மற்றவர் இகழ்ந்திட வாழாதே! – அன்பு ஜெயா

பா வகை: வஞ்சி மண்டிலம்.

 

நன்றே செய்துநீ நானிலம்

என்றும் போற்றிட வாழ்ந்திடு!

நன்றும், நலிந்தவர் நலம்பெற

இன்றே செய்திடல் ஏற்றமே!    (1)

 

கல்விப் பணிதனைக் கள்ளமாய்

செல்வம் கொழித்திடச் செய்வதோ?!

கல்விப் பசியினைக் கலைந்திட

நல்ல வழிதனில் நடத்துவீர்!    (2)

 

கள்தான் உடல்நலம் காக்குமோ

கள்ளும் உன்னுளம் கலைத்திடும்

கள்ளாம் அரக்கனைக் காண்கையில்

உள்ளத் திலவனை ஒழித்திடு!   (3)

No comments: