விக்ரோரியா மாநிலத்தில் இரண்டு பிள்ளைகள் பரிதாபமாக மரணம்
செய்தித்தொகுப்பு : கரு
சென்ற ஞாயிற்றுக்கிழமை மே மாதம் 30ம் திகதி விக்ரோரியா மாநிலத்தின் வடகிழக்குப் பகுதியில் இரண்டு பிள்ளைகள் இறந்திருப்பதை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. 9 வயதும் 7 வயதும் நிறைந்த சகோதரர்கள் மூரூப்னா என்னும் இடத்தில் வசித்துவந்தவர்கள் ஆவர். இவருடைய தாயார் 29 வயதுள்ளவர் தனது பிள்ளைகளைக் கொலை செய்திருக்கலாம்
என்ற சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டு பின்னர் விடுவிக்கப்பட்டுள்ளார். அவர் அண்மையிலிருக்கும் பெற்றோல் விற்குமிடத்தில் இரவில் வேலை செய்பவர். ஆனால் அன்றிரவு அவர் வேலைக்கு செல்லவில்லை. அன்று மாலை 6.30 மணியளவில் அம்புலன்ஸ் வண்டிக்கு அழைப்பிதழ் கிடைத்தது. இறந்து கிடந்த சகோதரர்களை அவ்விடத்திலிருந்து அகற்றிய பின் தாயாரை பொலிஷ் அழைத்துக்கொண்டு சென்றார்கள். பின்னர் அவர்கள் இருந்த வீட்டில் வெப்பமூட்டும் உபகரணத்திலிருந்து வெளியேறிய வாயுவே இவ்விருவருடைய மரணத்திற்குரிய காரணம் என கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அவர்களுடைய தாயார் தற்போது மருத்துவநிலையத்தில் சிகிச்சை பெற்று வருகின்றார். அவருக்கு எதிராக எந்தவித குற்றச்சாட்டும் இல்லை.
No comments:
Post a Comment