Melburne Tooronga இரயில் நிலையத்தில் இரயில் பிள்ளையை மோதியது.
சென்ற திங்கட்கிழமை மெல்பேர்ன் நகரிலுள்ள ரூரொங்கா இரயில் நிலையத்தில் ஒரு பிள்ளையோடு பிள்ளையை கொண்டுசெல்லும் தள்ளுவண்டி (Pram) தண்டவாளத்தை நோக்கி உருண்டு போய் தண்டவாளத்தில் விழுந்து அங்கு வந்துகொண்டிருந்த இரயிலோடு மோதியது. இந்த இரயில் நிலையமும் மற்றய மெல்பேர்ன் இரயில் நிலையத்தைப் போல தண்டவாளத்தை நோக்கி சரிவாக இருந்தது. அதிர்ஷ்டவதமாக இந்த பிள்ளை சிறு காயங்களோடு தப்பியுள்ளது.
சென்ற திங்கட்கிழமை காலை 11.13 மணிபோல இந்த 15 மாதங்கள் நிறைந்த ஆண்பிள்ளை தனது அம்மம்மாவோடும் 3 வயதுள்ள அண்ணாவோடும் ரூரொங்கா இரயில் நிலையத்தில் நகரத்தை நோக்கி சென்று கொண்டிருந்த இரயிலுக்கு காத்திருந்த வேளையில் இந்த விபத்து நடைபெற்றது.
கடந்த வருடம் சௌரிஷ் வேர்மா இதே போல விபத்தில் சிக்கி உயிர் தப்பிய சம்பவம் உலகம் முழுவதும் தலையங்கமாக செய்தி வந்தது தெரிந்ததே.
No comments:
Post a Comment