பூவும் பொட்டும்    (சிறுகதை)

                                                                                    உஷா ஜவாகர் ஆஸ்திரேலியா


ஆஸ்திரேலியாவில் சிட்னியில் அமைந்துள்ள பிளேமிங்டன் (Flemington ) பிள்ளையார் கோயிலை நோக்கி 'விர்' என்று ஒரே சீரான வேகத்துடன் தன் புத்தம் புதிய காரை மிகவும் பெருமிதத்துடன் செலுத்திக் கொண்டிருந்தாள் விஜயகௌரி ammaa
விஜயகௌரி அம்மாளுக்கு சுமார் எழுபது வயது மதிப்பிடலாம் போன்று தோன்றியது.
தலைக்கு 'டை' அடித்திருந்தாலும் அந்த டையையும் மீறி வெளியே தெரிந்த நாலைந்து வெள்ளிக் கம்பிகள் அவளது வயதை பறைசாற்றிக் கொண்டிருந்தன.

அந்தக் காலத்திலேயே கொழும்பில் தனியார் பாடசாலையில் படித்தது மட்டுமல்லாமல் பின்னர் கணக்கியல் துறையிலும் நன்றாகப் படித்துச் சித்தியடைந்து மும்பத்தைந்து வருடங்கள் கணக்காளராக வேலை பார்த்த கம்பீரம் அவளது முகத்துக்குத் தனிக்களையைக் கொடுத்திருந்தது.

தான் நன்கு படித்தவள், நல்ல வேலையிளிருந்தவள் என்ற ஆணவம் அவள் உள்ளத்தில் அவ்வப்போது எட்டிப் பார்க்கும்.

இப்போதும் கைகள் இரண்டும் காரின் ஸ்டீரிங் வீளைப் பிடித்திருந்தாலும் கண்கள் மட்டும் தன் அருகே அமர்ந்திருந்த தன் ஒன்று விட்ட சகோதரியை அவ்வப்போது நோட்டம் விட்டுக் கொண்டிருந்தன.

விஜயகௌரி அம்மாளின் ஒன்றுவிட்ட சகோதரி சாந்தா அம்மாள் 'லிட்கம்' (Lidcombe ) என்ற இடத்தில் வசிப்பவர். சுமார் அறுபத்தியிரண்டு வயது நிரம்பியவர். அவர் பத்தாவது வரை தான் படித்தவர். இருபது வயதிலேயே திருமணம் நடைபெற்று விட்டது. வேலைக்குச் சென்ற அனுபவம் ஏதும் kidaiyaathu.

கணவர், பிள்ளைகள், மருமக்கள், பேரப்பிள்ளைகள் தான் அவரது பரந்த உலகம். ஆஸ்திரேலியாவுக்கு சாந்தா அம்மாள் சில வருடங்களுக்கு முன்பு தான் குடிபெயர்ந்திருந்தார். காரோட்டிய அனுபவமும் கிடையாது.

பிள்ளையார் கோயிலுக்கு வெள்ளிகிழமைகளில் பகல் பூசைக்கு செல்வதற்கு சாந்தா அம்மாள் விஜயகௌரி அம்மாளிடம் கார் லிப்ட் கேட்பதுண்டு. இப்போதும் விஜயகௌரி அம்மாள் காரோட்டிக் கொண்டிருக்க பக்கத்திலிருந்த சாந்தா அம்மாள் தலையைக் குனிந்தபடி மௌனமாக இருந்தார்.

விஜயகௌரி அம்மாள் தான் பேச்சை ஆரம்பித்தார். "சாந்தா பார்த்தியா? நான் புதுசா போட்டிருக்கிற நெக்ளசை! enta இரண்டாவது மகன் தான் வாங்கித்தந்தான். நெக்ளசின் நடுவில போட்டிருக்கிற சிவப்புக் கல்லு எண்ட நிறத்துக்கு நல்ல எடுப்பா இருக்குது என்ன?"
சாந்தா அம்மாள் "ஓம் நல்ல எடுப்பாத் தானிருக்கு அக்கா!" என முனங்கினார். " இந்த நாலு சோடி தங்க காப்பும் எண்ட மூத்த மகன் போன மாசம் துபாய்க்குப் போகேக்க வாங்கிட்டு வந்தவன். மூத்த மருமகளும் என்னில நல்ல பட்சம். மகன் எனக்கென்று எக்பென்சிவ்வா(Expensive ) என்ன வாங்கீட்டு வந்தாலும் ஒண்டும் சொல்ல மாட்ட. நல்ல பிள்ளை!
ஆ! இப்ப கதையை எங்க விட்டேன்? எப்பிடி இந்த துபாய் காப்புக்கள் நல்லா மினுங்குது என்ன?" என்றாள்.

