நியூ சவுத் வேல்ஸ் மாநிலத்தில் நடைபெற்ற நாடு கடந்த தமிழ் ஈழ அரசுப் பிரதிநிதிகளுக்கான வாக்கெடுப்பு
நியூ சவுத் வேல்ஸ் மாநிலத்தில் நடைபெற்ற நாடு கடந்த தமிழ் ஈழ அரசுப் பிரதிநிதிகளுக்கான வாக்கெடுப்பு சென்ற சனிக்கிழமை 22ம் திகதி வென்ற்வேத்விலும் ஹோம்புஷ்சிலும் நடைபெற்றது.
நியூ சவுத் வேல்ஸ் மாநிலத்தில் 6 பேர் போட்டியிட்டார்கள். அவர்களுள் நால்வர் தெரிவுசெய்யப்பட்டனர். சிட்னியில் உள்ள வாக்களர் தொகை ஏறக்குறைய 11 ,200 என்றும் அவர்களில் இருந்து இந்த நான்கு பேருக்கான தேத்தல் நடை பெறுவதாகவும் அறியப்படுகிறது
கிடைக்பெற்ற வாக்குகளின் விபரம் பின்வரும் அட்டவணையில் பார்க்கவும்.
தேர்தலில் நின்றவர்கள்
வென்ற்வேத்வில் ஹோம்புஷ் மொத்தம்
மொத்த வாக்குகள் 744 619 1363
சிவசம்பு பிரபாகரன் 91 113 204
டர்ஷன் குணசிங்கம் 680 551 1231
பாலசிங்கம் பிரபாகரன் 672 521 1193
விக்ரர் இராஜகுலேந்திரன் 75 89 164
குலசேகரம் சஞ்சயன் 718 582 1300
சேரன் ஸ்ரீபாலன் 696 576 1272
நிராகரிக்கப்பட்ட வாக்குகள 11 11 22
தெரிவு செய்யப்பட்டவர்களில் குலசேகரம் சஞ்சயன் 1300 வாக்குகள் பெற்று முதல் இடத்தில் வந்துள்ளார் அடுத்து , சேரன் ஸ்ரீபாலன,அதை அடுத்து டர்ஷன் குணசிங்கம், அதை தொடர்ந்து பாலசிங்கம் பிரபாகரன் ஆகிய நால்வரும் தெரிவு செய்யப்பட்டார்கள்.
ஆஸ்திரேலிய தமிழ் ஒலிபரப்பு தமிழ் வானொலி இந்த தேர்தல் முறையாக நடை பெறவில்லை என்று சில நாட்களாக பரப்புரை செய்தது தேர்தலை பகிஸ்கரிக்க வேண்டும் என்ற முறையில் நேயர்கள் பேசிவந்தது குறிபிடத்தக்கது.
இன்பதமிழ் ஒலி வானொலி தொடர்ந்து வெற்றியீட்டிய நால்வருக்காக பிரச்சாரம் செய்து வந்ததும் குறிப்பிடத்தக்கது.
28 comments:
Hi
This is going to be a another "Mulivaikal".
this is our fate. We never get freedom.
thanks
Out of over 11,000 tamils, only 1363 voted. Are the rest supported the call for boycott. May be another measure is around 4-5,000 people voted for Vaddu Resolution in Sydney. Considering that, the number voted this time is very low.
voting was genuine.But election the way it was contacting was very root.And the one came 4th now understand what is his stand in the community as wel as the one came 1st.
In other way Inbathamil oli got 1300 votes and ATBC got 10,000 votes. Am I correct?
Well done Sydney Tamils. Keep it up.Atleast now people are starting to think.
Those 1300 voted also ranked him 4th ( Not that they voted, they were forced to do that )
ஒழுங்கா ஒரு வானொலி ஊடகத்தையே நடத்தத் தெரியாமல் இருக்கும் ஒரு மக்கு நாடுகடந்த தமிழீழ அரசுக்கு எந்த வகையில் இருக்கும். இலங்கையில் ஒரு மேர்வின் சில்வா சிட்னியில் ஒரு பாலசிங்கம் பிரபாகரன், சபாஷ் சரியான போட்டி
[quote]In other way Inbathamil oli got 1300 votes and ATBC got 10,000 votes. Am I correct?
Well done Sydney Tamils. Keep it up.Atleast now people are starting to think.
Those 1300 voted also ranked him 4th ( Not that they voted, they were forced to do that )[/quote]
பின்ன ஏனுங்கோ விக்டர் ராஜகுலேந்திரனும்,சிவசம்பு பிராபாகரனும் ATBC சார்பாக கேட்டடவையள்
ஏனுங்க கிறுக்கா
கண்ட கிறுக்கனும் இந்தப் பணிக்கு வரக்கூடாது என்ட நல்லெண்ணித்தில தான் கிறுக்கா
வாசகர்களே உங்கள் கருத்துக்களை இந்தப்பகுதியில் பதிவதற்கு உங்களுக்கு தமிழ்முரசு பூரண உரிமையை தந்திருக்கிறது. அது ஆரோக்கியமான கருத்துக்களை முன்வைப்பதற்காகவே. இனியாவது எமது சமூகம் ஆரோக்கியமான கருத்துப்பரிமாறல்களை கொண்டிருக்க வேண்டும் என்று நம்புகின்றோம். பாவிக்கக் கூடாத வார்த்தைப்பிரயோகங்களை பாவிப்பதன் மூலம் நீங்கள் எந்த நன்மையையும் அடையப்போவதில்லை. நீங்கள் பதியும் அனைத்தையும் நாம் அவதானித்தக்கொண்டுதான் இருக்கின்றோம். நீங்கள் பாவிக்கும் பெயர்கள் வாசகர்களிடம் இருந்துதான் உங்களை மறைக்குமே தவிர எங்களிடம் இருந்தல்ல. நீங்கள் எந்தமுகவரியில் இருந்து இடுகின்றீர்கள் என்பதை நாங்கள் அறிவோம். ஆகவே தயவுசெய்து ஒஸ்ரேலியாவிலே வாழுகின்ற நாங்கள் ஆரோக்கியமான கருத்தை முன்வையுங்கள். தவறான வார்த்தைகளையல்ல.
தவறான வார்த்தைப்பிரயோம் செய்யப்பட்ட கருத்துப் பதிவு நீக்கப்பட்டுவிட்டது. வாசகர்கள் சிலமணி நேரம் கருத்துப் பதிய முடியாமல் இருந்ததற்கு தமிழ் முரசு வருந்துகின்றது.
நன்றி ஆசிரியர் குழு
தமிழ் முரசு 25.05.10 1.55
[quote]கண்ட கிறுக்கனும் இந்தப் பணிக்கு வரக்கூடாது என்ட நல்லெண்ணித்தில தான் கிறுக்கா [/quote]
அப்ப 164 பேர் மட்டும்தான் சிட்னியில நல்லெண்ணமுடையவர்கள் ,மற்றவையள் எல்லாம் கிறுக்கன்கள் என்றீயள் 1300
First of all, thanks tamil murasu for maintaining the standard. I love to view the comments. As you said it should not hurt others feelings and we have to use good words and maintain our dignity. Thanks Tamil Murasu.
Hi Kirukkan
What I said was Inbathamil oli asked to vote whereas ATBC wanted to boycott. Only 1300 voted and 10,000 didnt vote.
Do you understand now. The winner is ATBC. I dont care about the people who are fighting for the chair.
[quote]karuppy said...
What I said was Inbathamil oli asked to vote whereas ATBC wanted to boycott. Only 1300 voted and 10,000 didnt vote.
Do you understand now. The winner is ATBC. [/quote]
வேட்பாளராக நின்று போட்டு தோல்வியை தழுவியபின்பு ,நாங்கள் பகிஷ்கரிக்க சொன்னாங்கள் அதுதான் மக்கள் வோட்டு போடவில்லை என்று சொல்லுறது கிறுக்குதனமாக இருக்கல்லோ?
ஜயா, முள்ளிவாய்கால் படுகொலை நடக்கும் பொழுதே 10000 தமிழனும் வீதிக்கு வரவில்லை ,வந்தது ஒரு 7000தான் அதுவும் எவ்வளவோ சிரமப்பட்டுதான் வந்தவர்கள் .இந்த இலட்சணத்தில 10000 டமிழ்ஸ் இதுக்கு வாக்கு போட வரப்போரார்களா?
இது என்ன இரு வானொலி சம்பந்தப்பட்ட விடயமா?இல்லையே ஒரு இனத்துடன் சம்பந்தப்பட்ட விடயம் என்பது உங்களுக்கு விளங்கும் என்று நினைக்கிறேன்
[quote]Murasu said...
. இனியாவது எமது சமூகம் ஆரோக்கியமான கருத்துப்பரிமாறல்களை கொண்டிருக்க வேண்டும் என்று நம்புகின்றோம்.
நன்றி ஆசிரியர் குழு
தமிழ் முரசு 25.05.10 1.55[/quote]
அப்ப இவ்வளவு காலமும் ஆரோக்கியமான கருத்தை சிட்னிதமிழன் வைக்கவில்லை,தேர்தலுக்கு பிறகாவது நல்ல கருத்தை வையுங்கோ என்று சொல்லுறீயள்
kirrukan said...
