உலகச் செய்திகள்

 'உங்களால் உதவமுடியுமா? நாங்கள் காசாவிற்குள் மரணித்துக்கொண்டிருக்கின்றோம்" பிபிசி செய்தியாளருக்கு வந்த வட்ஸ் அப் தகவல்

கனடா வெளியுறவு அமைச்சரான தமிழக பெண் ; பகவத் கீதையில் பதவி பிரமாணம்..யார் இந்த அனிதா ஆனந்த்?

இஸ்ரேலுடன் சிரியா சுமூகமான உறவுகளை ஏற்படுத்தவேண்டும் - சிரிய ஜனாதிபதியிடம் டிரம்ப் வேண்டுகோள்

அமெரிக்கா - சவூதி அரேபியா இடையில் 142 பில்லியன் டொலர் ஆயுத ஒப்பந்தம் கைச்சாத்து

கனடாவின் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சராக ஹரி ஆனந்தசங்கரி 


 'உங்களால் உதவமுடியுமா? நாங்கள் காசாவிற்குள் மரணித்துக்கொண்டிருக்கின்றோம்" பிபிசி செய்தியாளருக்கு வந்த வட்ஸ் அப் தகவல்

Published By: Rajeeban

15 May, 2025 | 01:43 PM

உங்களால் உதவமுடியுமா நாங்கள் காசாவிற்குள் மரணித்துக்கொண்டிருக்கின்றோம் என்ற வட்ஸ்அப் செய்தியொன்று கடந்த வாரம் தனக்கு அனுப்பப்பட்டதாக பிபிசியின்செய்தியாளர் அலைஸ் ஹடி தெரிவித்துள்ளார்

அவர் இது குறித்து மேலும் தெரிவித்துள்ளதாவது.

'உங்களால் எனக்கு உதவமுடியுமா?நாங்கள் காசாவில் வசிக்கின்றோம் உள்ளே மரணித்துக்கொண்டிருக்கின்றோம்நானும்  எனது பிள்ளைகளும் ஏனைய சிறுவர்களும் மிக மோசமான மனிதாபிமான நிலையில் இருக்கின்றோம்"

இதுவே அய்மன் என்ற நபரிடமிருந்து கடந்த வாரம் எனக்கு கிடைத்த வட்ஸ் அப் செய்தி.அவர் காசாவின் தென்பகுதியில் உள்ள ஹான் யூனிசில் வசிக்கின்றார்.

இஸ்ரேலின் முற்றுகைதொடர்கின்ற நிலையில் குடும்பத்தின் நிலைமையில் முன்னேற்றம் ஏற்படவில்லை.

காசாவிற்குள் செல்வதற்கு சர்வதேச செய்தியாளர்களிற்கு அனுமதியில்லை இதன் காரணமாக ஆகவே காசாவில் சிக்குண்டுள்ள மக்களுடன் கையடக்க தொலைபேசி வட்ஸ் அப் மூலமாக மாத்திரம் என்னால் தொடர்புகொள்ள முடியும்.

தொடர்ந்து அனுப்பிய வட்ஸ் அப் செய்தியில் அய்மன் யதார்த்தம் என்பது விளக்கங்களிற்கு அப்பாற்பட்டது என குறிப்பிட்டார்.

நான் சொல்வதை நம்புங்கள் நாங்கள் அனுபவிக்கும் பசியின் கொடுமையால் என்னால் நகரகூட முடியாதுள்ளதுகடவுள் அருள் புரிந்தால் ஒரு வீடியோவை தயாரித்து நான் உங்களிற்கு அனுப்புவேன் என அவர் தெரிவித்தார்.

காசாவில் மக்கள் இணையசேவைக்ககான மி;ன்சாரத்தை பெறுவதற்கு மிகுந்த சிரமப்படுவதால் வட்ஸ் அப் மூலம் தொடர்புகொள்வதும் கடினமான விடயம்.   நன்றி வீரகேசரி 




கனடா வெளியுறவு அமைச்சரான தமிழக பெண் ; பகவத் கீதையில் பதவி பிரமாணம்..யார் இந்த அனிதா ஆனந்த்?

14 May, 2025 | 12:43 PM

ஒட்டாவா:கனடா நாடாளுமன்ற தேர்தல் சமீபத்தில் நடந்து முடிந்தது. இதில் முன்னாள் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவின் கட்சி மீண்டும் வெற்றி பெற்றது. புதிய பிரதமராக மார்க் கார்னி வெற்றி பெற்றார். அவரது அமைச்சரவையில் வெளியுறவுத்துறை அமைச்சராக பதவியேற்று கொண்ட தமிழ் வம்சாவளி பெண்ணான அனிதா ஆனந்த் பகவத் கீதையை வைத்து பதவி பிரமாணம் எடுத்து கொண்டார்.