" ஓம் அக்கா நல்லத் தான் மினுங்குது!" என்று சுரத்தில்லாமல் பதில் அளித்தால் சாந்தா அம்மாள். "உண்ட பிள்ளைகள் அவ்வளவு நல்லாப் படிகேளை! அது தான் உனக்குப் பட்டுச் சேலைகளோ, நேக்ளசோ, பவுன் காப்புகளோ ஒண்டும் புதுசாக் கிடைகிரலை! எண்டாலும் நீ பாவம் தான். உனக்கும் காரும் ஓட்டத் தெரியாது. கார் ஓட்டத் தெரிஞ்ச மட்டும் போதுமே! இங்க சிட்னியில புதுக் கார் வாங்குறது எண்டா எவ்வளவு காசு செலவழியும் தெரியுமா? கார் வாங்கலாம் எண்டு நீ கனவு காண மட்டும் தான் முடியும்!"

அகங்காரம், ஆணவம், செருக்கு எல்லாம் கலந்த விஜயகௌரி அம்மாளின் பேச்சைக் கேட்ட சாந்தா அம்மாளுக்கு ஏனடா விஜயகௌரி அம்மாளின் காரில் ஏறினோம் என்ற எண்ணமே ஏற்பட்டது.

சுய பட்சாதாபதில் அவள் சட்டென்று தலையை குனிந்து கொண்டாள். "நீ அக்கா அக்கா எண்டு அவவுக்கு பின்னுக்குப் போனாலும் அவ ஒரு நாளும் உன்னை மதிக்கிறேலை . பிறகு ஏன் நீ அவவோட பழகிறநீயோ தெரியாது" எனத் தன் கணவர் தனக்குக் கூறிய அறிவுரையை நினைத்துக் கொண்டே கண்களின் ஓரம் பூத்த நீர் மொட்டுக்களைத் துடைத்துக் கொள்கிறார் சாந்தா அம்மாள்.

கோயில் மண்டபத்துக்கு வெளியே காரை நிறுத்திய விஜயகௌரி அம்மாள் சாந்தா அம்மாளைப் பார்த்து "கார் கதவை மெல்லமா சாத்து! நீ கதவை இறுக்கிச் சாதினாப் புதுக் கார் பழுதாய் போய்விடும் . உனக்குச் சொந்தக் கார் வைச்சிருந்தா தானே காரின் அருமை தெரியும்" என்று நக்கலாகச் சிரித்துக் கொண்டே விஷம் கலந்த வார்த்தைகளைச் சிந்திவிட்டு கோயிலின் உள்ளே சென்றார்.

"இண்டைக்கு யாரின்ட முகத்தில முழித்தேனோ தெரியேலை! ஒரே அவமானமாக கிடக்குது!" என மனம் வெதும்பிய சாந்தா அம்மாளும் கோயிலின் உள்ளே காலடி எடுத்து வைத்தார்.

கோயில் மண்டபத்தினுள் ஐயர் மும்முரமாகப் பிள்ளையாருக்குத் தீபம் காட்டிக் கொண்டிருந்தார். பகல் நேரமாதலால் சனம் குறைவாகவே இருந்தது. ஐந்தாறு பெண்மணிகளும் இரண்டு முதியவர்களும் மெய்மறந்து கடவுளைக் கும்பிட்டுக் கொண்டிருந்தார்கள்.

ஐயர் அம்மன், முருகன் விக்கிரகங்களும் தீபம் காட்டி விட்டு கீழே இறங்கி வந்தார். அங்கு நின்றிருந்தவர்கள் அர்ச்சனைத் தட்டில் சில்லறைகளைப் போட்டுவிட்டு கண்களில் தீபத்தை ஒற்றிக் கொண்டனர்.

மற்றவர்கள் எல்லாம் சில்லறைக் காசுகளைத் தட்டில் போட, விஜயகௌரி அம்மாள் மட்டும் ஐந்து டாலர் நோட்டைத் தட்டில் போட்டு விட்டு சாந்தா அம்மாளை ஓர் ஏளனப் பார்வையுடன் ஏற இறங்கப் பார்த்தார். "உங்கள் எல்லாரையும் விட நான் வசதியானவள்" என்று சந்தேகமில்லாமல் எடுத்து இயம்பும் பார்வை அந்த ஏளனப் பார்வை!
விஜயகெளரி அம்மாளைக் கவனிக்காத மாதிரி சாந்தா அம்மாள் பிள்ளையாரைக் கும்பிட்டுக் கொண்டிருந்தார். அப்போது தான் 'அரசன் அன்று கொல்வான், தெய்வம் நின்று கொல்லும்' என்பதை நிரூபிப்பதைப் போல ஒரு சம்பவம் நிகழ்ந்தது. அன்று சுமங்கலிப் பூஜை செய்த இளம் பெண் ஒருத்தி ஐயர் அருகே நின்று கொண்டிருந்தாள். ஐயர் "சுமங்கலிப் பெண்களெல்லாம் முனால வந்து இந்தப் பெண்ணை வாழ்த்துங்கள்!" என்றார்.
முதலில் தயங்கிய பெண்மணிகள் ஒவ்வொருவராகப் போய் அந்த இளம் பெண்ணின் கையிலிருந்த குங்குமச் சிமிழில் இருந்து குங்குமத்தை எடுத்து அவள் நெற்றியில் வைக்க, அந்த இளம் பெண் ஒரு தட்டை, ஆசீர்வதித்த முதிய பெண்மணியின் கால்களில் விழுந்து வணங்கினாள். அந்த இளம் பெண் கொடுத்தத் தட்டில் பழங்கள், பூக்கள், குங்கும டப்பா, இரண்டு காப்புகள், மஞ்சள் கயிறு அத்துடன் ரவிக்கைத் துண்டொன்றும் இருந்தது. சாந்தா அம்மாளும் அந்தப் பெண்ணை ஆசீர்வதித்து விட்டு அந்த இளம் பெண் கொடுத்த தட்டை வாங்கிக் கொண்டார்.
ஒரேயொரு பெண்மணியைத் தவிர்த்து கோயிலுக்கு வந்த அத்தனை பெண்மனிகளாலும் கோயில் மண்டபத்தில் முன்னே சென்று அந்த இளம் பெண்ணை வாழ்த்த முடிந்தது. மற்ற எல்லாரையும் விட தான் வசதிமிக்கவள் என்று ஆணவமும் அகங்காரமும் கொண்ட விஜயகௌரி அம்மாள் எல்லா வசதிகளிருந்தும் ஏறக்குறைய முப்பது வருடங்களுக்கு முன்னரே இழந்து விட்ட ஒன்றை நினைத்து அப்போது தான் மனம் கிக வருந்தினார்.
அவர் எதை நினைத்து வருந்திக் கொண்டார் தெரியுமா? பெண்களுக்கு அதுவும் திருமணமான பெண்களுக்கு முக்கியமான அந்த ஒன்றை நினைத்துத் தான் மனம் கிக வருந்தினார். பெண்களை மிகவும் அழகாகவும் மங்களகரமாகவும் காட்டும் அந்த ஒன்றை எண்ணித் தான் துன்பப்பட்டார். இரு தலைக் கொள்ளி எறும்பு போல துடித்தார்! துவண்டார்!
அந்த ஒற்று தான் 'பூவும் பொட்டும்'.
நன்றி வீரகேசரி

2 comments:

Anonymous said...

நல்லா கதை விட்டிருக்கிறா

putthan said...

[quote]நல்லா கதை விட்டிருக்கிறா[/quote]

கதாசிரியர் கதை தான் விடுவார் ............கதாசிரியர் நல்ல முற்போக்கு சிந்தனையுள்ளவர் போலகிடக்கு