சிட்டுக்களின் தேன்துளிகள்


                                                        சாந்தினி புவனேந்திரராஜா - மெல்பேர்ண்



மே 8ஆம் தேதி மெல்பேர்ணில் ”சிட்டுக்களின் தேன்துளிகள்” என்ற சிறுவர் பாடல் தொகுப்பொன்று இறுவெட்டாக(CD)வெளியிடப்பட்டது. மெல்பேர்ண் இசை ஆசிரியை திருமதி. தவீனா வேந்தன் அவர்களால் வெளியிடப்பட்ட இந்த இறுவெட்டில், அவரதும், அவரது மாணவச்சிட்டுக்களினதும் தேன்குரலில் பாடப்பட்ட 14 சிறுவர் பாடல்கள் பதிவாகி உள்ளன.


பலரது ஒத்துழைப்புடனும், சங்கீத ஆசிரியையான தனது தாயாரின் ஆசிகளுடனும், தான் சிறுமியாக இருந்தபோது பாடி மகிழ்ந்த பாடல்களையும் தனது குரலிலும், தனது மாணவர்களது குரல்களிலும் பாடிப் பதிவு செய்து, தனது நீண்ட கால  கனவினை நிறைவு செய்திருக்கும் தவீனா, இங்கு வளர்கின்ற தமிழ்ச் சிறுவர்களுக்குத் தமிழ் கற்க, தமிழில் பாடித் தமிழ் கற்கப் பேருதவியும் செய்திருக்கிறார் என்றால் அது மிகையாகாது.

சிறுவர்கள் மட்டுமல்லப் பெரியவர்களுக்கும் ஏற்ற இறுவெட்டு இது என்பதை இதனைக் கேட்டு, அனுபவித்து, அறிந்து கொண்டேன். இதற்கு முக்கிய காரணம், நாம் சிறுவர்களாக இருந்தபோது பாடிக்களித்த பாடல்கள் சிலவும் “அப்பா என்னை அழைத்துச் சென்றார் அங்கு ஓரிடம்” என்ற பாடல், மற்றும் “வண்ணத்துப்பூச்சி வண்ணத்துப்பூச்சி பறக்குது பார்” போன்ற பாடல் வடிவத்தில் அமைந்த பாடல்களும் இதில் இருப்பதுதான். நாம் மறந்து விட்டிருந்த பாடல்களைக் காலத்தால் அழிந்து விடக்கூடாத பாடல்களைத் திருமதி. தவீனா வேந்தன் இறுவெட்டில் பதிய வைத்திருப்பது எமக்கெல்லாம் மகிழ்ச்சி மட்டுமல்லப் பெருமையும் கூட அல்லவா!

சிட்டுக்களின் தேன்துளிகளைப் பருகி மகிழ விரும்புபவர்கள் திருமதி. தவீனா வேந்தன் அவர்களை 03 8790 6859 என்ற தொலைபேசி இலக்கத்தில் தொடர்பு கொள்ளுங்கள். mailto:டாவின@ஒப்டுநெட்.கம.au

.

1 comment:

தமிழ் கற்றல் கற்பித்தல் said...

மெல்பர்ன் எழுத்தாளர் விழாவில் திருமதி தவீனா வேந்தன் அவர்களும் திரு வேந்தன் அவர்களும் இடைவேளையின் போது பார்வையிட வந்தவர்களுக்கு விளக்கமளித்துக்கொண்டிருந்தனர். அருகே இறுவட்டில்லிருந்து பாடல்கள் ஒலித்துக்கொண்டிருந்தன. கேட்க இனிமையாக இருந்த பாடல்களை சிட்னிக்கும் அறிமுகம் செய்தல் நன்மை பயக்கும். இங்குள்ள தமிழ்ப் பாடசாலைகளின் ஆரம்பவகுப்பு மாணவர்களுக்கு பயனுள்ள பாடல்கள். பாடசாலைகள் முயன்றால் முடியாததல்ல.
திருநந்தகுமார்.