சிட்னியில் இலக்கிய சந்திப்பு 05-11-2022 ஆவணப்படக்காட்சி - ஐந்து நூல்களின் அறிமுகம்

 அவுஸ்திரேலிய தமிழ் இலக்கிய கலைச்சங்கத்தின் ஏற்பாட்டில், 


எதிர்வரும் 05 ஆம் திகதி  ( 05-11-2022 ) சனிக்கிழமை மாலை   4-00 மணிக்கு சிட்னியில் Toongabbie Community Centre (244 Targo Rd, Toongabbie NSW 2146 )  மண்டபத்தில்  நடைபெறவிருக்கும் இலக்கிய சந்திப்பு நிகழ்ச்சியில் கலந்து சிறப்பிக்குமாறு,  கலை, இலக்கிய ஆர்வலர்களையும் ஊடகவியலாளர்களையும்  சங்கம் அன்புடன் அழைக்கின்றது.

           இந்நிகழ்வு சங்கத்தின் உறுப்பினர்  சட்டத்தரணி கலாநிதி ( திருமதி )  சந்திரிக்கா சுப்பிரமணியன் தலைமையில் நடைபெறும்.

அண்மையில் இலங்கையில் மறைந்த மூத்த எழுத்தாளர்


தெளிவத்தை ஜோசப் அவர்களை நினைவுகூர்ந்து மௌனம் அனுஷ்டிக்கப்படும்.  அதனைத் தொடர்ந்து எழுத்தாளர் திருமதி கனகா. கணேஷின் வரவேற்புரையுடன் நிகழ்ச்சிகள் ஆரம்பமாகும்.

இந்நிகழ்வில் அவுஸ்திரேலிய தமிழ் இலக்கிய கலைச்  சங்கத்தின் வரலாற்றுச்சுவடுகள் ஒளிப்படத் தொகுப்பும்  காண்பிக்கப்படும்.

                                         வாசிப்பு அனுபவப்பகிர்வு

மெல்பனில் மறைந்த வானொலி ஊடகவியலாளரும் எழுத்தாளருமான ( அமரர் ) சண்முகம் சபேசனின்  காற்றில் தவழ்ந்த சிந்தனைகள்   ( கட்டுரைகள் )  நூல் பற்றி எழுத்தாளர் திரு.  ஐங்கரன் விக்கினேஸ்வராவும் -  நாட்டியக் கலாநிதி கார்த்திகா கணேசரின்  இந்து மதத்தின் பரிணாமச் சிந்தனைகள் ( கட்டுரைகள் )  நூல் பற்றி திரு.  திருநந்தகுமாரும் -  எழுத்தாளர் நடேசனின்  அந்தரங்கம்                 ( சிறுகதைகள்  )  நூல் பற்றி கவிஞர்  திரு. செ. பாஸ்கரனும் -  எழுத்தாளர் முருகபூபதியின் கதைத்தொகுப்பின் கதை                  ( சிறுகதைகள் ) நூல் பற்றி எழுத்தாளர் திரு.  கானா. பிரபாவும் -  

கனடாவிலிருந்து வருகை தந்துள்ள எழுத்தாளரும் ஆசிரியருமான  ஶ்ரீரஞ்சனியின்   ஒன்றே வேறே                                             ( சிறுகதைகள் ) நூல் பற்றி கவிஞரும், வானொலி ஊடகவியலாளருமான சௌந்தரி கணேசனும் தத்தமது வாசிப்பு அனுபவங்களை சமர்ப்பித்து உரையாற்றுவர்.

 நூல்களின் ஆசிரியர்கள் – வெளியீட்டாளர்களின் ஏற்புரையைத் தொடர்ந்து கலந்துரையாடலும் தேநீர் விருந்தும் இடம்பெறும்.

அனைவரும் அன்புடன் அழைக்கப்படுகின்றனர்.  

                        atlas25012016@gmail.com                                   

       

 

 


No comments: