SydWest Multicultural Services Inc.,    Auburn Tamil Society
நியூ சவுத் வேல்ஸ் மாநில  சமூக ஒத்துழைப்புத் திட்டம்
(New South Wales Community Partners Program  (CPP))
பல்கலாசார மற்றும் பன்மொழி சமூகத்தினரை
முதியோர் கவனிப்பு சேவைகளுடன் தொடர்புபடுத்துதல்

(Connecting Culturally and Linguistically Diverse Communities to Aged Care Services)அவுஸ்திரேலிய அரசினது ‘உடல்நலம் மற்றும் மூப்படைவு திணைக்கள’த்தின் முயற்சி
(An initiative of the Australian Government Department of Health and Ageing)

‘சமூக ஒத்துழைப்புத் திட்டம்’ என்றால் என்ன?
(What is the Community Partners Program (CPP)
கலாசாரம் மற்றும் மொழி ரீதியாக பரந்துபட்ட (culturally and linguistically diverse (CALD))  பின்புலத்தைச் சார்ந்த மக்கள் முதியோர் கவனிப்பு சேவைகளை அடைய ஒத்தாசை செய்வதற்கென அவுஸ்திரேலிய அரசின் ‘உடல்நலம் மற்றும் மூப்படைவு திணைக்களம்’ (Department of Health and Ageing)சமூக ஒத்துழைப்புத் திட்டத்தின் கீழ் சில அமைப்புக்களுக்கு நிதியுதவி அளிக்கிறது. இத் திட்டத்தின் பிரதான நோக்கமாவது:

குறிப்பிடத்தக்க வகையில் முதியோர் கவனிப்பு சேவைகள் தேவைப்படும் பல்கலாசாரப் பின்புல மக்கள் நீடித்த மற்றும் மேலதிக முதியோர் கவனிப்பு ஆதரவு சேவைகளைப் பெறுவதில் ஊக்கமளித்தல் மற்றும் ஆதரவளித்தல்.

குறிப்பிட்ட பகுதிகளில் வாழும் இலக்கில் கொள்ளப்பட்ட CALD சமூகத்தினருடன் சேர்ந்து பணியாற்றுவதற்கென ‘திட்ட அலுவலர்’(Project Officers)களை CPP நிதியுதவியினைப் பெறும் அமைப்புக்கள் பணியில் அமர்த்துகின்றன. CALD சமூகத்தினர் மற்றும் ‘முதியோர் கவனிப்பு சேவை வழங்குநர்கள்’ ஆகிய இருவருடனும் இணைந்து பணியாற்றும்; வகையில் ‘சமூக ஒத்துழைப்புத் திட்டம்’ (Community Partners Program)  மேற்கொள்ளும் பங்கு இரட்டிப்பானதாகும்.

CPP திட்டத்திற்கு அவசியம் என்ன?

முதியோர் கவனிப்பு சேவைகளைப் பெறுவதில் CALD பின்புலங்களைச் சார்ந்த முதியவர்கள் குறிப்பிட்ட சில சிரமங்களை எதிர்கொள்கின்றனர். எனவே, ‘முதியோர் கவனிப்பு சட்ட’(Aged Care Act 1997)த்தின் கீழ் இச் சமூகத்தினரை பிரத்தியேகமான கவனிப்பிற்குத் தேவையுள்ளவர்கள் என அவுஸ்திரேலிய அரசு அடையாளம் கண்டுள்ளது. மொழி, தகவல்களைப் பெறுதல், கலாசாரம் மற்றும் மதம் போன்றவை இச் சிரமங்களில் அடங்கலாம்.

CALD சமூகங்களைச் சேர்ந்த முதியோர்களுக்கு CPP-யினர் கீழ்வரும் சேவைகளை அளிக்கலாம்:

• கிடைக்கும் பல்வேறுபட்ட முதியோர் கவனிப்பு சேவைகள் குறித்த கல்வி மற்றும் தகவலளிப்பு அமர்வுகள்

• முதியோர் கவனிப்பு சேவைகளைப் பெறுவதில் உள்ள தடைகளை அடையாளம் கண்டு, அவற்றை நீக்குவதன் மூலம் சேவைகளை மேம்படுத்துதல்

• சமூக மொழிகள் குறித்த தகவல்கள், மற்றும் அம் மொழிகளுக்கான மூலவளங்கள்

முதியோர் கவனிப்பு சேவை வழங்கும் நிறுவனத்தாருக்கு CPP கீழ்வருவனவற்றை அளிக்கலாம்:

• உள்ளுர் CALD சமூகத்தினருடன் தொடர்புகள்;

• CALD சமூகங்களைச் சார்ந்த வயதானோருக்குள்ள தேவைகள் குறித்த தகவல்கள்

• கலாசாரத்திற்கு உகந்த கவனிப்பினை திட்டமிடுவதற்கான யுக்திகள் மற்றும் அறிவுரை

• கலாசாரங்கள் குறித்த கருத்துரைப்பு மற்றும் தகவல் பரிமாற்ற அமர்வுகள் (cultural briefings an information sessions)

• CALD மூலவளங்கள் மற்றும் அதன் அமைப்புமுறைக(networks)ளுடன் தொடர்பு

நி.ச.வே மாநிலத்திலுள்ள அனைத்து CPP திட்ட அலுவலர்கள், அவர்கள் இலக்காய்க் கொண்டுள்ள CALD சமூகத்தினர் மற்றும் அவர்கள் வாழும் பகுதிகள் ஆகியவற்றின் தொடர்பு விபர அட்டவணையை றறற.ளெறவயஉள.ழசப.யர எனும் நி.ச.வே மாநில TACS இணையதளத்தில் http://www.nswtacs.org.au/ பாருங்கள், அல்லது கீழே அட்டவணையிடப்பட்டுள்ள உங்களது உள்ளுர் CPP–யுடன் தொடர்பு கொள்ளுங்கள்:

Ms Sree Vithya Harilingam
Community Partners Program (Tamil Project Officer)
SydWest Multicultural Services Inc – CALDACS Project
Suite 9, 125 Main Street Blacktown 2148
PO Box 869 Blacktown 2148
Tel: (02) 8825 3739
Fax :( 02) 9621 4702
Web: www.sydwestmsi.org.au
E-mail: sree@sydwestmsi.org.au

No comments: