நம்பிக்கை இன்னும் மீதமிருக்கிறதோ?


                                                                         வ.ஜ.ஜெ.ஜெயபாலன் கவிதை ஒன்று.


நம்பிக்கை

துணை பிரிந்த குயிலொன்றின்

சோகம் போல

மெல்ல மெல்ல

கசிகிறது ஆற்று வெள்ளம்.

காற்றாடும் நாணலிடை

மூச்சுத் திணறி

முக்குளிக்கும் விரால் மீன்கள்.

ஒரு கோடை மாலைப் பொழுது அது.

என்னருகே

வெம்மணலில்

ஆலம் பழக் கோதும்

ஜந்தாறு சிறு வித்தும்

காய்ந்து கிடக்கக் காண்கிறேன்.

என்றாலும்,

எங்கோ வெகு தொலைவில்

இனிய குரல்எடுத்து

மாரி தன்னைப் பாடுகிறான்

வன்னிச் சிறான் ஒருவன்.

வேளை பிறக்கும் என்று நம்பிக்கை கொள்வோம்.

என் இனமே…..என் சனமே…..

No comments: