சிட்னி ஸ்ரீ துர்க்காதேவி தேவஸ்தான சமய அறிவுத் திறன் போட்டியும், திருமுறை ஒப்புவித்தல் போட்டியும் - 25/05/2025


சிட்னி ஸ்ரீ துர்க்காதேவி தேவஸ்தானம் பெருமையுடன் நடாத்தும் வருடாந்த சமய அறிவுத் திறன்
போட்டிககளும்,  திருமுறை ஒப்புவித்தல் போட்டிகளும்   மே மாதம் 25ம் திகதி ஞாயிற்றுக்கிழமை சிட்னி துர்க்கை அம்மன் கோவிலில் முற்பகல் 11 மணியிலிருந்து நடைபெறவுள்ளது.

வர்ணம் தீட்டுதல் (பாலர் ஆரம்ப பிரிவுக்கும் பாலர் பிரிவுக்கும் மட்டும்), சமய அறிவுப் போட்டி, திருமுறை ஒப்புவித்தல் போட்டி என மூன்று போட்டிகள் நடைபெறும். (அறிவுப்போட்டிக்கான மாதிரி வினாக்களும் வழங்கப்படும்)

இப்போட்டிகளில் பங்குபற்றுபவர்களுக்கு பரிசில்கள் முதற் பிரிவு, இரண்டாம் பிரிவு, மூன்றாம் பிரிவென மூன்று வகையாக வழங்கப்படவுள்ளது. ஓவ்வொரு பிரிவிலும் ஓன்றுக்கு மேற்பட்ட திறமையானவர்களுக்கு பரிசில்கள் கிடைக்கவேண்டும் என்பதற்காக இப்படி வகுக்கப்பட்டடுள்ளது.


போட்டி நடாத்தப்படும் பிரிவுகளும்  போட்டிகளும்

பிரிவுகள்

பிறந்த திகதி விபரம்

போட்டிகள்

பாலர் ஆரம்ப பிரிவு

01.08.2020 இலும் அதன் பின்னரும் பிறந்தவர்கள்

சமய அறிவுப் போட்டி

வர்ணம் தீட்டும் போட்டி

பாலர் பிரிவு

01.08.2018 க்கும் 31.07.2020 க்கும் இடையில் பிறந்தவர்கள்

சமய அறிவுப் போட்டி

வர்ணம் தீட்டும் போட்டி

கீழ்ப்பிரிவு

01.08.2016 க்கும் 31.07.2018 க்கும் இடையில் பிறந்தவர்கள்

சமய அறிவுப் போட்டி

திருமுறை ஒப்புவித்தல் போட்டி

மத்தியபிரிவு

01.08.2013 க்கும் 31.07.2016 க்கும் இடையில் பிறந்தவர்கள்

சமய அறிவுப் போட்டி

திருமுறை ஒப்புவித்தல் போட்டி

மேற்பிரிவு

01.08.2010 க்கும் 31.07.2013 க்கும் இடையில் பிறந்தவர்கள்

சமய அறிவுப் போட்டி

திருமுறை ஒப்புவித்தல் போட்டி

அதிமேற்பிரிவு

01.08.2006 க்கும் 31.07.2010 க்கும் இடையில் பிறந்தவர்கள்

சமய அறிவுப் போட்டி

திருமுறை ஒப்புவித்தல் போட்டி

பங்குபற்றுவர்களின் முழுப்பெயர், பிறந்த திகதி மற்றும் பங்குபற்றும் போட்டிகள் ஆகிய விபரங்களை மின்னஞ்சல் மூலமாக மே மாதம்  24ம் திகதிக்கு முன்பாக கிடைக்கக் கூடியதாக durgacompetition@gmail.com  என்ற முகவரிக்கு அனுப்பி வைக்கப்பட வேண்டும் போட்டிக்கான விதிமுறைகள், புள்ளிகள் வழங்கும் முறை பற்றிய குறிப்புகள், சமயஅறிவுப்போட்டிகளுக்கான மாதிரி கேள்வி பதில்கள் என்பனவற்றை மின்னஞ்சல் மூலமாக பெற்றுக்கொள்ளலாம்.

********************************************************************************

திருமுறை ஒப்புவித்தல் போட்டி - கீழ்ப்பிரிவு

நான்கு திருமுறைகள் தரப்பட்டுள்ளன. இவற்றில் மூன்று திருமுறைகள் கேட்கப்படும்.      

தேவாரம் (1)

மடையில் வாளை பாய மாதரார்

குடையும் பொய்கைக் கோலக் காவுளான்

சடையும் பிறையுஞ் சாம்பற் பூச்சுங்கீழ்

உடையுங் கொண்ட வுருவ மென்கொலோ

தேவாரம் (2)

முத்தி தருவது நீறு முனிவ ரணிவது நீறு

சத்தியமாவது நீறு தக்கோர் புகழ்வது நீறு

பத்தி தருவது நீறு பரவவினியது நீறு

சித்தி தருவது நீறு திருவால வாயான் திருநீறே

தேவாரம் (3)

காதாலா கிக் கசிந்து கண்ணீர் மல்கி

ஓதுவார்தமை நன்னெறிக் குய்ப்பது

வேதம் நான்கினும் மெய்ப் பொருளாவது

நாதன் நாமம் நமச்சிவாயவே

திருவாசகம் (4)

வானாகி மண்ணாகி வளியாகி ஒளியாகி

ஊனாகி உயிராகி உண்மையுமாய் இன்மையுமாய்க்

கோனாகி யான்எனதென் றவரவரைக் கூத்தாட்டு

வானாகி நின்றாயை என் சொல்லி வாழ்த்துவனே

********************************************************************************

திருமுறை ஒப்புவித்தல் போட்டி - மத்தியபிரிவு

ஐந்து திருமுறைகள் தரப்பட்டுள்ளன. இவற்றுள் நான்கு திருமுறைகள் கேட்கப்படும்

1.    தேவாரம்

     நத்தார் படை ஞானன்பசு வேறிந்நனை கவுள்வாய்

மத்தம்மத யானையுரி போர்த்த மணவாளன்

பத்தாகிய தொண்டர் தொழு பாலாயின் கரைமேல்

செத்தாரெலும் பணிவான் திருக்கேதீச்சரத் தானே

2.    தேவாரம்

பூவார்மலர்கெண் டடியார் தொழுவார் புகழ்வார் வானோர்கள்

மூவார் புரங்கள் எரித்தவன்று மூவர்க்கருள் செய்தார்

தூமாமழைநின் றதிரவெருவித் தொறுவின் னிரையோடும்

ஆமாம்பிணைவந் தணையுஞ்சாரல் அண்ணாமலையாரே

3.    திருவாசகம்

வானாகி மண்ணாகி வளியாகி ஒளியாகி

ஊனாகி உயிராகி உண்மையுமாய் இன்மையுமாய்க்

கோனாகி யான்என தென் றவரவரைக் கூத்தாட்டு

வானாகி நின்றாயை என்சொல்லி வாழ்த்துவனே 

4.    புராணம்

ஆதியாய் நடுவுமாகி அளவிலா அளவும் ஆகிச்

சோதியா யுணர்வுமாகித் தோன்றிய  பொருளுமாகிப்

பேதியா ஏக மாகிப் பெண்ணுமாய் ஆணுமாகிப்

போதியாநிற்குந் தில்லைப் பொதுநடம் போற்றி போற்றி

5     திருப்புகழ்

துள்ளுமத வேள் கைக் கணையாலே

தொல்லைநெடு நீலக் கடலாலே

மெள்ளவரு சோலைக் குயிலாலே

மெய்யுருகு மானைத் தழுவாயே

தெள்ளுதமிழ் பாடத் தெளிவோனே

செய்யகும ரேச திறலோனே

வள்ளல்தொழு ஞானக் கழலோனே

வள்ளிமண வாளப் பெருமாளே.

********************************************************************************

திருமுறை ஒப்புவித்தல் போட்டி - மேற்பிரிவு 

ஆறு திருமுறைகள் தரப்பட்டுள்ளன. இவற்றில் ஐந்து திருமுறைகள் கேட்கப்படும்  

 

1 தேவாரம் 

மாதர்ப் பிறைக்கண்ணி யானை

மலையான் மகளொடும் பாடிப்

போதொடு நீர் சுமந்தேத்திப்

புகுவாரவர் பின் புகுவேன்

யாதுஞ் சுவடு படாமல்

ஐயாறடை கின்ற போது

காதன் மடப்பிடி யோடுங்

களிறு வருவன கண்டேன்

கண்டேனவர் திருப்பாதங்

கண்டறியாதன கண்டேன்


2 தேவாரம் 

நீள நினைந்தடியேன் உனை நித்தலுங் கைதொழுவேன்

வாளன கண்மடவா ளவள் வாடி வருந்தாமே

கோளிலி எம்பெருமான் குண்டையூர்ச் சில நெல்லுப் பெற்றேன்

ஆளிலை எம்பெருமான் அவை அட்டித் தரப்பணியே

  

3 திருவாசகம் 

கடையவ னேனைக் கருணையி னாற் கலந் தாண்டு கொண்ட

விடையவளே விட்டிடுதிகண் டாய்விறல் வேங்கையின் தோல்

உடையவனே மன்னும் உத்தரகோச மங்கைக் கரசே

சடையவனே தளர்ந்தேன் எம்பிரான் என்னைத் தாங்கிக் கொள்ளே

 

4 திருவிசைப்பா 

நீறணி பவளக் குன்றமே நின்ற

நெற்றிக்கண் உடையதோர் நெருப்பே

வேறணி புவன போகமே யோக

வெள்ளமே மேருவில் வீரா

ஆறணி சடைஎம் அற்புதக் கூத்தா

அம்பொன் செய் அம்பலத்தரசே

ஏறணி கொடி எம் ஈசனே உன்னைத்

தொண்டனேன் இசையுமாறு இசையே.

 

5   திருப்பல்லாண்டு

மன்னுகதில்லை வளர்கநம் பக்தர்கள்

வஞ்சகர் போயகலப்

பொன்னின் செய் மண்டத்துள்ளே புகுந்து

புவனியெல் லாம்விளங்க

அன்னைநடை மடவாள் உமை கோன் அடி

யோமுக் கருள் புரிந்து

பின்னைப் பிறவி யறுக்க நெறிதந்தபித்தற்குப்

பல்லாண்டு கூறுதுமே

 

6  திருப்புகழ்

சந்ததம் பந்தத் தொடராலே

சஞ்சலம் துஞ்சித் திரியாதே

கந்தனென் றெற்றுற் றுனை நாளும்

கண்டு கொண்டன் புற் றிடுவேனோ

தந்தியின் கொம்பைப் புணர்வோனே

சங்கரன் பங்கிற் சிவை பாலா

செந்திலங் கண்டிக் கதிர்வேலா

தென்பரங் குன்றிற் பெருமானே

 

********************************************************************************

திருமுறை ஒப்புவித்தல் போட்டி - அதிமேற்பிரிவு

 

ஆறு திருமுறைகள் தரப்பட்டுள்ளன. இவற்றில் ஐந்து திருமுறைகள் கேட்கப்படும்

 

1 தேவாரம்

பொன்னார் மேனியனே புலித்தோலை அரைக்கசைத்து

மின்னார் செஞ்சடைமேல் மிளிர்கொன்றை யணிந்தவனே

மன்னே மாமணியே மழ பாடியுள் மாணிக்கமே

அன்னே உன்னையல்லால் இனி யாரை நினைக்கேனே

 

2 திருவாசகம்

அன்றே என்றன் ஆவியும்

    உடலும் உடைமை எல்லாமும்

குன்றே அனையாய் என்னைஆட்

    கொண்ட போதே கொண்டிலையோ

இன்றோர் இடையூறெனக்குண்டோ

    எண்தோள் முக்கண் எம்மானே

நன்றே செய்வாய் பிழை செய்வாய்

    நானோ இதற்கு நாயகமே

 

3 திருவிசைப்பா

கற்றவர் விழுங்கும் கற்பகக் கனியைக்

    கரையிலாக் கருணைமா கடலை

மற்றவர் அறியா மாணிக்க மலையை

    மதிப்பவர் மனமணி விளக்கைச்

செற்றவர் புரங்கள் செற்ற எம் சிவனைத்

    திருவீழி மிழலை வீற்றிருந்த

கொற்றவன் றன்னைக் கண்டுகண்டுள்ளம்

    குளிர என் கண் குளிர்ந் தனவே.

 

 

 

 

4 திருப்பல்லாண்டு

மன்னுக தில்லை வளர்கநம் பக்தர்கள்

    வஞ்சகர் போயகலப்

பொன்னின் செய் மண்டபத்துள்ளே புகுந்து

    புவனியெல் லாம் விளங்க

அன்னநடைமடவாள் உமைகோன் அடி

    மோமுக் கருள் புரிந்து

பின்னைப் பிறவி யறுக்க நெறிதந்த பித்தற்குப்

    பல்லாண்டு கூறுதுமே.

 

5 புராணம்

தெண்ணிலா மலர்ந்த வேணியாய் உன்றன்

    திருநடங் கும்பிடப் பெற்று

மண்ணிலே வந்த பிறவியே யெனக்கு

    வாலிதாம் இன்பமாம் என்று

கண்ணிலா னந்த அருவிநீர் சொரியக்

    கைம்மல ருச்சி மேற்குவித்து

பண்ணிலால் நீடி அறிவரும் பதிகம்

    பாடினார் பரவினார் பணிந்தார்

 

6 திருப்புகழ்

துள்ளுமத வேள்கைக் கணையாலே

    தொல்லை நெடு நீலக் கடலாலே

மெள்ளவரு  சோலைக் குயிலாலே

    மெய்யுருகு மானைத் தழுவாயே

தெள்ளுதமிழ் பாடத் தெளிவோனே

    செய்யகும ரேசத் திறலோனே

வள்ளல்தொழு ஞானக் கழலோனே

    வள்ளிமண வாளப் பெருமானே

********************************************************************************

No comments: