வில்லாவூட் அகதி முகாமில் பிறந்த தமிழ்ப்பிள்ளை
ஒரு வருடத்திற்கு முன் படகு மூலம் வந்த தமிழ் அகதிகள் கிறிஷ்மஸ் தீவில் தடுத்து வைக்கப்பட்டார்கள். பின்னர் இவர்கள் வில்லாவூட் அகதி முகாமிற்கு மாற்றப்பட்;டார்கள். கடந்த ஏப்ரல் மாதம் மூன்று குழந்தைகள் தடுப்பு முகாமில் பிறந்துள்ளார்கள். பிள்ளை பிரசவத்திற்கு மட்டும் தாய்மார்கள் மருத்துவநிலையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டார்கள். பிள்ளைகள் பிறந்து சில நாட்களில் மீண்டும் தடுப்பு முகாமிற்கு கொண்டு வரப்பட்டார்கள்.

இலங்கையிலிருந்து மலேசியாவுக்கூடாக அவுஸ்திரேலியா வந்தடைந்த ஒரு தமிழ்த்தாய் பிள்ளை பிறப்பதற்கு இரண்டு கிழமைக்கு முன்பாகவே இரத்தம் சிந்தியதால் அவரை உடனடியாக fairfield  மருத்துவநிலையத்திற்கு அழைத்துச் சென்றார்கள். அங்கு அவருக்கு சத்திரசிகிச்சை செய்யப்பட்டு பிள்ளையையும் தாயையும் காப்பாற்றினார்கள்.

சிட்னி பல்கலைக்கழக பேராசிரியர் மேரி குரொக், இப்படியாக முகாமில் பிறக்கும் குழந்தைகளுக்கு அவுஸ்திரேலியா பிரஜாவுரிமை  கிடையாது என்றும் இப்பிள்ளைக்கு   நாட்டற்ற நிலைமையே ஏற்பட்டுள்ளது எனவும் தெரிவித்தார்.

No comments: