பெற்றோல் நிரப்பும் நிலையத்தில் ஒரு பெண் கத்தியால் குத்தப்பட்டு தீயூட்டப்பட்டார்

மெல்மேன் நகரத்தின் கிழக்குப்பகுதியில் தனது சிநேகிதியை கத்தியால் குத்தியபின் அவளை காரோடு சேர்த்து எரித்துள்ளான். சென்ற செவ்வாய்க்கிழமை ஐ_ன் மாதம் 1ம் திகதி காலை 8.30 மணியளவில் ஒரு பெற்றோல் நிரப்பும் நிலையத்தில் தீயூட்டப்பட்ட அப் பெண் உடம்பு முழுவதும் எரிந்த நிலையில்

மருத்துவநிலையத்துக்கு எடுத்துச் செல்லப்பட்டார். அப்பெண்ணுக்கு கத்திக்குத்து காயமும் இருந்தது. உதவிக்கு சென்ற அருகிலுள்ளவரை அப்பெண்ணின் சிநேகிதன் தனது கத்தியை மேலும் கீழும் அசைத்து பயமுறுத்தினான். அவள் எரிந்து சாகட்டும் என்று கத்தினான். இச்சம்பவத்தை பார்த்து பொறுக்க முடியாத ஒருவர் தனது வாகனத்தால் அவனை மோதுவது போல் சென்ற போது அவன் அந்த இடத்தைவிட்டு ஓடிச்சென்று 100 மீற்றர் தொலைவிலுள்ள ஒரு தேவாலயத்திற்குள் போய் மறைந்திருந்தான். அவனை காலை 10.15 மணியளவில் பொலிஸார் மடக்கிப் பிடித்துள்ளனர்.
42 வயது நிறைந்த அப்பெண் அடுத்த நாள் காலை மரணமடைந்தார். 52 வயது நிறைந்த அப்பெண்ணின் சிநேகிதன் பொலிஸ் பாதுகாப்பில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.

No comments: