பகவத் கீதை - நியமங்கள்
ஹரே கிருஷ்ணா!
அனைவருக்கும் வணக்கம். போன வார கட்டுரை குறித்து தங்கள் கேள்விகள் அனைத்திற்கும் நன்றி! நான் இந்தப் பகுதியில் எழுதுவது தங்களுக்கு எந்த அளவு புரிகின்றது என்பதை நான் தெரிந்து கொள்ள உங்கள் கருத்துக்களும் கேள்விகளும் மிக அவசியம். தாங்கள் எதாவது குறிப்பிட்ட தலைப்பு குறித்து நான் எழுத வேண்டும் என்று கருதினால் தயங்காமல் எனக்கு தெரிவியுங்கள்.
நம்முடைய இந்த வாரத் தலைப்பு நியமங்கள்(Regulation). நியமங்கள் என்றால் நம்முடைய வாழ்க்கைக்கு தேவையான நெறிமுறைகள் என்று பொருள். இந்தக் கட்டுரையில் நான் நியமங்கள் மற்றும் நெறிமுறைகள் என்ற இரு வார்த்தைகளையும் மாற்றி மாற்றி உபயோகித்தாலும் அவை இரண்டும் "வேதத்தில் மனித வாழ்க்கைக்காக கூறப்பட்ட சட்ட திட்டங்கள்" என்று பொருள் கொள்ளுங்கள்.
நெறிமுறைகள் - தமிழில் நம் அனைவருக்கும் பிடிக்காத ஒரே வார்த்தை:)! ஆனால் தெரிந்தோ தெரியாமலோ நாம் அனைவரும் நம் வாழ்க்கையில் சிறு வயது முதல் நெறிமுறைகளைப் பின்பற்றுகிறோம். உதாரணமாக முதலில் ஒன்றாம் வகுப்பு, பிறகு இரண்டாம் வகுப்பு இவ்வாறு ஒன்றன் பின் ஒன்றாக நம்முடைய பள்ளி வாழ்க்கை செல்கிறது. பிறகு கல்லூரி வாழ்க்கை. பிறகு வேலை. இவ்வாறு ஒரு எழுதப்படாத நியமத்தை நாம் அனைவரும் பின்பற்றுகிறோம். நம் சிறுவயதில் நமக்கு விஷயம் அவ்வளவாகத் தெரியாது. அதனால் தான் அவ்வாறு மற்றவர்கள் கூறிய ஒரு நெறிமுறையைப் பின்பற்றினோம் என்று நமக்கு கூறத்தோன்றும். ஆனால் நாம் பெரியவர்களான பின்பும் நெறிகளைப் பின்பற்றி நடந்து கொண்டிருகிறோம். உதாரணமாக நம்முடைய மோட்டார் வாகனத்தை ஓட்டும் போது ஒரு குறிப்பிட்ட அளவு வேகத்தில் செலுத்துகிறோம்; சாலையின் இடது புறத்தில் செல்கிறோம். வேகமாகச் சென்றால் காவல்துறை நமக்கு அபராதம் விதிக்கும், மேலும் மற்ற தண்டனைகளும் கிடைக்கும். அதுமட்டுமன்றி வேகமாக செல்வதால் நமக்கு விபத்து ஏற்படுவதற்கும் வாய்ப்பு உள்ளது. இவ்வாறு ஒரு நியமத்தை பின்பற்றுவதால் தண்டனையில் இருந்து தப்பிப்பதுடன் நாம் உயிரையும் பாதுகாத்துக் கொள்ள முடியும்.
நெறிமுறை என்பது மனிதருக்கு மட்டுமல்ல, இந்த உலகத்தில் அனைத்துமே ஒருவிதமான நியமத்தைப் பின்பற்றுகின்றது. சூரியன் ஒரு குறிப்பிட்ட நேரத்தில் உதயமாகின்றது. பிறகு ஒரு குறிப்பிட்ட நேரத்தில் அஸ்தமிக்கின்றது. கோடை காலம், குளிர்காலம், மழைக்காலம் - இவை கூட ஒரு நெறிமுறையைப் பின்பற்றி நடைபெறுகிறது. விலங்குகள் கூட ஒரு குறிப்பிட்ட காலத்தில் மட்டுமே உடலுறவு வைத்துக்கொள்கிறது. இந்த உலகத்தில் அனைத்து உயிரினமும் உயிரற்றனவும் ஒரு குறிப்பிட்ட நியமத்தை பின்பற்றியே செல்கின்றன. இந்த நெறிமுறையை யாராவது பின்பற்றாமல் போனால் இந்த உலகமே துன்பத்திற்கு உள்ளாகி அழிந்து போவதற்கு கூட வாய்ப்பு உள்ளது. உதாரணமாக மழை பெய்யாமல் இருந்தால் வறட்சி வரும். மழை காலம் நீடித்தாலோ வெள்ளம் வரும். நெறிமுறை என்பது அனைவருக்கும் மிக முக்கியம் என்று இதிலிருந்து புரிந்துகொள்ளலாம்.
உலகத்தில் மனிதன் தவிர மற்ற அனைவரும் இவ்வாறு ஒருவிதமான இயற்கையின் நெறிமுறையைப் பின்பற்றுகின்றன. மனிதர்களான நாமும் இதற்கு விதிவிலக்கல்ல.
பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் நாம் பின்பற்ற வேண்டிய நியமங்கள் குறித்து மிகவும் விரிவாக பகவத் கீதையில் கூறியிருக்கிறார். வேதங்களில் கூறி இருக்கும் நியமங்களைப் நாம் பின்பற்றவில்லை என்றால் நமக்கு என்ன கதி ஆகும் என்று இந்த ஸ்லோகத்தில் கூறுகிறார்.
ய சாஸ்திரவிதிம் உத்ஸ்ருஜ்ய
வர்ததே காம காரத
ந ஸ சித்திம் அவாப்னோதி
ந ஸுகம் ந பராம் கதிம்
- பகவத் கீதை 16.23
"சாத்திர நெறிகளைப் புறக்கணித்துத் தனது மனம் போன போக்கில் செயல்படுபவனோ பக்குவத்தையோ, சுகத்தையோ பரம இலக்கையோ அடைவதில்லை"
ஆக நாம் சாத்திர நெறிகளைப் புறக்கணித்து நமது மனம் போன போக்கில் நடந்தால் நமக்கு தோல்வி ஒன்றே கிடைக்கும். ஸ்ரீ கிருஷ்ணருக்கு முக்காலமும் நன்கு தெரியும். அதனால் நாம் போன பிறவியில் எப்படி இருந்தோம், அடுத்த பிறவியில் எப்படி இருக்கப் போகிறோம் என்று அவர் ஒருவருக்கே தெரியும். அதனால் அவருடைய அறிவுரைப்படி நடந்தால் நமக்கு வெற்றி நிச்சயம். மாறாக நாம் கீதையைப் பின்பற்றாமல் மனம் போன போக்கில் வாழ்ந்தால் உலகத்தில் நிறைய குழப்பம் வரும். ஒருவர் அவர் மனதிற்கு சரி என்று தோன்றுவதை செய்யும்போது அது மற்றவருக்கு கேடு விளைவிக்கும் வாய்ப்பு மிக அதிகமாக உள்ளது. ஒரு திருடனுக்கு அவன் மனம் "நீ திருட வேண்டும்" என்று கூறுகிறது. அதைத் தான் அவனும் செய்கிறான். ஆனால் அதனால் எவ்வளவு மக்கள் துன்பப்பட வேண்டியுள்ளது என்று நம் அனைவருக்கும் தெரியும். ஜெர்மனின் சர்வதிகாரி ஹிட்லர் அவன் மனம் கூறியபடி நடந்தால் லட்சக்கணக்கான மக்கள் உயிரிழந்தனர். அதனால் நான் என் மனம் போன போக்கில் நடப்பேன் என்ற கொள்கையை விட்டு விட்டு உலகத்தில் உள்ள அனைத்து ஜீவன்களின் தந்தையான ஸ்ரீ கிருஷ்ணர் கூறுவதைக் கேட்டு நடந்தால் நமக்கு வெற்றி நிச்சயமாக வந்து சேரும். இதைத் தான் கீழ்க்கண்ட ஸ்லோகத்தில் அவர் கூறுகிறார்.
தஸ்மாச் சாஸ்த்ரம் ப்ரமாணம்
தே கார்யாகார்ய வ்யவஸ்திதௌ
ஞாத்வா சாஸ்த்ர விதாநோக்தம்
கர்ம கர்தும் இஹார்ஹசி
- பகவத் கீதை 16.24
"சாத்திரங்கள் விதிகளால் எது கடமை; எது கடமை அல்ல என்பதை ஒருவன் புரிந்து கொள்ள வேண்டும். இத்தகு சட்ட திட்டங்களை அறிந்து படிப்படியாக உயர்ச்சி பெறுவதற்கு ஏற்ற முறையில் ஒருவன் செயல்பட வேண்டும்"
ஆகவே நாம் கீதையைப் படித்து எது நம்முடைய கடமை என்று புரிந்து கொண்டு அதன்படி நடக்க வேண்டும். இவ்வாறு உலகத்தில் உள்ள அனைவரும் நடந்தால் எங்கும் அமைதி நிலவும், மகிழ்ச்சி பொங்கும். மனிதர்களான நாம் 4 மிக முக்கிய விதிகளைப் பின்பற்ற வேண்டும் என்று சாஸ்திரங்கள் வாயிலின் மூலம் ஸ்ரீ கிருஷ்ணர் கூறுகிறார். அவை குறித்து அடுத்த வாரம் பார்ப்போம்.
ஹரே கிருஷ்ணா, ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா, ஹரே ஹரே!
ஹரே ராமா, ஹரே ராமா, ராமா ராமா, ஹரே ஹரே!!
என்றும் அன்புடன்,
கனஷியாம் கோவிந்த தாஸ்
17 comments:
saathiram padikkavillai
ஹரே கிருஷ்ணா, ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா, ஹரே ஹரே!
ஹரே ராமா, ஹரே ராமா, ராமா ராமா, ஹரே ஹரே!!
அதுதான் சாத்திரம்,
ஹரே கிருஷ்ணா, கருத்துருவாக்க மையத்தின் கருத்து திணிப்பு...
ராமா ராமா
Ghanashyam.. Simple and nice article. I have two questions...
1) Like you once wrote about Ajamilan, do you think this reader Putthan will get the benefit for chanting Hare Krishna even without knowledge? Sorry Mr Putthan for using your name. I am just trying to understand the philosophy.
2) Like the person who posted the first comment many people may not be aware of sastras and they mistake it to be something orthodox. What is your take on it?
Regards
Thilagavathy
அய்யா புத்தன் அவர்களே.. உங்களிடம் யாரும் எதையும் திணிக்கவில்லை. நீங்கள் தான் இந்த இனைய தளத்திற்கு வந்து பிதற்றுகிறீர்கள். நானும் எனது குடும்பத்தினரும் கனஷியாம் அவர்களின் கட்டுரையை தொடர்ந்து படித்துக் கொண்டு வருகிறோம். வாழ்க்கைக்கு தேவையான பல நல்ல விஷயங்களை அவர் கீதை மூலம் உபதேசிக்கிறார். எங்களைப் போல எனது நண்பர்களின் குடும்பத்தினரும் அவரின் கட்டுரையை தொடர்ந்து படித்து பயன் பெறுகிறார்கள். எங்கள் குடும்பத்தில் அனைவரும் தினமும் ஹரே கிருஷ்ணா மந்திரத்தை 10 முறை கூறி வருகிறோம். நிறைய மாற்றம் தெரிகிறது.மனது அமைதியுடன் இருக்கிறது. அடுத்த வாரம் முதல் 20 முறை ஜெபிக்கலாம் என்று இருக்கிறோம். புத்தன் அவர்களே.. உங்களுக்கு இந்தக் கட்டுரை பிடிக்கவில்லை என்றால் தயவு செய்து வேறு எதாவது புத்தகத்தை படியுங்கள். தயவு செய்து மற்றவர்களைத் தொந்தரவு செய்யாதீர்கள்.
- இந்திரன்
Shut up Putthan..You are not Putthan. You are Piththan#$@@#@
You keep rocking Ganashiyaam!!!
I agree with everyone here. While I am not a very good religious person I like Ghanashyam's writings for the simplicity and clarity. I am sure you all will agree that the mere word Vedas disturb many of us mainly due to its complexity and our preconceived notions. Inspite of being a 45 yr old man from a brahmin orthodox family I still cannot follow the vedas in my life. What inspires me about this boy's articles is that he is able to quote and refer exact slogas from Bhagwad Geetha. He is also giving tips about how to follow Geetha in our everyday life. Thats what attracts me the most. He is not forcing his ideas on the readers. He is just sharing his profound knowledge on Bhagwad Geetha and we should be very thankful to him. As we can read from the comments every week there are many readers who are closely following his articles and get guidance from him. I am not shy to say that I too may one day say the Hare Krishna mantra he keeps saying again and again.
I think people like Putthan or Piththan(Mad) as someone said are just jealous of Ghanashyam's success.
Dear Ghanashyam,
Let your glorification of Bhagwan Krishna continue forever..
With gratitude
Sivanesan
கனஷியாம் உங்கள் பகவத் கீதையை தழுவிய கட்டுரைகள் மிகவும் எல்லோராலும் வரவேற்க்கப்படுகின்றன. பலருக்கு இணையத் தளத்தில் கருத்துக்களை பதிவு செய்ய தெரியாததனால் அவர்கள் கருத்துக்களை இங்கு வந்து எழுதுவதில்லை. ஆனால் என்னை நேராகச் சந்திக்கும் போது அவர்கள் உங்கள் கட்டுரைகளை தவறாமல் படித்து வருகிறார்கள். அதனால் அவர்கள் பயனும் அடைகின்றார்கள் என்பதை கூறுகின்றார்கள். நீங்கள் கற்றவற்றையும் உங்கள் அறிவுத்திறனையும் எந்த வித தயக்கமும் இல்லாது தொடர்ந்து எழுதுங்கள். இப்போது பயன்னில்லை என்று கருதுபவர்களுக்கு கூட இது ஒரு நாள் பயனளிக்கும் என்பதில் எனக்கு எந்த வித ஐயமும் இல்லை.
உங்கள் இந்த நற்பணி தொடரட்டும்.
அன்புடன்
மதுரா
படிக்கிறது கீதை இடிக்கிறது ராமர் கோயிலாக இருக்ககூடாது
கோபமாக பதில் எழுதியவர்கள் இந்த சுலோகத்தை சொல்லவும்
கோபம் என்ற ஒரு உணர்வு நமக்கு எதனால் ஏற்படுகிறது? வழக்கம் போல ஸ்ரீ கிருஷ்ணரின் பகவத் கீதையின் பக்கங்களைத் திருப்புவோம்.
த்யாயதோ விஷயான் பும்ஸ
சங்கஸ் தேஷு பஜாயதே
சங்காத் சன்ஜாயதே காம
காமாத் க்ரோதோ பிஜாயதே
Hello Ghanashyam
I am reading ur essays regularly. It is simple and easy to follow. I am also saying the manthra daily . I liked it from the heart. I am sure it works wonders to me. My grandparents use to tell about sankaracharya's quote "baja govindham baja govindham mudamathe". He has instructed a vedic scholar who was reading other vedic commentaries to show his knowledge to others. But sankaracharaya said " you fool, why do not u say govindha?" This explains the last word in vedanta sutra is krishna. I guess I am fool no1 as I missed the point of glorifying govinda names. I am really happy that u inspired me to tell the manthra thru your simple essays.
கனஷியாம் அவர்களே.. உங்கள் கட்டுரைகள் மிக அருமை. உங்கள் சொந்த வாழ்க்கை குறித்து மிகவும் நேர்மையாக உதாரணம் அளிகின்றீர்கள். உங்கள் கட்டுரையைப் படித்து புகைப் பிடிக்கும் பழக்கத்தை வெகுவாக குறைத்திருக்கிறேன். நீங்கள் ஹரே கிருஷ்ணா மந்திரத்தைக் கூறி தான் அந்தப் பழக்கத்தை விட்டீர்கள் என்று கூறியது எனக்கும் தன்னம்பிக்கையை அளித்தது. நானும் இப்பொழுது ஹரே கிருஷ்ணா மந்திரத்தை கூறுகிறேன். நான் இந்தப் பழக்கத்தை முழுவதுமாக விட நீங்கள் ஸ்ரீ கிருஷ்ணரிடம் பிரார்த்தனை செய்யுங்கள். நீங்கள் வயதில் சிறியவராக இருந்தாலும் கீதையின் ஞானத்தால் மிகவும் பெரியவர். உங்களின் இந்த தெய்வீகப்பணி தொடர வாழ்த்துகிறேன்.
- மூர்த்தி
Hi Shyam,
My name is also Shyam. I saw your writings first in a forwarded email from my friend's friend. Luv your philosophy man. For the first time in my life I am seeing someone teaching me Bhagvad Geetha that makes sense. Crystal clear man. I have just graduated from University and joined in an IT company. I want to become like you in 10 years. You are selfless and your Hare Krishna article spotless. My friends also have become your fan. Looking at the comments here I can see how much everyone likes you. Eagerly looking for your next one..
Shyam
கனஷியாம்,
நானும் என் குடும்பத்தினரும் ஒவ்வொரு வாரமும் உங்கள் கட்டுரையை ஆர்வமுடன் வாசித்து வருகிறோம். தங்களுடைய கட்டுரை மிகவும் தெளிவாகவும் practical'ஆகவும் இருக்கிறது. உங்களைப் போன்று கீதை'யை நடைமுறை வாழ்க்கைக்கு ஏற்ற முறையில் எடுத்துக் கூற மிகச்சிலரே உள்ளனர். அதிலும் உங்களைப் போன்று பக்தியின் வழியில் சென்று மற்றவர்களையும் அந்த பாதையில் வழி நடத்திச்செல்லும் இளைஞர் வேறு ஒருவரைப் பற்றி நான் கேள்விப்பட்டது கூட கிடையாது. மக்களின் நலனுக்காக நீங்கள் ஆற்றும் இந்த தெய்வத் தொண்டு மகத்தானது. போற்றத்தக்கது. எனது குடும்பத்தினரின் சார்பில் உங்களுக்கு ஆசியும் வாழ்த்துக்களும் கூறுகிறேன்.
கண்ணப்பன்
Hi Shyam,
Nice article. You are making the dry philosophy into a very interesting practical teaching. For that I should not only appreciate you but thank you also. Hope many people also get inspired like you have inspire me.
கனஷியாம்! செல்வமானது மற்றவருக்கு கொடுக்க கொடுக்க குறையும். அறிவானதோ மற்றவருக்கு கொடுக்க கொடுக்க வளரும். ஒவ்வொரு வாரமும் செல்லச் செல்ல உங்களின் கட்டுரையின் சிறப்பும் மென்மேலும் வளர்ந்து கொண்டிருகிறது. உங்கள் கட்டுரையை படிக்க படிக்க, பக்தி வாழ்க்கை எவ்வளவு இன்பமயமானது என்று புரிகிறது. நாம் தான் கீதையை ஒழுங்காக படிக்காமல் இவ்வளவு நாள் துன்பப்பட்டு கொண்டிருகிறோம். சந்தேகமில்லாமல் கீதை ஒரு அறிவுப் பெட்டகம். தங்களின் கட்டுரை என்னும் சாவியினால் அதைத் திறந்து எங்கள் அறிவுக்கண் முன்னால் அதை காண்பிக்கிறீர்கள். உங்கள் கட்டுரை என்னைப் போன்றோருக்கு ஒரு வரப்பிரசாதம் ஆகும். வாழிய நின் புகழ்! வளர்க தங்கள் கீதையின் தொண்டு!!
நன்றியுடன்
மயில்வாகனன்
I agree with everyone. People like Puthan neither do good for others nor for themselves. Atleast he should not hurt others feelings.
JANAKI
JANAKI said...
I agree with everyone. People like Puthan neither do good for others nor for themselves. Atleast he should not hurt others feelings.
யானகி அம்மா உங்கள் அறிவுரைக்கு நன்றிகள்.முயற்சி செய்கிறேன் அடுத்தவர் உணர்வுகளை புண்படுத்தாமல் இருக்க .
Very nice article. I regularly send these article back home to my Mother in India. They are really appreciative of the knowledge and the simplicity of the message. She has started telling the Mantra regularly now a days.
My request to everyone is to forward this link to every one who knows Tamil so that they also get inspired.
Thank you very much
Post a Comment