பிக்களின் ஆதரவை பெற ஜூலியா மற்றும் எதிர் கட்சி தலைவர் டோனி அப்பாட்டுக்கும் இடையே கடும் போட்டி நிலவியது. டோனி விண்ட்சர் மற்றும் ராப் ஓக்ஷாட் ஆகிய சுயேட்சை எம்பிக்கள் ஜூலியாவுக்கு ஆதரவு தெரிவித்தனர். இதன்மூலம் 76 எம்பிக்களின் ஆதரவுடன் ஜூலியா பிரதமரானார்


 சிட்னியில் ஒலிம்பிக் நடைபெற்று 10வது வருடம் சென்ற புதன்கிழமை கொண்டாடப்பட்டது.


கத்தி பிறிமன்னும் லுயிஸ் சொவெஜ்யும் ஒலிம்பிக் தீபத்தை 10 வருடங்களுக்கு முன் ஏற்றிய அதே இடத்தில் ஏற்றிவைத்து பத்தாவது ஆண்டு விழா கொண்டாடப்பட்டது.

No comments: