நந்திக்கடலே நீ சொல்லம்மா - சித்தி கிருஷ்ணா


பதினாறு ஆண்டுகள் ஓடி மறைந்தாலும்

பதறுது நெஞ்சம் .

முள்ளிவாய்க்கால் மண்ணில் தமிழர் புகுந்தனர் தஞ்சம் .

தஞ்சம் என வந்த தமிழனின் உயிர்ப் பயணம் இங்கே முடிந்ததுவோ?

 

தாயின் கருவறை கூடப் பாதுகாப்புத் தந்ததில்லை அன்று,

உடல்கள் சிதைந்த கோரம் மறக்க முடியவில்லை இன்று.


வந்தாரை வாழ வைக்கும் எம் மண்ணில்,

சொந்தங்கள் மடிந்தது யார் செய்த பாவமோ.

ஓயாத அழுகுரல் இன்னும் கேட்கிறதே

 இது யார் செய்த சாபமோ.


உறவுகளின் ஒலங்கள் ஒலிக்குது நெஞ்சின் ஆழத்தில்.

நீதியெனும் சொல் வெறும் கானல் நீரானதோ?


எம் கண்ணீருக்கு யார் பதில் சொல்வது.

இயற்கையே இனியும் கண் திறவாயோ.

இந்தத் துயரம் இறந்த காலத்தின் சோகம் மட்டுமா?


எங்கள் அடுத்த தலைமுறைக்கும் இது கடத்தப்பட வேண்டும்.

நீதிக்கான குரல் ஓயாது எங்கள் இரத்த நாளங்களில்

சாட்சியாய் நிற்கும் நந்திக்கடலே நீ கூறு,

அந்தக் குருதி வெள்ளம் தமிழனின் இரத்தம் என்று.


ஒருபோதும் ஆறாத இந்தத் துயரின் தணல் தலைமுறை தாண்டியும் எரியும் தமிழர் மனங்களில் .😭😭😭🙏🙏



No comments: