நாடு கடந்த தமிழீழ அரசவைக்கான ஆஸ்திரேலிய பிரதிநிதிகள் உத்தியோகபூர்வமான செய்தி
நியூ சவூத் வேல்ஸ் மாநிலத்துக்கு ஒதுக்கப்பட்ட நான்கு ஆசனங்களுக்கு , சேரன் சிறிபாலன்,
பாலசிங்கம் பிரபாகரன், சஞ்சயன் குலசேகரம், தர்ஸன் குணசிங்கம், ஆகியோர்
நாடு கடந்த தமிழீழ அரசவைக்கு பிரதிநிதிகளை தெரிவு செய்யும் பொருட்டு ஆஸ்திரேலியாவில் நியூ சவூத் வேல்ஸ் மாநிலத்தில் கடந்த 22 ஆம் திகதி சனிக்கிழமை இடம்பெற்ற தேர்தல் முடிவுகளை தேர்தல் ஆணையகம் வெளியிட்டுள்ளது. இதன்பிரகாரம், நியூ சவூத் வேல்ஸ் மாநிலத்துக்கு ஒதுக்கப்பட்ட நான்கு ஆசனங்களுக்கு சஞ்சயன் குலசேகரம், சேரன் சிறிபாலன், தர்ஸன் குணசிங்கம், பாலசிங்கம் பிரபாகரன் ஆகியோர் தெரிவுசெய்யப்பட்டுள்ளனர்.
இந்த முடிவுகளை அடுத்து, நாடு கடந்த தமிழீழ அரசவைக்கான ஆஸ்திரேலிய பிரதிநிதிகள் தெரிவு நிறைவுபெற்றிருக்கிறது. ஆஸ்திரேலியாவில் ஐந்து தொகுதிகளிலிருந்து பத்து பிரதிநிதிகளை தெரிவு செய்வதற்கு வேட்புமனுக்கள் கோரப்பட்டிருந்தன. நியூ சவூத் வேல்ஸ் மாநிலத்தை தவிர ஏனைய இடங்கள் அனைத்திலும் போட்டியின்றி ஆறு பேர் தெரிவு செய்யப்பட்டிருந்தனர்.
விக்டோரிய மாநிலத்தில் துரைசிங்கம் சண்முகானந்தகுமார், டொமினிக் சந்தியாப்பிள்ளை, பாலச்சந்திரன் ஜனனி ஆகியோரும் குவின்ஸ்லாந்து மாநிலத்தில் இளையதம்பி செல்வநாதனும் கன்பரா மற்றும் தஸ்மேனியா இணைந்து தொகுதியில் விஸ்வநாதன் அபிராமியும் மேற்கு - தெற்கு ஆஸ்திரேலிய மாநிலங்கள் மற்றும் வட பிராந்தியம் அடங்கிய தொகுதியிலிருந்து மாணிக்கவாசகர் கனகேந்திரம் ஆகியோரும் முன்னர் தெரிவு செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
நியூ சவூத் வேல்ஸ் மாநில தேர்தல் முடிவுகளை ஆஸ்திரேலியாவுக்கான செயற்பாட்டுக்குழு, நாடு கடந்த தமிழீழ அரசின் செயலகத்துக்கு அனுப்பிவைக்கப்பட்டு, அந்த முடிவுகள் தற்பொழுது உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. நியூ சவூத் வேல்ஸ் மாநில தேர்தல் மிகவும் ஆரோக்கியமாகவும், சுமூகமாகவும், தமிழ் மக்களின் உணர்வுபூர்வமான பங்களிப்புடன் நடைபெற்றது என்றும் தேர்தல் ஆணையகம் தெரிவித்துள்ளது
22 comments:
why you remove people'c comment
Balasingam prabharan good choice well done
Balasingam prabharan good clown well done ;)
சிறீலங்கா அரசு நியூசவுத்வேல்ஸ் மானில நாடுகடந்த தமிழீழ பிரதிநிதிகள் மீது அதிக அக்கறை கொண்டு எதிர்த்து உழைக்கத் தேவையில்லை ;)
Rajan said...
சிறீலங்கா அரசு நியூசவுத்வேல்ஸ் மானில நாடுகடந்த தமிழீழ பிரதிநிதிகள் மீது அதிக அக்கறை கொண்டு எதிர்த்து உழைக்கத் தேவையில்லை ;)
காரணம் என்ன? இப்படி மொட்டையாக போட்டல் விளங்காதுங்கோ ,கொஞ்சம் டிடேயிலா சொல்லுங்கோ
[quote]Anonymous said...
why you remove people'c comment[/quote]
அதுதான் கருத்து சுதந்திரமுங்கோ என்று முரசு சொல்லும்முங்கோ....
நாம் முன்பே குறிப்பிட்டிருந்தோம். உங்களுக்கு எல்லா கருத்துச் சுதந்தரமும் தரப்பட்டுள்ளது. ஆனால் தகாத வார்த்தைப் பிரயோகங்கள் மேற்கொள்ளுவது அநாகரிகமானது. அப்படியானதொன்றைத்தான் நீக்கியுள்ளோம்.
ஆசிரியர்
தெரிவு செய்யப்பட்டவையின்ர இலட்சணத்தைப் பார்க்கேக்கையே தெரியேல்லையோ கிறுக்கன் சிறீலங்கா அரசு நல்ல சந்தோஷமா இருக்கும்
உதில உள்ளவயில எத்தனை பேர் ஆயுதம் தூக்கியிருக்கினம் இல்லை பார்த்தாவது இருக்கினம் . கனக்க வேண்டாம் யுத்தம் நடந்த களத்தில காலடி வச்சிருப்பினமே . இப்ப தமிழருக்கு உவை தீர்வு காணப்போகிணமாம். சொல்வார் சொன்னா கேட்பாருக்கு மதி என்ன? உவன் தான் உங்க சிட்னி தமிழருக்கிடயேயே பிளவை உண்டாகிறவன். அப்ப பிறகென்ன குரங்கின் கை பூமாலை தான்
உதில உள்ளவயில எத்தனை பேர் ஆயுதம் தூக்கியிருக்கினம் இல்லை பார்த்தாவது இருக்கினம் . கனக்க வேண்டாம் யுத்தம் நடந்த களத்தில காலடி வச்சிருப்பினமே . இப்ப தமிழருக்கு உவை தீர்வு காணப்போகிணமாம். சொல்வார் சொன்னா கேட்பாருக்கு மதி என்ன? உவன் தான் உங்க சிட்னி தமிழருக்கிடயேயே பிளவை உண்டாகிறவன். அப்ப பிறகென்ன குரங்கின் கை பூமாலை தான்
This is another MULLIVAAYKKAL :-(((((
[quote]May 31, 2010 2:49 PM
Rajan said...
தெரிவு செய்யப்பட்டவையின்ர இலட்சணத்தைப் பார்க்கேக்கையே தெரியேல்லையோ கிறுக்கன் சிறீலங்கா அரசு நல்ல சந்தோஷமா இருக்கும் [/quote]
இன்றைய சூழ்நிலையில் ஆட்களின் இலட்சணம் முக்கியமல்ல ...ஒரு சக்திவாய்ந்த கட்டமைப்பு புலத்தில் தேவை அந்த கட்டமைப்பை உருவாக்குவதற்கு சிலர் முயற்சி செய்து வெற்றியடைந்துள்ளார்கள்.
[quote]karuppy said...
உதில உள்ளவயில எத்தனை பேர் ஆயுதம் தூக்கியிருக்கினம் இல்லை பார்த்தாவது இருக்கினம் . கனக்க வேண்டாம் யுத்தம் நடந்த களத்தில காலடி வச்சிருப்பினமே . இப்ப தமிழருக்கு உவை தீர்வு காணப்போகிணமாம். சொல்வார் சொன்னா கேட்பாருக்கு மதி என்ன? உவன் தான் உங்க சிட்னி தமிழருக்கிடயேயே பிளவை உண்டாகிறவன். அப்ப பிறகென்ன குரங்கின் கை பூமாலை தான் [/quote]
இந்த குழுவினர் சில நல்ல காரியங்கள் செய்துள்ளனர் என்பதை மறுப்பதற்கில்லை,முக்கியமாக முள்ளிவாய்க்கல் அனர்த்ததின்பொழுது மக்கள் ஒன்றுகூடுவதற்கு தங்களால் ஆன முயற்சிகளை செய்தவர்கள்,
ஆயுதம் மூலம்தான் தீர்வைகாணலாம் என்று இன்னும் நீங்கள் நம்புகிறீர்களா?
புலத்திற்கு வந்த எல்லோரும் (நான் உட்பட்) கணனி வீரர்கள்தான் ,சிலர் வானொலி வீரர்,சிலர் மேடை வீரர்
நாடு கடந்த தமிழீழம் இருக்கட்டும் பாருங்கோ உந்த நாலாவதா தெரிவு செய்யப்பட்ட வானொலிக்காறன் ஊரை ஏமாத்தில் உலையில போட்ட காசு நிறையவாம், முதலில் கடன்காரற்றை வயிறெரியாமை பாருங்கோ. அவையும் தமிழ்ச்சனம் தானே பாருங்கோ
[quote]kirrukan said...
[/quote]
இந்த குழுவினர் சில நல்ல காரியங்கள் செய்துள்ளனர் என்பதை மறுப்பதற்கில்லை,முக்கியமாக முள்ளிவாய்க்கல் அனர்த்ததின்பொழுது
[/quote]
ஓமோம் முள்ளிவாய்க்கால் அனர்த்தத்தின் போது ஒவ்வொரு ஸ்பைஸ் கடைக்கும் முன்னாலை இன்னொரு தமிழ்மகனை அவதூறு செய்து நோட்டீஸ் ஒட்டின எழுச்சி புல்லரிக்க வைக்குதுங்கண்ணா, அந்த விஷயத்தில் நாலாவதா வந்த வானொலிக்காரனோட குணத்தோட நல்ல ஒற்றுமையா வந்திட்டாங்கண்ணா
தயவு கூர்ந்து ஒருவரின் மனதை புண்படுத்தும் வகையில் எழுதாதீர்கள். வாசகர்கள் எழுதும் விதத்தைப் பார்த்தால் தனிப்பட்ட பிரச்சனைகளை வைத்தே உங்கள் கருத்துக்களை எழுதுகிறீர்கள். இரண்டு வானொலிகளுக்கிடையே உள்ள மன வேற்றுமையை இங்கே கொண்டு வந்து உங்கள் பிரச்சனைகளை இங்கே எழுத வேண்டாம். இது எந்த வானொலி சம்பத்தப்பட்ட தளமும் இல்லை. இரண்டு பக்கமும் பிழைகள் உள்ளது. பாலசிங்கம் பிரபாகரன் தான் பிளவை ஏற்படுத்துகின்றார் என்றில்லை. இங்கே வாழும் எல்லோருமே எதோ ஒரு விதத்தில் இன்னொருவரை தமக்கு பிடிக்கவில்லை என்றால் சுயநலத்திற்காக மற்றவரை தாக்கிக் கொண்டே இருகின்றார்கள். முதலில் மற்றவரை குறை கூறி எழுதும் நீங்கள் அதை எழுதுவதற்கு முன் ஒருமுறை சிந்தித்து பாருங்கள் நீங்கள் செய்வது சரியா என்று. தயவு செய்து இந்தத் தளத்தை பாவித்து உங்கள் தனிப்பட்ட வானொலி சார்ந்த வேற்றுமையை வைத்து ஒருவரை தாக்கி எழுத வேண்டாம் என்பதே எனது அன்பான வேண்டுகோள். ஒருவரும் இங்கு சுத்தமானவர்கள் இல்லை. எல்லோருமே ஏதோ வகையில் அழுக்கு நிரம்பியவர்கள் தான். சமூகத்திற்கு தேவையான நல்ல கருத்துக்களை முன் வையுங்கள். உங்கள் கருத்துக்களால் தவறு செய்யும் எல்லோரும் திருந்தி வாழ வேண்டும் என்று நினையுங்கள். தனிப்பட்ட கோபங்களை இங்கே கொண்டு வராதீர்கள். ஊரை ஒருவர் மட்டும் ஏமாத்தி பணம் சேர்க்கவில்லை அநேகமானோர் அதைத்தான் செய்கின்றார்கள். எனவே ஒருவரை மட்டும் குறை கூறாதீர்கள்.உங்கள் ஒத்துழைப்பை கொடுக்க முடிந்தால் கொடுங்கள் இல்லையெனில் விரோதத்தை விளைக்காது பேசாமல் இருங்கள்.
நன்றி
மாலா
நல்ல கருத்துக்களை சொல்லியிருக்கிறீர்கள், பிரச்சனையே இந்த வானொலிகளை வைத்து தேசியம் வளர்ப்பவர்கள் தானே இப்படி ஒருபக்கச் சார்பாகத் தம் நிலை எடுத்து பிரிவினையை இன்னும் ஊதிப் பெருக்குகிறார்கள். நாடுகடந்த தமிழீழம் என்ற ஒரு நல்ல காரியத்துக்கு உருப்படியான கல்விமான்கள், அரசியல் சாணக்கியம் படைத்தவர்கள் ஒருவர் கூட சிட்னியில் இல்லை என்கிறீர்களா? வானொலிக்காரனை வைத்து என்ன செய்யப் போகினம் என்பதே கேள்வி, மற்றப்படி எனக்கு இந்த இரண்டு வானொலி பற்றி எந்தக் கரிசனையும் இல்லைப்பாருங்கோ
I don't like ATBC or Inbath thamil oli.
I like GTV
Para said...
I don't like ATBC or Inbath thamil oli.
I like GTV
//
Joker
You people crazy.. If you all think these 4 not good , then why you all go and vote for others !!!!!!
What a Joke
Anonymous said...
You people crazy.. If you all think these 4 not good , then why you all go and vote for others !!!!!!
//
;-) you are funny, I didn't go for voting
Post a Comment