புதிதாக படத்தை இயக்கினார்
படம் ஓடவில்லை கவலையில்லை
ஆனாலும் இயக்குநர் என்பார்களே
வரைந்தது புரியவில்லை
சில கோடுகளை கிறுக்கினேன்
மாடர்ன்ஆரட்ஸ் என்றார்கள்
உண்மை சொல்வேன் நான்
பொய் சொல்லவே தெரியாது
சிறுவர்கள் நம் சொத்தல்லவா
நான் சொல்வதில் தவறில்லையே
அரசு ஏன் தறுதலையாக்குது?
காவல் நிலையம் இருக்கிறது
காவலரும் பணியில் துடிப்பாயிருப்பர்
பூவையரோ சூறையாடப்படுவர்
உயிருக்கு விலையில்லை
உயிரைக் காக்கவேண்டிய அரசோ
மயிரென நினைக்கிறதே
போதைப்பழக்கம் வேரூன்றுகிறது
ஒழிக்காமல் அரசு வழியமைக்கிறது
வேலியே பயிரை மேய்கிறதோ?
No comments:
Post a Comment