ஜயா, முள்ளிவாய்கால் படுகொலை நடக்கும் பொழுதே 10000 தமிழனும் வீதிக்கு வரவில்லை ,வந்தது ஒரு 7000தான் அதுவும் எவ்வளவோ சிரமப்பட்டுதான் வந்தவர்கள் .இந்த இலட்சணத்தில 10000 டமிழ்ஸ் இதுக்கு வாக்கு போட வரப்போரார்களா?//
வட்டுக்கோட்டைக்கு வாக்களிச்ச நாலாயிரத்துச் சொச்சம் கூட இதுக்கு வரவில்லையே, மூவாயிரத்துச் சொச்சம் புறக்கணிச்சிட்டுதே கிறுக்கா,
இரு வானொலி சம்பந்தப்பட்ட விடயமா என்று நல்லதொரு கருத்தை முன்வச்சிருக்கிறியள், ஆனால் தேர்தல் நடத்தினவையும் சரி, சிட்னிக்குப் பொறுப்பாக விட்டவையும் சரி ஒரு தலைப்பட்சமாக ஒரே வானொலியைக் குசிப்படுத்ததை அறிவீரோ
தேசிய நோக்கைப் புறந்தள்ளி ஒரு தனியார் வானொலிக்காரனுக்கு முதுகு சொறிந்தால் இன்று ஆயிரத்துச் சொச்சம், நாளை அதுவுமில்ல்லை என்ற நிலைதான் தேசியம் சொல்லிக் கொண்டிருப்பவர்களுக்கு கிட்டும் என்பது இந்தத் தேர்தல் மூலம் தெளிவாகியிருக்கு.
இனியாவது தனி ஆள் வானொலிக்கு முதுகு சொறியாமல் தேசியம் என்ற ஒன்றை மட்டும் நோக்காகக் கொண்டு செயற்பட்டால் அதுவே தாயக மக்களுக்கு இதுவரை செய்த துரோகத்துக்கு பரிகாரமாக அமையும்.
,[quote] மூவாயிரத்துச் சொச்சம் புறக்கணிச்சிட்டுதே கிறுக்கா,[/quote]
தேர்தலை புறக்கணிக்க சொல்லி தேர்தலுக்கு முதல் எந்த வனோலியும் பிரச்சாரம் செய்யவில்லையே.
ஆனால் ஒருசிலர், சிட்னிதமிழர்கள் தேர்தலை புறக்கணித்து விட்டார்கள் என்று பிரச்சாரம் செய்து குளிர்காய நினைக்கினம்.அதாவது புறக்கணித்துவிட்டார்கள் தமிழர்கள் என்ற கருத்தை தினிப்பது என்று அடம்பிடிக்கினம்
கிறுக்கா
இந்தத் தேர்தலே அராஜகமாக நடக்கும் முறைகேடானதொன்று என்று ஏரிபிசியில் தேர்தலுக்கு முன் தினங்களும், தேர்தல் அன்றும் கருத்து முன்வைக்கப்பட்டது, நேயர்கள் பலரும் அதை ஆமோதித்தார்கள். வானொலியே கேட்காமல் நீர் கருத்தளித்து குளிர் காய்கிறீர்.
[quote]இந்தத் தேர்தலே அராஜகமாக நடக்கும் முறைகேடானதொன்று என்று ஏரிபிசியில் தேர்தலுக்கு முன் தினங்களும், தேர்தல் அன்றும் கருத்து முன்வைக்கப்பட்டது, நேயர்கள் பலரும் அதை ஆமோதித்தார்கள். வானொலியே கேட்காமல் நீர் கருத்தளித்து குளிர் காய்கிறீர்.[/quote]
ஏரிபிசி எமது வேட்பாளர்களை நாம் வாபஸ் வாங்குகிறோம் ,என்று சொல்லி வேட்பாளர்கள் தேர்தல்களத்திலிருந்து விளக்கியிருந்தால் நீங்கள் சொல்லுவது போல் மக்கள் புறக்கணித்தார்கள் என்று நம்பலாம் ,ஆனால் இருவர் நின்று தோல்வியை தழுவியபின்பு சொல்வது அழகல்ல.
நாங்கள் தேர்தலில் நிற்போம் ஆனால் நீங்கள் புறக்கணியுங்கோ.என்று சொல்லுவது எந்தவகையில் நியாயமுங்கோ?
கடைசிவரை வேட்பாளர்கள் உறுதியாக நின்றார்கள், அதுதான் அவர்களின் மனவலிமை, தேர்தலைப் புறக்கணித்தது மக்களே. வேட்பாளர்கள் வாபஸ் வாங்கியிருக்காவிட்டால் பல்லாயிரக்கணக்கான ஓட்டுக்கள் என்று அந்த நால்வர் கூட்டணி தம்பட்டம் அடிச்சிருக்குமேயுங்கோ
கடைசிவரை வேட்பாளர்கள் உறுதியாக நின்றார்கள், அதுதான் அவர்களின் மனவலிமை, தேர்தலைப் புறக்கணித்தது மக்களே. வேட்பாளர்கள் வாபஸ் வாங்கியிருந்து நால்வரும் ஏகமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டிருந்தால் எங்களுக்கு பல்லாயிரக்கணக்கான ஓட்டுக்கள் என்று அந்த நால்வர் கூட்டணி தம்பட்டம் அடிச்சிருக்குமேயுங்கோ
10 வாக்குகளால் தெரிவு செய்து பாரளுமன்றம் சென்றவன்....எம்.பி தானுங்கோ.
What you said is right kirukkan. Even if you get 10 votes you can be MP. But you have to accept that you got only 10 votes. Dont say you won by majority. Majority didnt vote.
Can I give you an advise. Better start to listen ATBC, you will come to know the truth.I am not joking. There are lots of people they dont know what is happening behind the scene.
May 26, 2010 9:43 PM
[quote] karuppy said...
What you said is right kirukkan. Even if you get 10 votes you can be MP. But you have to accept that you got only 10 votes. Dont say you won by majority. Majority didnt vote.
Can I give you an advise. Better start to listen ATBC, you will come to know the truth.I am not joking. There are lots of people they dont know what is happening behind the scene[/quote].
உங்களுக்கு உண்மையை சொன்னால் என்ன...இன்பத்தமிழ் வானொலியும் ஏடிபிசியும் என்னுடைய இரண்டு கண்கள் .சமையல் செய்யும் பொழுது ஒரு வானோலி ,படுக்கும் பொழுது மற்ற வானொலி ,காரில இரண்டும் .காரணம் இரண்டும் ஊடகம் என்ற கண்ணொட்டதிலதான் நான் பார்க்கிறனான்.அதை நடத்தும் மனிதர்களை வைத்தல்ல.
ஊடகங்களின் விசிறியாக நான் இருந்ததும் இல்லை இனிமேல் இருக்கப் போவதும் இல்லை
படிச்சு பட்டம் பெற்ற உத்தமர்கள்(சிலர்),மேடைக் பேச்சளர்கள்(சிலர்) ,அறிவிப்பாளர்கள்(சிலர்) இந்த இரு வானொலியையை படுத்தும் பாடு நாம் அறிவோம்.
வணக்கம் கிறுக்கன்
வானொலி என்பது செய்தி ஊடகமே, நேயர்களுக்கு அவை சேவை செய்வதில் தான் முன் நிற்க வேண்டும் இது எல்லா வானொலிக்கும் பொருந்தும். ஆனால் இங்கேயோ இரண்டு அணிகளாகப் பிரிந்து ஆளை ஆள் அடிப்பதற்கு நேயர்களும் பொறுப்பேற்க வேண்டும். ரஜனி, விஜய் என்ற கேடு கெட்ட ஹீரோயிசம், ஹிட்லரிசம், பொறாமை, எதேச்சிகாரம், ஏகாதிபத்தியப் போக்கு என்பவை இங்கே இருப்பது கேவலமான ஒரு உண்மை.
இனிமேலாவாது தனி நபர்களைப் புறந்தள்ளி இரண்டு வானொலி என்றாலும் ஒரே நோக்கோடு அவர்களை நடத்த வேண்டும், இது எல்லா பெரியவர்களுக்கும் பொருந்தும்.
[quote]ரஜனி, விஜய் என்ற கேடு கெட்ட ஹீரோயிசம், ஹிட்லரிசம், பொறாமை, எதேச்சிகாரம், ஏகாதிபத்தியப் போக்கு என்பவை இங்கே இருப்பது கேவலமான ஒரு உண்மை.[/quote]
புலத்தை பொருத்தவரையில் இவற்றின் வளர்ச்சிக்கு வானொலியும் ஒரு காரணம், பணத்தை கொடுத்து (விளம்பரம் என்ற போர்வையில்) சில கருத்துருவாக்கமையங்கள் தங்களது கருத்துக்களை இலகுவாக நேயர்களுக்கு புகுத்தி விடுகிறார்கள்.
நேயர்களும் பகுத்து ஆராயாமல் அப்படி உள்வாங்கி கொள்கிறார்கள்
Sydney Tamil Community’s active participation, the process and the results on YouTube.
Voting at Polling Station 1 – Wentworthville: http://www.youtube.com/watch?v=Hw-ol8PFcK8
Voting at Polling Station 2 – Homebush: http://www.youtube.com/watch?v=PO906jov-VU
Counting of Votes http://www.youtube.com/watch?v=jZElOrIgO5c
The Results http://www.youtube.com/watch?v=Ox4CixoB4Ls
well said kirukkan
Anonymous said...
Sydney Tamil Community’s active participation, the process and the results on YouTube.//
good joke buddy, keep it up
Post a Comment