சபிக்கப்படுவது உண்மைதானோ
                                                                                                                      அப்பு சிவாகொட்டை எழுத்தில் 'குழந்தை தொழிலை ஒழிப்போம்'
கீழே அதில் பாதியில் 'இங்கனம், குழந்தை தொழிலாளர் ஒழிப்பு இயக்கம்'
வயிற்றுப் பிழைப்புக்கு போஸ்டர் ஒட்டிக்கொண்டிருந்தவனுக்கு வயது இன்றோடு எட்டு

****

இது வரவேற்பறை, இது படுக்குமறை
இது படிக்குமறை, இது பூஜையறை
இது நன்றியுள்ள ஜிம்மியின் அறை
ஆனால், அம்மா அப்பா அறை அடுத்த தெருவில் இருக்கும் முதியோர் இல்லத்தில்

****

திங்கட்கிழமை இவள் ஒருவனுக்கு ரம்பை
செவ்வாய்க்கிழமை அடுத்தவனுக்கு ரதி
அடுத்த நாள் மற்றொருவனுக்கு தேவதை
வயிற்றைக் கழுவதற்காக அடிக்கடி வயிற்றை கழுவும் இவள் பெயர் விலை மாது.

No comments: