மேனாள் தமிழ்மொழிக் கல்வி இயக்குநர்
மெல்பேண் ….. அவுஸ்திரேலியா
அன்னை தெரசா அரும்பணிகள் பலசெய்தார்.மரியதெரசா மாண்பு நிறை தமிழ் சுமந்து பணிசெய்ய எண் ணுகிறார். காரைக்காலில் 1955 ம் ஆண்டு பிறந்தார். கருவிலே திருவுடையாராய் பிறந்தவர் ஆதலால் கற் றவர் அவையில் முன்னிலை வகிக்கிறார். இவருக்குக் கற்பதைத் தவிர் வேறு எதுவுமே தெரியாது என் னும் அளவுக்கு கல்விப் புலத்தில் தலைநிமிர்ந்து நிற்கிறார் எனலாம்.
முக்கால் அடி கொண்டது வள்ளுவம். ஆனால் அது பெரும் பொக்கிஷமாய் மிளிர்கிறது. குறு முனியாக இருப்பவர் அகஸ்தியர். அகஸ்தியர் இறைவனிடமே தமிழ் கற்றார் என்பது ஆன்றோர் வாக்கு .தமிழின் கரு வூலமாய் அகஸ்தியரை அறிவுலகம் போற்றும் நிலையும் இருக்கிறது. உருவத்தால் குறளாயும் குறு முனி யாயும் விளங்கும் முனைவர் பேராசிரியர் மரியதெரசா தனக்குப் பின்னால் நீண்டதோர் வரிசையில் பல பட்டங்களை இணைத்து கற்றலில் உயர் நிலை எய்தி ஒளிவிட்டு பிரகாசித்து நிற்கிறார் எனலாம். எம்.ஏ , பி.எச்டி தமிழ் , எம்.ஏ , பி.எட் , ஹிந்தி , எம்.ஏ ஆங்கிலம் , என்று இவரின் பட்டங்கள் இவரின் மூலதனங் களாய் இருக்கின்றன.செந்தமிழும் ஆங்கிலமும் சிறப்பாக இந்தியும் சேர்த்த பல பட்டங்களால் மொழி யாளுமை மிக்கவராகவும் பட்டொளி பரப்பி நிற்கிறார்.
50 வகைகளில் நூல்களை ஆக்கி அளித்திருக்கிறார். புதுக்கவிதையின் நாயகியாய் தமிழகத்தில் மதிக்க ப்படுகிறார். அத்துடன் மரபுக் கவிதைகளையும் எழுதிக் குவித்திருக்கிறார். ஆய்வுக் கட்டுரைகள் பல இவ ரின் ஆளுமையினைப் பறைசாற்றி நிற்கின்றன. இதுவரை 300 நூல்களை தமிழுலக்கு வழங்கி இருக்கி றார் என்பது சாதாரண விடயம் அல்ல. இது ஒரு இமாலய சாதனை என்றுதான் எண்ணிட வைக்கிறதல் லவா ! இவரைத் தமிழகத்தின் " சாதனைப் பெண்மணி " என்றுதான் வியந்து வாழ்த்த வேண்டும். 151 விருது கள் இவரை நாடி வந்திருக்கின்றன.பல அமைப்புகள் , கல்லூரிகள் , தமிழ்ச்சங்கள் , இவருக்கு விருது களை வழங்கித் தாமே பெருமையைத் தேடியிருக்கின்றன என்றுதான் எண்ண வேண்டியிருக்கிறது.
பல கருத்தரங்களில் பன்னாடுகளில் பங்கு கொண்டு உரையாற்றி ஆராய்ச்சிக் கட்டுரைகளை வழங்கி இருக்கிறார்.இவரின் படைப்புகள் பதினெட்டுத் தலைப்புகளில் பட்டப் படிப்புக்குத் தலைப்புக்களாகத் தேர்ந் தெடுக்கப்பட்டிருகின்றன. இவரின் கவிதை நூல்களில் ஆய்வுகள் நடத்தப் பட்டிருக்கின்றன.கல்லூரிப் பாட நூலில் இவரது ஆக்கங்கள் சேர்க்கப் பட்டிருக்கின்றன.இவரைப்பற்றி பல கட்டுரைகள் பலரால் பல சஞ்சி கைகளில் வரையப்பட்டிருகின்றன. ஊடகங்கள் பலவற்றில் இவரின் நேர்காணல்கள் இடம் பெற்றிருக் கின்றன.பல இதழ்கள் இவரைப் படைப்புக்களை வெளியிட்டுப் பெருமைப் பட்டிருக்கின்றன.தொகுப்பு நூல் கள் என்றவகையிலும் இவர் தன்னாளுமையினை வெளிப்படுத்தியிருக்கிறார். இவரின் நூல்கள் பலவற் றுக்கு விருதுகளும் கிடைத்திருக்கின்றன. அதுமட்டுமல்ல பல இதழ்கள் முகப்போவியமாகவும் வெளியி ட்டுப் பெருமைப் படுத்தியும் இருக்கின்றன.
பொள்ளாச்சி N. G. M கல்லூரி இளங்கலை ப் பாடத்திட்டத்தில் , மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்து பாட நூலில் , தஞ்சை தமிழ்ப் பல்கலைக் கழகத்தில் , இவரது கவிதைகள் இடம் பெற்றிருக்கின்றன என்பது குறிஅப்பிடத் தக்கதாகும்.
ஒரே மேடையில் 4.3.2018 ல் - 40 நூல்கள் , 30.3.22 ல் - 100 நூல்கள் , 23.4.23 ல் - 50 நூல்கள் 29.924 ல் -300 ஆவது நூலை வெளியிட்டுச் சாதனைப் பெண்ணாய் பேரா. முனைவர். மரிய தெரசா திகழ்கிறார்.
இவர் ஆசிரியராகவும் பேராசிரியராகவும் இருந்து தற்பொழுது ஓய்வு பெற்றிருக்கிறார். 11.6 23. அன்று இவரது 223 நூல்கள் 23 மணி நேரம் தொடர்ந்து வாசிக்கப்பட்டு உலக சாதனை ஆக்கப்பட்டது. 12.4.25 இல் 133 மாணவர்கள் 133 அதிகாரங்க ளையும் அட்டையில் எழுதி திருக்குறள் பேரணி இவர் தலைமையில் நடத்தப்பட்டு All india book of records ஆக்கப்பட்டது. என்பது குறிப்பிடத் தக்கதாகும்.
திருக்குறள் மனன வகுப்புகள் நடத்துகிறார். சாதிகள் இல்லை , நெகிழி பைகள் மண்ணுக்கு கேடு , யாவ ரும் மண்ணின் மைந்தர்கள்ம் என்ற பதாகைகள் கையில் கொடுத்து புகைப்படம் எடுத்து இவர் வெளியிடும் தன் நூலின் பின் அட்டையில் வெளியிடுத்தி - நாளைய சமுதாயத்தை இவ் வழியில் நல் வழிப்படுத்தியும் இயங்கிக் கொண்டுருக்கிறார். முன்னூறு நூல்கள் வெளியிட்ட பின்னும் - ஓயாமல் உழைத்து 40 நூல்களை விரைவில் வெளியிட இருக்கிறார் என்பது சாதனையின் உச்சம் அல்லவா !
நிமிர்ந்த நடையும் நேர் கொண்ட பார்வையும் மிக்கவளாய் பெண் வர வேண்டும். சட்டங்கள் ஆள்வதும் பட்டங்கள் ஆள்வதும் பெண்களாய் அமைய வேண்டும் என்று ஆராக் காதல் கொண்டார் எங்கள் புரட்சிக் கவி பாரதி. பாரதியின் சிந்தனைக்கு ஏற்ப முனைவர் மரியதெரசா வாழ்வில் மலர்ந்திருக்கிறார் என்றே கருதுகிறேன். 2020 ம் ஆண்டில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் இடம் பெற்ற இரண்டாவது உலகத் திருக்குறள் மாநாட்டில் இந்தப் புதுமைப் பெண்ணை , புரட்சிப் பெண்ணை சந்திக்க தமிழன்னை எனக்கு துணை புரிந்தாள். அப்பொழுது இவரின் தோற்றமும் , இவரின் பணிவான நடத்தையும் , எதுவுமே தெரியா தவராய் தன்னைக் காட்டிக் கொண்ட எளிமையையும் இப்போது எண்ணிப் பார்க்கையில் - எனக்கு பெரு வியப்பாயும் , மலைப்பாகவுமே இருக்கிறது. " பணியுமாம் என்றும் பெருமை " என்பதை பேரா. முனைவர் மரிய தெரசா நிரூபிப்பவராய் நான் உணர்ந்தேன். தமிழுக்காகவே வாழ்வு என்று தீர்மானித்த படியால் இந் தப் புதுமைப் பெண் இல்லறத்தையே நாடவே இல்லை. எழுதுவதும் , புத்தகங்களை வெளியிடுவதும் , உரைகள் ஆற்றுவதும் , கற்பவர்களை ஆற்றுப் படுத்துவதுமே பெரும்பணி என்று தன் வாழ்க்கைப் பயணத்தை தொடருகிறார்.
பேராசிரியராய் இருந்து பல மாணவச் செல்வங்களை உருவாக்கிய தமிழ்ச் செம்மல் முனைவர் மரிய தெரசா அவர்கள் நலமோடும் வளமோடும் நிறைவோடும் தமிழுலகில் நீண்டநாள் வாழ்ந்து தமிழ்ப் பணிகள் ஆற்றிட அகமார வாழ்த்தி மகிழ்கின்றேன். இறையருள் நிறையட்டும். வாழ்க வளமுடன்
![image4.jpeg]()
![image5.jpeg]()
![image6.jpeg]()
![image7.jpeg]()
![image8.jpeg]()
![image9.jpeg]()
![image10.jpeg]()
![image11.jpeg]()
![image12.jpeg]()
![image14.jpeg]()
![image15.jpeg]()
![image16.jpeg]()
![image18.jpeg]()
<image1.jpeg>
No comments:
Post a Comment