 இந்த அனிதா ஆனந்த் யார்? பின்னணி என்ன? . கனடா பிரதமராக ஜஸ்டின் ட்ரூடோ இருந்தார். அரசியல் நெருக்கடியால் அவர் தனது பிரதமர் பதவியை ராஜினாமா செய்தார். இதையடுத்து இடைக்கால பிரதமராக மார்க் கார்னி செயல்பட்டார். அதன்பிறகு அவரே லிபரல் கட்சி சார்பில் பிரதமர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டார். இதையடுத்து கடந்த மாதம் இறுதியில் கனடாவில் நாடாளுமன்ற தேர்தல் நடந்தது. இதில் லிபரல் கட்சி அமோக வெற்றி பெற்றது. இதையடுத்து மீண்டும் மார்க் கார்னி பிரதமராக பொறுப்பேற்றார். 

இந்நிலையில் தான் புதிய அமைச்சரவை அமைக்கப்பட்டது. மொத்தம் 28 அமைச்சர்கள்இ 10 மத்திய இணை அமைச்சர்கள் என்று மொத்தம் 38 பேர் இடம் பெற்றனர். இதில் 24 பேர் புது முகங்களாகும். இந்த அமைச்சரவையில் தமிழக வம்சாவளியை சேர்ந்த ஆனந்த் இடம்பெற்றுள்ளார். அவருக்கு வெளியுறவுத்துறை ஒதுக்கீடு செய்யப்பட்டது. இதையடுத்து அனிதா ஆனந்த் பகவத்கீதையை வைத்து அமைச்சராக பதவி பிரமாணம் செய்து கொண்டார்.

. பகவத் கீதையை வைத்து அனிதா ஆனந்த் பதவியேற்ற வீடியோவை அவர் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில் ‛ கனடாவின் புதிய வெளிவிவகார அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளமை குறித்து பெருமிதம் கொள்கிள்றேன்இபாதுகாப்பான நியாயமான உலகத்தை கட்டியெழுப்பவும்இகனேடிய மக்களிற்கு வழங்கவும் பிரதமர் மார்க் கார்னி மற்றும் எங்கள் குழுவினருடன் இணைந்து பணியாற்ற எதிர்பார்த்துள்ளேன் என அவர் சமூக ஊடக பதிவில் தெரிவித்துள்ளார்.

தற்போது கனடா வெளியுறவுத்துறை அமைச்சராக பொறுப்பேற்றுள்ள அனிதா ஆனந்த் பெற்றோர் இந்தியாவை பூர்வீகமாக கொண்டவர்கள். தந்தை  தமிழகத்தை சேர்ந்தவர்.மருத்துவர்.. தாய் பெயர் சரோஜ். இவர் பஞ்சாப்பை சேர்ந்தவர். இவரும்மருத்துவர் டாக்டர்  

அனிதா ஆனந்த் கனடாவிலேயே பிறந்து வளர்ந்தவர். இப்போது 58 வயது ஆகிறது. 4 பட்டப்படிப்புகளை முடித்துள்ளார். குயின்ஸ் பல்கலைக்கழகத்தில் இளநிலை பிரிவில் Arts in Political Studies என்பதை படித்து முடித்தார். அதில் தங்கப்பதக்கம் வாங்கினார். அதன்பிறகு ஒக்ஸ்போர்ட்ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் இளநிலை பிரிவில்Jurisprudenceபடிப்பையும் தல்ஹசி பல்கலைக்கழகத்தில் சட்டப்படிப்பையும் டொரண்டோ பல்கலைகழகத்தில் சட்ட மேற்படிப்பையும் முடித்தார்.  

அனிதா ஆனந்த் அடிப்படையில் வழக்கறிஞர் ஆவார் . இவர் கடந்த 2015ம் ஆண்டில் பொது வாழ்க்கைக்குள் நுழைந்தார். அவர் ஒன்டாரியோ அரசின் நிபுணர் குழுவில் இடம்பிடித்தார். அதன்பிறகு கடந்த 2019ம் ஆண்டில் ஒக்வில்லி நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். அதன்பிறகு கொரோனா பரவல் சமயத்தில் பொதுசேவை மற்றும் கொள்முதல் பிரிவின் அமைச்சராக செயல்பட்டார். அனிதா ஆனந்துக்கு திருமணமாகி விட்டது. கணவர் பெயர் ஜான் நோல்டன். இவரும் கனடாவில் வழக்கறிஞராகவும் வருகிறார்.   நன்றி வீரகேசரி 





இஸ்ரேலுடன் சிரியா சுமூகமான உறவுகளை ஏற்படுத்தவேண்டும் - சிரிய ஜனாதிபதியிடம் டிரம்ப் வேண்டுகோள்

14 May, 2025 | 04:22 PM

சிரியாவுடன் இஸ்ரேலுடன் சுமூகமான உறவுகளை  ஏற்படுத்தவேண்டும் என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

சிரிய ஜனாதிபதி அஹமட் அல் சராவை சந்தித்தவேளை டிரம்ப் இந்த வேண்டுகோளை விடுத்துள்ளார்.

சவுதி அரேபியாவில் இடம்பெற்ற இந்த சந்திப்பின் போது சிரிய ஜனாதிபதி தனது நாட்டிலிருந்து பயங்கரவாதிகள் அனைவரும் வெளியேறவேண்டும் என உத்தரவிடவேண்டும் என டிரம்ப் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

சிரியா மீதான தடைகளை அமெரிக்கா நீக்கியுள்ள நிலையிலேயே இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளது.   நன்றி வீரகேசரி 





அமெரிக்கா - சவூதி அரேபியா இடையில் 142 பில்லியன் டொலர் ஆயுத ஒப்பந்தம் கைச்சாத்து

Published By: Digital Desk 3

14 May, 2025 | 11:38 AM

அமெரிக்காவில் இருந்து 142 பில்லியன் டொலர்கள் மதிப்பிலான இராணுவ ஆயுதங்களை சவுதி அரேபியா கொள்முதல் செய்யும் ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டுள்ளது. 

இந்த முதலீடு மற்றும் வர்த்தக ஒப்பந்தம் இருநாடுகள் இடையே உறவை மேலும் வலுப்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் 4 நாட்கள் உத்தியோகபூர்வ விஜயமாக செவ்வாய்க்கிழமை (13) மத்திய கிழக்கு நாடுகளுக்கு சென்றுள்ளார். 

ஜனாதிபதியாக இரண்டாவது முறையாக பதவியேற்றப்பின் ட்ரம்ப் மேற்கொள்ளும் முதல் மத்திய கிழக்குக்கு பயணம் இதுவாகும்.

இந்த விஜயத்தில் டொனால்ட் ட்ரம்ப்புடன் இலான் மஸ்க், ஓபன்ஏஐ தலைமை நிர்வாக அதிகாரி சாம் ஆல்ட்மேன், பிளாக்ராக் தலைமை நிர்வாக அதிகாரி லாரி ஃபிங்க் மற்றும் என்விடியா தலைமை நிர்வாக அதிகாரி ஜென்சன் ஹுவாங் உள்ளிட்ட பல வணிகத் தலைவர்கள் கலந்துகொண்டுள்ளனர்.

இந்நிலையில், சவுதி அரேபியாவின் தலைநகர் ரியாத்தில் பேசிய அமெரிக்க ஜனாதிபதி,  

அமெரிக்காவுக்கு சவுதி அரேபியாவை விட "உறுதியான நட்புறவு கொண்டோர்கள் வேறு யாரும் இல்லை".  சிரியாவுக்கு எதிரான அனைத்து தடைகளும் நீக்கப்படும்,  தற்போது நாடு "சிறந்த வாய்ப்புடன்" முன்னேற வேண்டிய நேரம் இது எனக் குறிப்பிட்டுள்ளார்.

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்  கத்தார் மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் ஆகிய நாடுகளுக்கும் விஜயம் மேற்கொள்ளவுள்ளார்.

எண்ணெய் வளம் மிக்க பொருளாதாரத்தை அதன் செயற்கை நுண்ணறிவு திறன்களை அதிகரிப்பதன் மூலம் பன்முகப்படுத்த ஆர்வமுள்ள சவுதி அரேபியாவை உயர்மட்ட நிர்வாகிகள் சந்திக்கின்றனர்.

ஹுவாங் இந்த விஜயத்தின் போது Nvidia தனது 18,000க்கும் மேற்பட்ட சமீபத்திய AI சிப்களை சவுதி நிறுவனமான Humain-க்கு விற்பனை செய்யும் என்று அறிவித்தார்.   நன்றி வீரகேசரி 





கனடாவின் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சராக ஹரி ஆனந்தசங்கரி 

Published By: Priyatharshan

13 May, 2025 | 10:47 PM

கனடாவின் புதிய அமைச்சரவையின் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சராக ஹரி ஆனந்தசங்கரி (Gary Anandasangaree) பதவி பிரமாணம் செய்துக்கொண்டுள்ளார்.

அண்மையில் கனடாவில் இடம்பெற்ற பொதுத் தேர்தலில் மார்க் கார்னி தலைமையிலான தரப்பு வெற்றிபெற்ற நிலையில் புதிய அமைச்சரவை நியமனங்கள் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

கார்னி 28 அமைச்சர்களை அமைச்சரவை பதவிகளுக்கும், மேலும் 10 பேரை வெளியுறவுச் செயலாளர்களாகவும் நியமித்துள்ளார்.

பொதுபாதுகாப்பு அமைச்சராக நியமிக்கப்பட்ட ஹரி ஆனந்தசங்கரி முன்னதாக பல அமைச்சரவை அமைச்சுபதவிகளை வகுத்துள்ளார்.

இலங்கைத் தமிழரான ஹரி ஆனந்தசங்கரி கடந்த 2015 ஒக்டோபர் 19 இல் நடைபெற்ற கனேடிய பொதுத் தேர்தலில் லிபரல் கட்சியின் சார்பில் இசுக்கார்பரோ-ரூச் பார்க் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்று முதற்தடவையாக பாராளுமன்றம் சென்றார்.

முன்னதாக சுதேச உறவுகளுக்கான அமைச்சராகவும் 2025 மார்ச் 14 முதல் நீதி அமைச்சராகவும், கனடிய சட்டமா அதிபராகவும் பணியாற்றி வருகிறார்.

கனடாவில் தமிழ் இளைஞர்கள் மத்தியில் ஏற்படும் வன்முறைகளை தீர்த்து வைக்கும் வகையில், கனடாவில் இளைஞர்கள்சேவை நிலையமொன்றை அவர் ஆரம்பித்துள்ளார்.

மேலும், கனேடிய தமிழ்க் காங்கிரஸ் அமைப்பின் வளர்ச்சிக்காகவும் அவர் முன்னின்று செயற்பட்டுள்ளார்.

கனடாவின் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சராக சத்தியப்பிரமாணம் செய்து கொண்டபின்னர் ஊடகங்களுக்கு ஹரி ஆனந்தசங்கரி தெரிவிக்கையில்,

கனடாவின் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சராக நியமிக்கப்பட்டதை நான் பெருமையுடனும் பணிவுடனும் ஏற்றுக்கொள்கின்றேன்.

டேவிட் மப்பின்டியின் சிறந்த பணியை அடித்தளமாகக் கொண்டு மேலும் கட்டியெழுப்ப ஆர்வமாகவுள்ள அதேவேளை, எமது சமூகங்களைப் பாதுகாப்பாக வைத்திருப்பதற்கும், வெறுப்புணர்வுக் குற்றங்களுக்கு எதிராகப் போராடுவதற்கும், கனேடியர்களை நாளாந்தம் பாதுகாப்பும் முகாமை அமைப்புக்களை பலப்படுத்தவும் நான் உறுதிபூண்டுள்ளேன்.

முடியரசு - பழங்குடிகள் உறவு மற்றும் நீதி அமைச்சுக்களில் ஏற்பட்ட அர்த்தமுள்ள முன்னேற்றம் குறித்து நான் உண்மையான பெருமிதங்கொண்டுள்ளேன்.

பழங்குடிப் பங்காளிகளுடன் இணைந்து செயற்பட்டு, பலமானதும் மதிக்கப்படுவதுமான உறவுகளைக் கட்டியெழுப்பி, மீளிணக்கத்தை முன்னகர்த்தி, மேம்பட்ட எதிர்காலத்திற்கான அடித்தளத்தை நாம் கட்டியெழுப்பியுள்ளோம்.

இந்தப் புதிய பணியை நான் பொறுப்பேற்கும் இந்த வேளையில், பிரதம மந்திரி மார்க் கார்ணி என்னில் கொண்டுள்ள நம்பிக்கைக்கு நான் நன்றியுடையவனாக இருக்கின்றேன்.

கனடாவை ஒன்றுபடுத்துவதற்கும், பாதுகாப்பைக் கட்டுறுதிப்படுத்துவதற்கும், பாதுகாப்பதற்கும், கட்டியெழுப்பவும் எனது அமைச்சரவைச் சகாக்களுடனும் அனைத்து மட்ட அரசுகளுடனும் இணைந்து பணியாற்ற நான் தயாராகவிருக்கின்றேன் எனத் தெரிவித்துள்ளார்.

நன்றி வீரகேசரி 

No comments: