நேயர்  ஒருவர் படித்ததில் பிடித்தது

மாரடைப்பைத் தடுக்கும் வெள்ளைப் பூண்டு.


வெள்ளைப் பூண்டு அபூர்வ மருத்துவ சக்தி படைத்தது. அதன் பெருமையைத் தமிழர்கள் நீண்ட நெடுங்காலமாகவே அறிந்திருந்தார்கள். வெள்ளைப் பூண்டின் தாயகம் மத்திய ஆசியாவாகும்;.

சேக்ஸ்பியர் காலம் வரை ஆங்கிலேயர்களுக்கு வெள்ளைப் பூண்டு உவப்புத் தரவில்லை. இந்தியாவிற்கு வெளியே முதன் முதலில் வெள்ளைப் பூண்டை உபயோகித்தவர்கள் எகிப்தியர்கள்.

வெள்ளைப்பூண்டு சிறந்த கிருமி நாசினியாகவும் பயன்படுத்தப்படுகின்றது. அதே நேரம் வெள்ளைப் பூண்டுக்கு அரிய குணங்களும் உண்டு. அது வியர்வையைப் பெருக்குவதுடன் உடல் சக்தியையும் அதிகப்படுத்தும். அத்துடன் சிறுநீர்ப் பெருக்கத்தை தாராளமாக பிரியவைக்கும்.

தமிழர்கள் அதிகமான அளவுக்கு இருதய நோய்க்கு உள்ளாகிறார்கள். இந்த நோயில் இருந்து விடுபட வெள்ளைப்பூண்டு அதிகளவு பயன்தருகிறது.

No comments: