சிட்னி தமிழ் அறிவகம்


SYDNEY TAMIL RESOURCE CENTRE INC
LOCATION: 54 THE CRESCENT, HOMEBUSH. PHONE (02) 9764 4122
POSTAL ADDRESS: P.O.BOX S420 HOMEBUSH NSW 2140
ABN No: 29 264 616 625

21.05.2010
அன்புடையீர்,
கொடிவார தினம் 2010
சிட்னி தமிழ் அறிவகம் கடந்த 14 வருடங்களாக யாழ் நூலகம் தீக்கிரையாக்கப்பட்ட நிகழ்வை நினைவு கூர்ந்து வருவதை தாங்கள் அறிவீர்கள்.
ஈழத் தமிழர்களின் அறிவாலயமாக விளங்கிய யாழ் நூலகம் தீக்கிரையாக்கப்பட்ட சம்பவத்தை, இவ்வருடமும் நினைவு கூர்ந்து, கொடிவார நிகழ்வை நடாத்த எமது நிர்வாகக் குழு தீர்மானித்துள்ளது. இந்நிகழ்வு ஜுன் மாதம் 5ம் திகதி சனிக்கிழமை மாலை 6:30 மணிக்கு Homebush Primary School மண்டபத்தில் நடைபெறவுள்ளது.
தாங்கள் இவ்விழாவிற்கு குடும்ப சமேதரராக வருகைதந்து ஞாபகார்த்த கொடிவிற்பனையிலும் கலந்து கொண்டு உங்கள் ஆதரவை நல்குமாறு அன்புடன் அழைக்கின்றோம்.
இந்த வைபவம் பற்றிய விபரங்கள் பின்வருமாறு:

காலம்: 05.06.2010, சனிக்கிழமை, மாலை 6:30 மணி

இடம்: Homebush Primary School

Rochester Street

Homebush

மேலும், மண்டப வாசலில் உங்களை வரவேற்க காத்திருக்கும் எமது நிர்வாகக் குழு உறுப்பினரிடம் உங்கள் வருகையை அறியத்தருமாறு அன்புடன் வேண்டுகிறோம்.

நன்றியுடன்
வீ.குணரஞ்சிதன்
தலைவர்
சிட்னி தமிழ் அறிவகம்

No comments: