யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் கிளிநொச்சியில் முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கிவைப்பு!
யாழில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரது அமைப்பின் ஏற்பாட்டில் முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கி வைப்பு!
வெளிநாட்டில் தொழில்புரியும் இலங்கையர்களால் 2.46 பில்லியன் டொலர்கள் அந்நிய செலாவணி
காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளை தேடி கண்ணீர் சிந்திய கண்கள் மூடிகொண்டிருக்கின்றன; சர்வதேசம் பதிலளிக்குமா? - வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் கேள்வி
தமிழர் இனப்படுகொலையின் போது இடம்பெற்ற கொடூரங்கள் மீண்டும் இடம்பெறாததை உறுதி செய்யவேண்டும் - அமெரிக்க காங்கிரஸ் உறுப்பினர் டொன் டேவிஸ்
ஆனையிறவு உப்பளத் தொழிலாளர்களின் அமைதி வழிப் போராட்டத்தை அடக்க நிர்வாகம் நடவடிக்கை - தொழிலாளர்கள் கவலை
யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் கிளிநொச்சியில் முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கிவைப்பு!
13 May, 2025 | 03:33 PM
முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் வாரத்தின் இரண்டாவது நாள் இன்று (13) பல பகுதிகளில் உணர்வுபூர்வமாக அனுஷ்டிக்கப்பட்டு வருகிறது.
அந்த வகையில் கிளிநொச்சி பஸ் தரிப்பு நிலையத்தில் யாழ்ப்பாணம் பல்கலைக்கழக மாணவர்களின் ஏற்பாட்டில் முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கப்பட்டது.


யாழில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரது அமைப்பின் ஏற்பாட்டில் முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கி வைப்பு!
Published By: Digital Desk 2
13 May, 2025 | 03:35 PM
நல்லூரடியில் அமைக்கப்பட்டுள்ள தியாக தீபம் திலீபனின் நினைவாலயத்துக்கு முன்னால் முள்ளிவாய்க்கால் கஞ்சி காய்ச்சி வழங்கப்பட்டது.
வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரது அமைப்பின் ஏற்பாட்டில் இந்த முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கல் செவ்வாய்க்கிழமை (13) முன்னெடுக்கப்பட்டது.
இதில் குரல் அற்றவர்களின் குரல் அமைப்பினர், பொது அமைப்புகளை சேர்ந்தவர்களும் இணைந்திருந்தனர்.
மக்கள் உணர்வுபூர்வமாக முள்ளிவாய்க்கால் கஞ்சியை வாங்கி அருந்திச்சென்றனர்.



வெளிநாட்டில் தொழில்புரியும் இலங்கையர்களால் 2.46 பில்லியன் டொலர்கள் அந்நிய செலாவணி
Published By: Digital Desk 3
13 May, 2025 | 03:55 PM
வெளிநாடுகளில் தொழில் புரியும் இலங்கையர்கள் ஊடாக கடந்த ஜனவரி மாதம் முதல் ஏப்ரல் மாதம் 31 ஆம் திகதி வரையான காலப்பகுதியில் இலங்கைக்கு 2.46 பில்லியன் டொலர்கள் அந்நிய செலாவணி கிடைக்கப்பெற்றுள்ளது.
2024 ஆம் ஆண்டு முதல் நான்கு மாத காலப்பகுதியுடன் ஒப்பிடுகையில் நூற்றுக்கு 18.3 சதவீத வளர்ச்சி பதிவாகியுள்ளதாக இலங்கை மத்திய வங்கி அறிவித்துள்ளது.
2024 ஆம் ஆண்டு முதல் நான்கு மாத காலப்பகுதியில் வெளிநாடுகளில் தொழில் புரியும் இலங்கையர்களினால் நாட்டுக்கு 2.07 பில்லியன் டொலர்கள் அந்நிய செலாவணி கிடைக்கப்பெற்றது.
அத்துடன் கடந்த மாதம் மாத்திரம் 646.1 மில்லியன் டொலர்கள் அந்நிய செலாவணியாக கிடைக்கப்பெற்றுள்ளதுடன், கடந்த ஆண்டு ஏப்ரல் மாதத்துடன் ஒப்பிடுகையில் பண அனுப்பல் வளர்ச்சியடைந்துள்ளது.
2023 ஆம் ஆண்டு 314,828 இலங்கையர்கள் தொழில்வாய்ப்புகளுக்காக வெளிநாடுகளுக்கு இடபெயர்ந்துள்ளார்கள். 2023 ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் இது 5.8 சதவீத வளர்ச்சியை காட்டுகிறது. நன்றி வீரகேசரி
காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளை தேடி கண்ணீர் சிந்திய கண்கள் மூடிகொண்டிருக்கின்றன; சர்வதேசம் பதிலளிக்குமா? - வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் கேள்வி
13 May, 2025 | 02:21 PM
காணாமல் ஆக்கப்பட்ட தமது உறவுகளை தேடி கண்ணீர் சிந்திய எத்தனையோ கண்கள் இன்று மூடி விட்டன. இன்னும் எத்தனை கண்கள் மூடப் போகின்றதோ தெரியாது. இதற்கு சர்வதேசம் என்ன பதில் சொல்லப் போகின்றது? என மன்னார் மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளை தேடும் குடும்பங்களின் சங்கம் கேள்வி எழுப்பியுள்ளது.
மன்னார் மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளை தேடும் குடும்பங்களின் சங்கத்தின் ஏற்பாட்டில் செவ்வாய்க்கிழமை (13) மதியம் மன்னார் பள்ளிமுனை பெருக்க மரத்தடி பகுதியில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் வாரத்தையொட்டி நினைவு கஞ்சி காய்ச்சி மக்களுக்கு வழங்கப்பட்டது.
இதன் போது கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே மன்னார் மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளை தேடும் குடும்பங்களின் சங்கம் இவ்வாறு தெரிவித்துள்ளது.
அவர்கள் மேலும் தெரிவிக்கையில்,
வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் ஒவ்வொரு தாய்மாரும் பாதிக்கப்பட்ட ஒவ்வொரு தமிழினமும் கொல்லப்பட்டு, அழிக்கப்பட்ட அந்த முள்ளிவாய்க்கால் மண்ணில் இரத்தமும், சதையும் சிந்தப்பட்டு அந்த நாளை கடந்த 16 வருடங்களாக ஒவ்வொரு தமிழ் உறவுகளும் நினைவு கூர்ந்து கஞ்சி காய்ச்சி வழங்கிக் கொண்டு இருக்கிறோம்.
இந்த கஞ்சி 16 வருடங்களுக்கு முன் ஒரு பிடி அரிசி கூட கிடைக்காமல் இருந்த அரிசியை வைத்து தண்ணீர் ஊற்றி உப்பும் இல்லாமல் அங்கிருந்த அமைப்புகள் குறித்த கஞ்சியை பொதுமக்களுக்கு வழங்கி உள்ளனர்.
அதில் சிலருக்குத்தான் இந்த கஞ்சி கிடைத்தது.வரிசையில் நின்று இந்த கஞ்சியை வாங்கி பசியை போக்குவோம் என்ற நேரத்தில் கூட கொடூர யுத்தம் முன்னெடுக்கப்பட்டது அந்த அரசாங்கத்தினால்.
கஞ்சிக்காக வரிசையில் நின்ற எத்தனையோ உறவுகள் கஞ்சி கிடைக்காமல் குண்டு வெடிப்பில் சிக்கி உயிரிழந்தனர்.இன்று அதை மறக்கவும் முடியாது.மன்னிக்கவும் முடியாது.
எம் இனத்திற்கு நடந்த கொடூரத்தை உலக நாடுகள் அனைத்தையும் பார்த்துக் கொண்டு தான் இருந்தது.இன்று வரையும் பார்த்துக் கொண்டு தான் இருக்கிறது.
இந்த கஞ்சியை நாம் வழங்குவதற்கு காரணம் தற்கால இளைய சமூகத்திற்கு 16 வருடங்களுக்கு முன் என்ன நடந்தது என்பது தெரியாது.
16 வருட கால இடைவெளியில் நிறைய நிறைய மாற்றங்கள் நிகழ்ந்துள்ளன. அவை எல்லாம் எம் சமுதாயத்தின் இளைஞர்களுக்கு தெரியப்படுத்த வேண்டும்.
ஒவ்வொரு வீட்டிலும் முதியவர்கள் சொல்லிக் கொடுக்க வேண்டும். முல்லைத்தீவு முள்ளிவாய்க்கால் என்ற இடத்தில் இன்று வரையும் இரத்தமும் சதையும் சிந்திக் கொண்டே இருக்கிறது.
அதனை ஒவ்வொரு வருடமும் மே மாதம் 18 ஆம் திகதி ஒவ்வொரு இறந்த ஆத்மாக்காகவும் நினைவு கூற வேண்டும்.
அது தான் நாம் எம் இனத்திற்கு செய்கின்ற பரிகாரம். அதை தான் இன்று காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளாகிய நாமும் நினைவு கூர்ந்து 16 வருடமாக அங்கே சென்று வந்து கஞ்சி காய்ச்சி நினைவு படுத்திக் கொண்டு வேதனைகளையும், சோதனைகளையும் தாங்கிக்கொண்டு ஒவ்வொரு உள்ளங்களும் இன்று வீதியில் நின்று போராடிக் கொண்டு, எம் உறவுகள் மீண்டும் எம்மிடம் திரும்பி வருவார்கள் என்ற நம்பிக்கையில் நாங்கள் காவல் நிற்கின்றோம்.
எம் கண்ணீர் என்று துடைக்கப் படுமோ தெரியாது. ஆனால் கண்ணீர் சிந்திய எத்தனையோ உறவுகளின் கண்கள் மூடி விட்டன.அந்த மூடிய கண்களுக்கு இந்த சர்வதேசம் என்ன பதில் சொல்லப் போகின்றதோ தெரியாது.
இன்னும் எத்தனை கண்கள் மூடப் போகின்றதோ தெரியாது. இதற்கிடையில் வீதியில் நிற்கும் உறவுகளாகிய எமக்கு நீதி கிடைக்க வேண்டும் என்றனர்.
தமிழர் இனப்படுகொலையின் போது இடம்பெற்ற கொடூரங்கள் மீண்டும் இடம்பெறாததை உறுதி செய்யவேண்டும் - அமெரிக்க காங்கிரஸ் உறுப்பினர் டொன் டேவிஸ்
16 May, 2025 | 03:37 PM
தமிழர் இனப்படுகொலையின் போது இடம்பெற்ற கொடூரங்கள் மீண்டும் இடம்பெறாததை உறுதி செய்யவேண்டும் என அமெரிக்க காங்கிரஸ் உறுப்பினர் டொன் டேவிஸ் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது.
இலங்கையில் தமிழர் இனப்படுகொலையின் 16 வருடத்தினை நான் நினைவுகூருவதற்காக நான் உரையாற்றுகின்றேன்.
,இன்றும் என்றும் நாங்கள் ஈழத்தமிழர்கள் சமூகத்தினர் ,உயிர்பிழைத்தவர்கள்,அவர்களுடைய குடும்பத்தவர்கள் ,தொடரும்; ஒடுக்குமுறைகளினை எதிர்கொண்டுள்ளவர்களுடன் ஐக்கியமாக இருக்கின்றோம்.
இலங்கை அரசாங்கத்திடமிருந்து அவர்கள் தங்கள் துயரங்களிற்கு நீதியை கோரும் வேளை நாங்கள் தமிழ் மக்கள் குறித்தும் அவர்கள் அனுபவித்த விடயங்கள் குறித்தும்கவனம் செலுத்தவேண்டும்.
அனைவரினது உரிமைகளையும் கௌரவத்தையும் மதிக்கும் அமைதி தீர்விற்காக நாங்கள் பரப்புரை செய்யவேண்டும்,
தமிழர் இனப்படுகொலையின் போது இடம்பெற்ற அட்டுழியங்கள் மீண்டும் இடம்பெறாததை உறுதி செய்யவேண்டும்.
மிகமோசமான துன்பத்தின் மத்தியில் தமிழ் சமூகம் வெளிப்படுத்திய மீள் எழுச்சிதன்மை நீதிக்கான அவர்களின் உறுதிப்பாடு அசைக்க முடியாத உணர்வு ஆகியவற்றி;ற்கான வெளிப்பாடாகும்.
நாங்கள் அனைவரும் ஈழத்தமிழர்களிற்கு ஆதரவாகயிருப்போம். நன்றி வீரகேசரி
ஆனையிறவு உப்பளத் தொழிலாளர்களின் அமைதி வழிப் போராட்டத்தை அடக்க நிர்வாகம் நடவடிக்கை - தொழிலாளர்கள் கவலை
16 May, 2025 | 11:34 AM
ஆனையிறவு உப்பளத் தொழிலாளர்கள் நியாயமான கோரிக்கைகளை முன்வைத்து அமைதியான முறையில் நடத்திவரும் கவனயீர்ப்பு போராட்டத்தை பொலிஸாரைக் கொண்டு நீதிமன்ற தடை உத்தரவைப் பெற்று அடக்குவதற்கு உப்பள நிர்வாகம் நடவடிக்கை எடுத்திருப்பது மிகுந்த கவலையளிக்கிறது என போராட்டத்தில் ஈடுபட்டிருக்கும் தொழிலாளர்கள் தெரிவித்துள்ளனர்.
கிளிநொச்சி ஆனையிறவு உப்பளத்தில் உற்பத்தி செய்யப்படும் உப்பினை வெளியிடங்களுக்கு கொண்டுசென்று பொதி செய்யும் செயற்பாட்டுக்கு எதிர்ப்பு தெரிவித்து உப்பளத்தின் தொழிலாளர்களால் நடத்தப்பட்ட போராட்டத்துக்கு நீதிமன்ற தடை உத்தரவு பெறப்பட்டுள்ளது.
இந்நிலையில், உப்பளத்துக்கு முன்பாக போராட்டம் நடத்தப்படும் இடத்தில் பொலிஸார் குவிக்கப்பட்டுள்ளனர்.
நீதிமன்ற தடை உத்தரவை சுட்டிக்காட்டி போராட்டத்தை கைவிடுமாறு பொலிஸார் தொழிலாளர்களிடம் அறிவுறுத்தி வரும் நிலையில், போராட்டத்தில் ஈடுபட்டுள்ள தொழிலாளர்கள் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளனர்.
அவர்கள் மேலும் கூறுகையில்,
இங்கு உற்பத்தி செய்யப்படும் உப்பினை இங்கே பொதியிடுங்கள். அம்பாந்தோட்டை, புத்தளம், மன்னாருக்கு கட்டி உப்பினை கொண்டு செல்வதை நிறுத்தி, ஆனையிறவில் பொதியிடுங்கள்.
தொழிலாளர்களுக்கு தினமும் வேலை வழங்க வேண்டும். தொழிலாளர்களை தரக்குறைவாக நடத்துவதை நிறுத்த வேண்டும். உப்பள முகாமையாளரை மாற்றம் செய்ய வேண்டும். தொழிலாளர்களுக்கான ஒரு தொழிற்சங்கத்தை இயங்க விடுங்கள், ரஜ சோல்ட் என்ற பெயரை ஆனையிறவு உப்பு என மாற்றம் செய்யுங்கள் போன்ற கோரிக்கைகளை முன்வைத்து அமைதியான முறையில் பந்தல் அமைத்து எமது கனயீர்ப்பு போராட்டத்தை முன்னெடுத்து வருகிறோம்.
இந்த கவனயீர்ப்பு போராட்டத்தை அடக்கும் வகையில் தவறான தகவல்களை பொலிஸார் ஊடாக நீதிமன்றின் கவனத்துக்கு கொண்டுசென்று எமது கவனயீர்ப்பு போராட்டத்தை தடுத்து நிறுத்த நடவடிக்கை எடுத்துள்ளனர்.
இதன் மூலம் இங்கிருந்து கட்டி உப்பை மூலப்பொருளாக அம்பாந்தோட்டை, மன்னார், மற்றும் புத்தளத்துக்கு எடுத்துச் செல்லும் நடவடிக்கையினை மேற்கொள்ளவுள்ளனர். அதை நாங்கள் வன்மையான கண்டிக்கிறோம் எனத் தெரிவித்தனர்.
நன்றி வீரகேசரி
No comments:
Post a Comment