படத்துக்கு படம் சிவாஜி நடித்தாலே போதும் படத்தின் வெற்றி
ஊர்ஜிதமாகும் என்ற நம்பிக்கையில் படங்களை இயக்கிக் கொண்டிருந்த பீம்சிங் அதே பார்முலாவை பின்பற்றி இயக்கிய படம்தான் சாந்தி. அறுபதாண்டுகளுக்கு முன்னர் 1965ம் வருடம் வெளிவந்த இந்தப் படத்தின் கதை விசித்திரமானது, முடிவு அநர்த்தமானது!
பராசக்தி படத்தின் மூலம் திரையுலகிற்கு அறிமுகமான சிவாஜியும், எஸ் எஸ் ஆரும் அப் படத்தைத் தொடர்ந்து பல படங்களில் சேர்ந்து நடித்து வந்தார்கள். அந்த வரிசையில் அவர்கள் சேர்ந்து நடித்த மற்றுமொரு படம் இந்த சாந்தி. சிவாஜியின் இரண்டு மகள்களில் ஒருவரின் பேர் சாந்தி . அவரின் பேரிலேயே இந்தப் படமும் தயாரானது.
சந்தானம், ராமு இருவரும் கல்லூரித் தோழர்கள். சந்தானத்தின் தாய்
அவனை பெண் பார்க்க மதுரைக்கு அழைத்துப் போகிறாள். செல்வச் செழிப்பில் வாழும் சாந்தியை அவர்கள் சென்று பார்த்த போது தான் அவள் பார்வையற்றவள் என்பது தெரிய வருகிறது. அதே சமயம் அவளின் தோழி மல்லிகா மீது சந்தானத்துக்கு நாட்டம் உண்டாகிறது. இதனிடையே சாந்தியைப் பற்றி கேள்விப்படும் ராமுவின் மாமா பரமசிவம் பிள்ளை அவளின் சொத்துக்கு ஆசைப் பட்டு , அவள் பார்வையற்றவள் என்பதை மறைத்து அவளை தன் தம்பி மகன் ராமுவுக்கு கட்டி வைத்து விடுகிறார். சாந்தியின் நிலையறிந்து அதிர்ச்சியடையும் ராமு திருமணத்தறே அவளை விட்டு நீங்கி போய் விடுகிறான். அவனைத் தேடித் செல்லும் சந்தானம் அவனை சமாதானம் செய்து சாந்தியிடம் அழைத்து செல்ல முனைகிறான். இதனிடையே ஏற்படும் விபத்தில் ராமு இறந்து விட , அந்த அதிர்ச்சிகரமான செய்தியை சாந்தியிடம் சொல்லாமல் அவளின் கண் பார்வை ஆப்ரேஷன் முடியும் வரை அவளின் கணவன் ராமுவாக நடிக்கும் படி பரமசிவம் சந்தானத்தை வற்புறுத்துகிறார் . சந்தானமும் வேறு வழியின்றி உடன் படுகிறான். சாந்திக்கு கண் பார்வை கிடைக்கிறது. அதே சமயம் இறந்து விட்டதாக நம்பப் படும் ராமுவும் உயிரோடு திரும்புகிறான். அப்படி என்றால் அவனும் சாந்தியும் சேர வேண்டியது தானே ! அதுதான் இல்லை, அதன் பின் இயக்குனர் வேறு விதமாக படத்தை நகர்த்துகிறார்.

சிவாஜி, எஸ் எஸ் ஆர் இருவரும் சிரமமின்றி தங்களின் ரோலை செய்திருந்தார்கள். சிவாஜியின் முகபாவம், நடை, வசன உச்சரிப்பு எல்லாம் தெரிந்த விஷயம்தானே! ஆனால் ஒரு கட்சியில் மோனோ ஆக்டிங் மூலம் , தனி ஆளாக நடித்து அசத்துகிறார் மனுஷன். எஸ் எஸ் ஆரின் வசன உச்சரிப்பு அவர் நடிப்புக்கு துணை புரிகிறது. சாந்தியாக வரும் விஜயகுமாரி படம் முழுவதும் சோகமே உருவாய் காட்சியளிக்கிறார். தேவிகா இருப்பது ஆறுதலை தருகிறது. சிவாஜியின் அம்மாவாக வருபவர் சந்தியா. இவர்களுடன் எஸ் வி சகஸ்ரநாமம், சீதாலஷ்மி, நம்பிராஜன், தாம்பரம் லலிதா, கரிக்கோல் ராஜு ஆகியோரும் நடித்திருந்தனர்.
சோகப் படமான சாந்தியைப் பார்க்கும் ரசிகர்களுக்கு சாந்தியை
தருபவர்கள் எம் ஆர் ராதா, நாகேஷ், மனோரமா தான். இவர்கள் முவரும் இல்லாவிட்டால் ரசிகர்கள் பாடு கஷ்டம்தான். ராதாவும், நாகேஷும் பேசும் ஒவ்வொரு வசனமும் கருத்தோடு சிரிப்பையும் சேர்த்து தருகிறது.

படத்தின் பாடல்களை கண்ணதாசன் இயற்ற , விஸ்வநாதன் ராமமூர்த்தி ஜோடி இசையமைத்தனர். செந்தூர் முருகன் கோயிலே ஒரு சேதியை நான் கேட்டேன், நெஞ்சத்திலே நீ நேற்று வந்தாய்,யார் அந்த நிலவு, ஊர் எங்கும் மாவிலைத் தோரணம் பாடல்கள் ரசிகர்களின் நெஞ்சத்தில் அப்படியே குடியேறின. டி எம் எஸ் , ஸ்ரீனிவாஸ், சுசிலா குரல்கள் அதற்கு துணை நின்றன.
படத்தின் கேமராமேன் ஜி . விட்டல்ராவ். படத்தை தயாரித்தவர் ஏ . எல் .சீனிவாசன். சிவாஜி நடித்த செந்தாமரை படத்தை 1955ம் ஆண்டளவில் தயாரிக்கத் தொடங்கிய இவர் ஏழாண்டுகள் கழித்து 1962ம் வருடம் தான் படத்தை திரைக்கு கொண்டு வந்தார். படம் வெற்றி பெறவில்லை. அதன் பின் 1965ல் இந்தப் படத்தை தயாரித்தார். இந்தப் படம் அவர் கையை கடிக்கவில்லை.
ஆனாலும் பார்வையற்ற ஒரு பெண்ணுக்கு மீண்டும் பார்வை கிடைத்து , அவளை விட்டுப் போன கணவனும் உயிர் பிழைத்து திரும்பிய பின் அவர்களை வாழவிடாமல் படத்தை முடித்தது பிற்போக்குத் தனமாகவும், அபத்தமாகவும் அமைந்திருந்தது. இயக்குனர் பீம்சிங் வலிந்து இந்த முடிவை திணித்தாரோ என்னவோ! ஆனாலும் ஏழாண்டுகள் கழித்து வெளிவந்த வீட்டுக்கு வீடு படத்தில் சந்தர்ப்ப சூழலில் கதாநாயகன் மாற்றான் மனைவிக்கு கணவனாக நடிப்பதாக அமைந்த கதை சுப முடிவை கண்டு ரசிகர்களின் ஆதரவை பெற்றுக் கொண்டது!
செந்தாமரை படம் தொடங்கி சிவாஜி நடித்து பீம்சிங் டைரக்ட் செய்த
எல்லா படங்களுக்கும் விஸ்வநாதன் , ராமமூர்த்தி இருவருமே தொடர்ந்து இசையமைத்து அப் படங்களின் பாடல்கள் மாபெரும் வரவேற்பை ரசிகர்களிடையே பெற்று வந்ததன . சாந்தி படத்துடன் அதற்கும் ஒரு முடிவுக்கு வந்தது. விஸ்வநாதன், ராமமூர்த்தி இடையில் ஏற்பட்ட பிரிவைத் தொடர்ந்து பீம்சிங் தான் அடுத்து இயக்கிய பாலாடை படத்துக்கு விஸ்வநாதனை தவிர்த்து கே வி மகாதேவனை இசையமைக்க வைத்திருந்தார். ஆனால் அந்தப் படம் எடுப்படவில்லை. அதன் பின் சில ஆண்டுகள் கழித்து சிவாஜி நடிப்பில் பாதுகாப்பு படத்தை இயக்கிய பீம்சிங் அப் படத்துக்கு விஸ்வநாதனை இசையமைக்க வைத்தார். ஆனால் அப் படமும் வெற்றி பெறவில்லை. ஆக ஏ . எல் . சீனிவாசன் தயாரித்த செந்தாமரையில் உருவான கூட்டு அவர் தயாரித்த சாந்தியுடன் சாந்தியடைந்தது!

No comments:
Post a Comment